Headlines

சிங்கப்பூரில் தலை சிக்கிய நிலையில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள் ! (வீடியோ இணைப்பு)

சிங்கபூரின் ஜோராங் கிழக்கு தெரு கவுசிங் போர்டில் 371 வது வீட்டில் ஒரு பச்சிளங்குழந்தை 2 வது மாடியின் கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் முதுகு பின் பகுதி கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல்…

Read More

மாயமான மலேசிய விமானத்தின பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக தகவல்

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கிடப்பதாக விமான போக்குவரத்து துறை வல்லுநர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்370) திடீரென ரேடார் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பில் இருந்து விடுபட்டு மாயமாக மறைந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல் போனதால் அது இந்தியப்…

Read More

உலக அரசுகள் வேற்று கிரகவாசிகளை ரகசியமாக மறைவிடத்தில் வைத்து உள்ளன- கனடா முன்னாள் பாதுகாப்பு மந்திரி

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு,…

Read More

உதய கம்மன்பில, ஞானசார தேரர் உட்பட சிலருக்கு எதிராக பிரபல சட்டத்தரணி குழு பொலிஸில் முறைப்பாடு

இன்று காலை 11 மணியளவில் பிரபல சட்டத்தரணி குழு ஒன்று,  மாற்றியமைக்கப்பட்ட தேசியக்கொடியை ஏந்தி போராட்டம் செய்த உதய கம்மன்பில, ஞானசார தேரர், மதுமாதவ அரவிந்த, மற்றும் சிலருக்கு எதிராக கறுவாத்தோட்ட போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளனர். தேசியக்கொடியை மாற்றி அமைப்பது சட்டக் கோர்வை படி தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நல்லாட்சியை ஏற்படுத்த மைத்திரி சிறப்பாக செயலாற்றுகின்றார்: நோர்வே தூதுவர்

ஜனாதிபதிக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையில் இடையில் இன்று நடந்த  கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 100 நாட்கள் செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படமைக்கு நோர்வே தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தாகவும், பதிலுக்கு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் முன்னெடுக்கும் அர்ப்பணிப்புக்களை ஒருபோதும் மாற்றப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பில் கூறியுள்ளார். இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் வழங்கும் ஒத்தாசை மற்றும் நாட்டில் சமாதானத்தை கொண்டு வருவதற்கு…

Read More

மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து, 3 வயது அப்துர் ரஸ்ஸாக் வபாத்

மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி உமாராபாத் மீள்குடியேற்றக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் முஹம்மது அசீம் அப்துர் ரஸ்ஸாக் (வயது 3) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். இந்நாட்களில் பெய்த மழை காரணமாக தில்லையடி உமாராபாத் கிராமத்தில் அமைந்துள்ள உயிரிழந்த சிறுவனின் வீட்டிலுள்ள பணிவான பழைய கிணறு ஒன்றும் நீர் நிரம்பியிருந்துள்ளது. நேற்று மாலை 6 மணியளவில்…

Read More

‘நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட, எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினர்’

சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தி அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினராகவே இருக்கலாம்  என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். முப்பது வருடக்கால யுத்தத்தின் பின்னர் எமது நாட்டில் மூவின மக்களும் சுதந்திரமாக வாழ்ந்திடும் இத்தருணத்தில் மீண்டும் சில இனவாத சக்திகளை பயன்படுத்தி மீண்டும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள…

Read More

இனவாதத்தை முறியடிக்க வேண்டும், சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கவலை

இனவாதங்களைத் தூண்டும் வகையிலான செய்திகளையும் கட்டுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் சந்ததியினர் மத்தியில் பிரபல்யம் பெற்று வரும் நிலையில் இனவாதங்களை தூண்டும் வகையில் செய்திகளை பிரசுரிப்பது பாதிப்பை ஏற்படுத்துமென்றும் அவர் கூறினார். அரசாங்க ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை நேற்று சந்தித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அரசாங்க ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில்…

Read More

நாடாளுமன்றில் நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானம் அருந்தப்பட்டதா

நாடாளுமன்றில் நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானம் அருந்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. அண்மையில் நாடாளுமன்றிற்குள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க்ள தொடர் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். அன்றைய இரவை அவையிலேயே கழித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமையை எதிர்த்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த 20ம் திகதி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்து. குறித்த தினத்தில் மதுபானம் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டு அருந்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது…

Read More

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 18 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நீதிமன்றை உத்தரவினை மீறிய 18 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழப்பெரும காமினி லொக்குகே விமல் வீரவன்ச பந்துல குணவர்தன மற்றும் முரத்தட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 18 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை மீறிச் செயற்பட்டதாக குறித்த 18 பேர் மீதும் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.

Read More

மக்களின் அங்கீகாரமற்ற எந்த தீர்வினையும் எமது கட்சி ஆதரிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தேர்தல் திருத்தம் தொடர்பில் உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி ஆழமாக ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் 100 நாட்களுக்குள் இதனை நடை முறைப்படுத்த அளுத்தம் கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக கூறியுள்ளதாகவும் கூறினார். . அரசாங்கத்தில் அங்கத்துவம் கொண்டுள்ள சிறுபான்மை கட்சிகள் இந்த  துரித தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக வெளியான செய்தி…

Read More

மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடியை நானும் ஏந்தியிருந்தேன்: உதய கம்மன்பில

மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடியை நானும் ஏந்தியிருந்தேன் எனவும் ஆணைக்குழுவிற்கு எதிரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகளை சிலர் கொண்டு வந்திருந்தனர். அவற்றில் சிறிய கொடிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அத்துடன் ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு பொது இடம் ஒன்றில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோர் பற்றி அதன் ஏற்பாட்டாளர்களுக்கு முழுமையான பொறுப்பை ஏற்க முடியாது. எவ்வாறாயினும், நாட்டின் தேசிய அடையாளமான தேசியக் கொடி தனது தலைமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு…

Read More