அமீர் அலி வேட்பு மனு தாக்கல்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொத்துவில் SSP அப்துல் மஜீத் அ.இ.ம.கா இன் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக வேட்பாளர் நியமனப்பத்திரத்தை சற்று முன்னர் கையளித்தார். வேட்பாளர் நியமனம் செய்வதற்கு முன்னர் இடம்பெற்ற துஆப்பிராரத்தனையில் கல்வியலாளர்கள் உலமாக்கள் ,அகில இலங்க மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர், மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
புறகஹதெனிய பொல்வத்தை கிராமத்தில் வசிக்கும் சகோதரர் ஹசன் அவர்களின் புதலவர் முஹம்மது ஹசன் ராஹீத் என்பவருக்கு வாய் பேசவும் காது கேட்வும் முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 2 ½ வயதுடைய இந்தச் சிறாரின் வைத்திய செலவுக்காக ரூபா 28 இலட்சம் ரூபா செலவாகுமென வைத்திய நிபுணரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது இந்தச் சிறாரின் பெற்றோர்கள் இந்த செலவை ஈடுசெய்ய முடியாமல் மிகவும் கஷ்ட நிலைக்குப் பின்தள்ளப்பட்டள்ளனர். இந்த வைத்திய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு தாராள…
ஐ.தே.கட்சியில் கொழும்பில் கேட்கும் வேட்பாளர்கள் விபரம். 1.ரணில் விக்கிரமசிங்க 2.ரவி கருணாநாயக்க 3.விஜயதாச ராஜபக்ச 4.ஹர்ஷா த சில்வா 5.ரோசி சேனாநாயக்க 6.எரான் விக்கிரமரட்ன 7.சுஜீவ செனசிங்க 8.மஞ்சு ஸ்ரீ அரங்கள 9.நிரோஷன் பாதுக்க 10.முஜிபுர் ரஹ்மான் 11.எஸ்.எம்.மரிக்கார் 12.உபுல் ஷாந்த சன்னச்கல 13.உதார ரத்நாயக்க 14.ஜயந்த த சில்வா 15.சுனேத்ரா ரணசிங்க 16.ஸ்ரீநாத் பெரேரா 17.லேனார்ட் கருணாரத்தன 18.மனோ கணேசன் 19.எஸ்.குகவார்த்தன் 20.பெரோசா முசம்மில் 21.ஹிருனிகா பிரேமசந்திர 22.சம்பிக்க ரணவக்க
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விமல் வீரவம்ச மற்றும் டினேஸ் குணவர்த்தன ஆகியோர் இவருடன் சென்றனர். நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுசில் பிரேமஜெயந்த இன்று காலை பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து திரும்பினார்.
சற்று முன் வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமானறிஷாத் பதியுதீன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் யஹ்யாபாய் மற்றும் ஜெயதிலக ஆகியோர் றிஷாத் பதியுதீனுடன் வருகை தந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படம்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார். கடந்த காலங்களில் ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புரிந்த சிராஸ் மீராசாஹிப் மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளார்.
அஷ்ரப் ஏ சமத் வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தோ்தல் குதிக்கின்றனா். இந்த வேட்பாளா் பட்டியலில் அ.இ.ம.கா. முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளா், தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளா்கள் இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனா். இதேவேளை, அ.இ.ம.கா, ஜ. தே.கட்சியின் யாணைச்…
– அனா – மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு தங்கலாலான அனைத்து உதவிகளையும் தாங்கள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம் என்று வாழைச்சேனை ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சரமான றிஸாட் பதியுதீன் மற்றும் உயர் பீட உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை ஹைராத் ரான்போட் நிருவாகத்திற்கும் அகில இலங்கை…
ஏறாவூர் தௌஹீத் ஜமாத்திதிட்குரிய -மீராகேணி – பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசல் மீது நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேட்கொள்ளப்பட்டுள்ளது. ஏறாவூர் சதாம் ஹுசையின் பிரதேசத்தில் அமைந்துள்ள – அரபிக் கலாசாலை ஒன்றில் இருந்து வந்தவர்களே இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அவர் தமக்கு பின்னால் உள்ள சூழ்ச்சிகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கினாலும் மைத்திரிபால சிறிசேன, பொதுத்தேர்தலில் எந்தக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் என்று ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி உதயமாகியுள்ளது. ஐ.தே.கட்சியை பிரதானமாக கொண்ட இக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய , சிறிலங்கா சுதந்திர கட்சியிலுள்ள மகிந்தவிற்கு எதிரானவர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாதுளுவாவே சோபித தேரரின் சமூக நீதிக்கான அமைப்பு உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களும் உள்ளடங்குகின்றது. ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கியதேசியக்…