Headlines

காணாமல் போன மகிந்தவின் மோதிரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த மோதிரம் ஒன்று நேற்று (28) காணாமல் போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கல்யாண வைபவம் ஒன்றில் வைத்து இந்த மோதிரம் காணாமல் போனது. இந்தநிலையில் கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு தெரியாத வகையில் முழுமையாக தேடுதல்கள் நடத்தப்பட்டன. மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்த பின்னர் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போதே விடயம் அனைவருக்கும் தெரியவந்தது. எனினும் குறித்த மோதிரம் சில விநாடிகளில் ஹோட்டல் பணியாளரால் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்த இடம்ஒன்றில்…

Read More

சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிசம்பர் முதலாம் திகதி

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Read More

ஜனாதிபதி பிரான்ஸ் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ள இன்று பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் உலகின் பொது இணக்கப்பாடு, சட்டரீதியிலான கடப்பாடுகள் மற்றும் அதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்தல் ஆகியன இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும். காலநிலை மாற்றம் தொடர்பில் 1992 ஆம் ஆண்டு ஐ.நா சபையினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இடம்பெறும் 21ஆம் மாநாடு இதுவாகும். இம் மாநாட்டில் ஐ.நா சபையின் 80…

Read More

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியமையை மன்னிக் முடியாது ; அமைச்சர் றிஷாத் காட்டம்

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது, பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு, முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும். இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்புதாரிகள் யார்…

Read More

இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்: கூட்டு எதிர்க்கட்சி

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர். இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம். பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த…

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு நோபல் பரிசு?

மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆலோசனை இடம்பெற்று வருகின்றதென அமைச்சர் ஜோன் அமரதுங்க தகவல் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கருத்தொருமைப்பட்டு தேசிய அரசு அமைக்கப்பட்டு நாட்டின் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் எமக்கு இதுவரை காலமும்…

Read More

தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம்

கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக்…

Read More

மனுக்குலத்தின் தாயகம் இலங்கை; நுால் வெளியீடு

– அஸ்ரப் ஏ சமத் – சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள். மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் இதனை நாம் சஹீட்…

Read More

வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை! BREAKING NEWS

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளர்த்து. இதன் படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வரையும் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்து இருந்த அதேவேளை சற்று முன்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக…

Read More

ரஷிய மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை

சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. ரஷிய விமானம் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால், ரஷியா இதை மறுத்து வருகிறது. இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. துருக்கிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். இதன் முதல் கட்டமாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு செய்துள்ளது….

Read More

கல்விக்கான நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது! அனுரகுமார

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது என்று அனுரகுமார திசாநாயக்க விமர்சனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அனுரகுமார திசாநாயக்க, அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 5.41 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறைச்சாத்தியமற்றது. எனினும், கல்விக்காக முன்னுரிமை கொடுக்கப்படுவது அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று…

Read More

கொண்டையாவுக்கு ஐந்து கோடி ரூபா நட்டஈடு வேண்டுமாம்!

ஐந்து கோடி ரூபா நட்டஈடு கோரி கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாந்த உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த நஷ் ஈடு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமே கோரப்பட்டுள்ளது. மினுவன்கொட கொட்டாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சேயா செவ்தம்னி என்ற ஐந்து வயது சிறுமி கொலையுடன் எவ்வித தொடர்பையும் பேணாத தம்மை சில நாட்கள் தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப்…

Read More