Headlines

வெள்ளை மாளிகைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை பத்திரிகையாளர்கள் அறையில், அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ் எர்னஸ்ட் நிருபர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்நாட்டு சட்ட அமலாக்க பிரிவுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பத்திரிகையாளர்களின் அறையில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த ரகசிய பிரிவு போலீசார் நிருபர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஈசன்ஹவர் கட்டிடத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்….

Read More

நாஜி ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட 102 வயது பெண்மணிக்கு பி.எச்.டி பட்டம்

ஜெர்மனியை சேர்ந்தவர் இன்ஜ்போர்க் ஸில்ம் ரபோபோர்ட். தற்போது இவருக்கு 102 வயது ஆகிறது. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணரான இவர் கடந்த 1938–ம் ஆண்டில் ‘பி.எச்.டி.’ ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொண்டார். அப்போது ஜெர்மனியை ‘நாஜி’ படைகள் ஆட்சி செய்தன. இவர் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரது முயற்சி தடைபட்டது. இதற்கிடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் அங்கு நாஜிக்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இவர் தொடர்ந்து பி.எச்.டி. பட்டம்…

Read More

சட்டவிரோத மரங்கள் கைப்பற்றப்பட்டன

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பொண்டுகல்சேனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் முப்பது முதுரை மரங்களை வட்டார வன இலாகா அதிகாரிகள் நேற்று (09) பிற்பகல் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார். புலிபாந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கல் வெட்டப்படுவதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் நேற்று  (09) புலியாந்தகல், மூக்கர்ரகல், பொண்டுகல்சேனை போன்ற பகுதிகளுக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பொண்டுகல்சேனை பகுதியில் இம்…

Read More

மனிதனின் கருவறை இரகசியங்கள் (படங்கள் இணைப்பு)

ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேனர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்ப்பணித்து குழந்தை கருவுறல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய புகைப்பட கருவிகள் கொண்டு நேரடியாக கருவறையில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் கருவறை புகைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் புகைப்படங்கள்

Read More

உலக தராதர அங்கீகார தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)

இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர அங்கீகார தினத்தினை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை தராதர அங்கீகார சபை சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட் நிகழ்வில்;கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொன்டபோது.

Read More

சிங்கபூரிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது

இலங்கையிலிருந்து சிங்கபூரிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்,அதன் பெறுமதி 53 இலட்சத்து 38 ஆயிரத்து 136 ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது – தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த  பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய குர்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான  வட்டாரங்கள் தெரிவித்தன. நாயினதீவு பிரதேசத்தைச்  …

Read More

“பிரதமருக்கு எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி

“எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தைக் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி பார்க்கும்போது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது…

Read More

ஜெரூசலத்தை இஸ்ரேலாக ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இஸ்ரேலால் அக்கிமிக்கப் பட்ட, பலஸ்தீன பூமியான  ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு சட்டம் ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அவையால் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டபோதும் அது சர்வதேச கொள்கை தொடர்பில் தீர்மானிக்கும் ஜனாதிபதியின் உரிமையை மீறுவதாக நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலஸ்தீன பூமியான ஜெருசலத்தை, இஸ்ரேலாக அங்கீகரிக்கும் இந்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும்…

Read More

அக்­கு­ற­ணைத்­ தொ­கு­தி­யிலே போட்டியிடுவேன் – காதர் ஹாஜி

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரி­வித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்­துல்­ காதர் பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டாது ஏழை பள்­ளி­வாசல் பணி­யா­ளர்கள் போன்­றோ­ருக்கு பகிர்ந்­த­ளிக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்தார். நேற்­றுக்­காலை கொழும்பு நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் இவ்­வ­ருடம் ஹஜ் கோட்டா ஆகக்­கூ­டி­யது 50ஆகவும் ஆகக் குறைந்­தது 15ஆகவும் ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஓர் சிறந்த முறை­யாகும்….

Read More

“ஷரியா வங்கி முறையை தடை செய்” -பொதுபல சேனா

இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அந்த அமைப்பின் தலைவர் திலந்த வித்தானகே இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்லாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஷரியா வங்கி இலங்கையில் வேகமாக பரவி வருகின்றதாக கூறிய வித்தானகே இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார். பொருளாதார நடவடிக்கைகளுக்கு…

Read More

முஸம்மில் இனவாதக் கருத்துக்களை உடன் நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஸ்ரப்கான் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு தம் எஜமானர்களின் ஊது குழலாக செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்குவதையும், முஸ்லிம் சமூதாயம் தொடர்பாக இனவாதிகளின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கின்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஹம்மட் முஸம்மிலுடைய தலைவர் விமல் வீரவன்சவின் முஸ்லிம் விரோத கருத்துக்களை…

Read More