Headlines

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 4 இல் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Read More

இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புக்கள் அதிகம்

நாட்டில் பரவிவரும் இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.வைரஸ் தொற்று அதிகரிக்கும் நிலையில், நிமோனியா ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அமைச்சின் தொற்றுநோய், ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன கூறினார். இந்த வைரஸ் தொற்று ஏற்படுமிடத்து, தடிமன், காய்ச்சல், தொண்டை வலி மற்றும் தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.கொழும்பு, பதுளை, கேகாலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இன்ப்ளூவன்சா ஏ.எச்.1…

Read More

மலேசிய காடுகளில் மனித புதைகுழிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தங்கள் நாட்டில் எல்லைகளில் எந்த விதமான சட்டவிரோத மனித முகாம்களும் கல்லறைகளும் இல்லை என்று மலேசிய அரசாங்கம் இதுவரை கூறி வந்தது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள படாங் பெசார் மற்றும் வாங் கெலியன் பகுதிகளில் உள்ள காடுகளில் ஏராளமான அகதிகளில் கல்லறை இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக மலேசிய…

Read More

ஆந்திராவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு நேற்று மட்டும் இவ்விரு மாநிலங்களில் 165 பலியானதாக தெரியவந்துள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 72 பேர் பலியாகினர். ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 93 அதிகரித்துள்ளது. நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கிடைத்த தகவலின்படி, இரு மாநிலங்களிலும் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ தொட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது….

Read More

தொடர்ந்து தூங்கும் மிஹின் லங்கா விமானி.. இது மூன்றாவது முறை

மிஹின் லங்கா பயணிகள் விமானத்தில் பணிபுரியும் இந்திய விமானி மீண்டும் ஒருமுறை தமது உறுதிமொழியை தகர்த்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா விமானியான கப்டன் வாஹ், ஏற்கனவே இரண்டு தடவைகள் விமான ஓட்டத்தின் போது நித்திரை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார். இதன்பின்னர் அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கப்பட்டார். இந்தநிலையில் தாம் இனிமேல் விமானப் பயணங்களின் போது நித்திரை செய்ய மாட்டேன் என்று அவர் எழுத்துமூலம் உறுதியளித்திருந்தார். எனினும் பங்களாதேஸ் – கொழும்புக்கு இடையிலான சேவையின் போது…

Read More

புனித கஃபாவை அழிக்கும் முயற்சியில் அப்ரஹா மன்னன் பயணித்த பாதை சவூதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!!

சவூதி அரேபியாவின் King Saud பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களான இளைஞர் குழு ஒன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்ரஹா மன்னனின் யானைப்படை புனித கஅபாவை அழிப்பதற்காக பயன்படுத்திய பாதை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இந்த யானைப்படை தொடர்பில் புனித அல்-குர்ஆன், 1௦7 ஆம் அத்தியாயத்தில், சுருக்கமாகவும் யானைபடைக்கு நேர்ந்த கதியை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் பதினான்காம் நூற்றாண்டின் குர் ஆன் ஆய்வாளரான இப்னு கதீர் என்பவர் குறிப்பிடுகையில் அப்ரஹா அல் ஆஸ்ரம் (Abraha Al-Ashram)…

Read More

ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவை ஜுன் மாதம் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

குவைத் அரசின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி மன்சூர் என். ஜப்ராஹ் :பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு.

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்துவதற்கு குவைத் அரசாங்கத்தின் பிரநிதியிடம் பிரதியமைச்சர் அமீர் அலி பேச்சுவார்ததை. குவைத் நாட்டில்  இருந்து கடந்த வாரம் இலங்கை வந்திருந்த குவைத் அரசின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி மன்சூர் என். ஜப்ராஹ் அவர்களை நேற்று முன்தினம் வீடமைப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். இச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கைகளை பிரதியமைச்சர் விடுத்துள்ளார். அத்துடன் கடந்த யுத்த காலத்திலும் சுனாமி…

Read More

வில்பத்து விவகாரம் தொடர்பில் இன்று TNL ஜனஹன்ட நிகழ்வில் றிஷாத் பதியுதீன் பங்கேற்பு

வில்பத்து விவகாரம் தொடர்பில் சிங்கள சமகத்தில் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை ஓரளவாவது நீக்கிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கும் பொருட்டு TNL தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜனஹன்ட நேரடி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இன்று திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு குறித்த ஜனஹன்ட நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அம்பாறை மாவட்டம் தீகவாபி தொடர்பில் அன்று சிங்கள மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சைக்கு குறித்த தொலைக்காட்சி ஊடாகவே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம்…

Read More

இனியும் பாலஸ்தீனம் மீது தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் – சவூதி மன்னர்

4 நாட்களுக்கு முன்பு சவுதி மன்னர் தலைமையில் நடந்த அரேபிய கூட்டமைப்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. அதில் முக்கியமானது இனி இஸ்ரேலை அரேபிய தேசங்கள் ஆதரிக்க கூடாது. இஸ்ரேலிய தீவிரவாதிகளின் செயல் நாம் வன்மையாக கண்டிப்போம்! பாலஸ்தீனத்தை காப்பாற்றுவது நம் கடமை இனியும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் என தெரிவித்த பிறகு இன்று சவுதி அரேபியாவில் உள்ள மஸ்ஜிதில் இஸ்ரேலிய தீவரவாதி ஒருவன் தன உடம்பில் வெடி குண்டு…

Read More

ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் ஒரு புதிய மொபைல் சிம் !

ஏற்கனவே டுவல் சிம் 4 சிம்னு பல ஃபோன் வந்தாலும் ஒரு ஃபோன்ல ஒரு நேரத்தில ஒரு சிம் தான் வேலை செய்யும்னு எல்லோருக்கும் தெரியும் ஏன்னா ஒவ்வொரு சிம்மும் ஒரே நெட்வெர்க் அல்லது வேறு வேறு நெட்வெர்க்காக இருந்தாலும் ஃபோன் முழுதாக பயன்படுத்த ஒரு கனெக்க்ஷன் மட்டுமே சாத்தியமே. இதை நன்கு ஆய்வு செய்த பிளக்பெர்ரி நிறுவனம் ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய மொபைல் சிம் ஆர்க்கிடெக்ச்சர் முறையை கன்டறிந்துள்ளது….

Read More

எங்களுடைய உரிமையைவிட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை – றிஷாத் பதியுதீன்

அண்மைக்காலமாக இந்தநாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி,பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக் கூட நாங்கள் பௌத்த சமயக் கோட்பாட்டுக்கு அநியாயமிழைக்கின்ற ஒரு சமூகமாக இந்தநாட்டில் இருக்கின்ற 90 விகிதமான சிங்கள மக்கள் மத்தியிலே காட்டுகின்ற வகையில் இலங்கையில் இருக்கின்ற சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு சதிசெய்து கொண்டிருக்கிறது. அவை மட்டுமல்ல இந்தப் பிரதேசங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருகாட்டுப் பிரதேசமாககெசட் பண்ணப்பட்டுள்ளது. இதில் சோந்தக்…

Read More