Headlines

ஆன்மீக வளர்ச்சியே ஆத்ம திருப்தியளிக்கும் : ஜனாதிபதி

அனைத்து துறைகளிலும் நாம் வளர்ச்சியடைந்தாலும், ஆன்மீக வளர்ச்சியே ஆத்ம திருப்தியளிக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இறுதி நிகழ்வு, நேற்று மகாவலி கங்கையில் இடம்பெற்ற நீர்வெட்டு சடங்குடன் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘கண்டி பல்லேகலயில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச பௌத்த மையத்தைஇ மேலும் விஸ்தரித்து பௌத்த…

Read More

இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கும் அவுஸ்திரேலியா

அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின் மூடி தெரிவித்துள்ளார். இருதரப்பு வர்த்தகம் பெறுமதி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி துறையில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அதிக தொடர்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

புதிய பாராளுமன்றில் அநுர குமார உருக்கமான பேச்சு

இரண்டு கோடி மக்களால் நிரப்ப முடியாத பாராளுமன்றம் அவர்கள் சார்பான 225 உறுப்பினர்களால் நிரப்பப் பட்டுள்ளது. எனினும், அப்பாராளுமன்றின் ஜனநாயகம் மற்றும் நன்னடைத்தை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்போடு புதிய சபாநாயகர் தெரிவாகியுள்ளார் என தெரிவித்தார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க. கடந்த பாராளுமன்றில் ஒரு சிலர் தமதுரைகளின் போது நடந்து கொண்ட விதங்களைப் பார்க்கும் போது பாராளுமன்றுக்குள் பாடசாலை மாணவர்களை இனியும் அனுமதிக்க முடியுமா எனும் கேள்வியெழுந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…

Read More

பிரதம கொறடா கயந்த, அவைத் தலைவர் கிரியெல்ல

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read More

குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

8ஆவது பாராளுமன்றத்தின்  குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் பிரதி சபாநாயகராக  திலங்க சுமதிபாலவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை சபை அமர்வுகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெனிசூலா சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 17 கைதிகள் கருகி சாவு

வெனிசூலாவில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு வெனிசூலாவின் காரபோபா மாநிலத்தில் உள்ள டோகுயிட்டோ சிறைச்சலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 ஆண்கள், 8 பெண்கள் என 17 பேர் இறந்ததாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வேலன்சியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது….

Read More

பிரதி சபாநாயகராக திலங்க சுமத்திபால

8 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக திலங்க சுமத்திபால சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சார்ஜாவில் தந்தையுடன் இரு சிறுமிகள் பலி

அரபு நாடுகளில் முழுஆண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்து, 2015-16 கல்வியாண்டில் முதல் நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. சார்ஜாவில் வாழும் ஒருவர் முதல் நாளாக பள்ளிக்குச் சென்ற தனது இரு மகள்களை காரில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெடுஞ்சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி மோதியதில் அவர்கள் மூன்று பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து சேர்வதற்குள் அந்த…

Read More

யார் இந்த கரு ஜயசூரிய?

இலங்கையின் 8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது. இலங்கையின் 20வது சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் மூன்றாவது குடிமகனாகவும் 20வது சபாநாயகராகவும் தெரிவாகியுள்ள கரு ஜயசூரிய பற்றிய குறிப்பு. கரு ஜயசூரிய, கம்பஹா மாவட்டத்தின் ஹாப்பிட்டிகம கோரளையில் மீரிகம பிரதேசத்தில் புகழ்பெற்ற வர்த்தக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயசூரிய குடும்பத்தின் மூத்த புதல்வராக பிறந்தார். தாய் வழியானது அத்தனகல்லை பண்டாரநாயக்கர்களுடன் போட்டியிட்ட செனவிரத்ன குடும்பத்தை சேர்ந்த பலமான அரசியல் உரிமையும் கரு ஜயசூரியவுக்கு கிடைத்தது. ஆரம்ப…

Read More

எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரே தெரிவுசெய்வார்

எதிர்க்­கட்சித் தலைவர் யாரென்­பதை சபா­நா­ய­கரே தீர்­மா­னிப்பார். சபா­நா­ய­கரின் முடிவே இறுதி முடி­வாகும். தேசிய அரசாங்கத்தின் அமைச்­ச­ர வைப் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். இது தொடர்­பாக லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக எவ­ரது பெய­ரையும் அர­சியல் கட்­சிகள் பிரே­ரிக்­கலாம். இதற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை. ஆனால் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சித்­த­லை­வரை தேர்ந்­தெ­டுக்கும் அதி­காரம் சபா­நா­ய­க­ருக்கே உள்­ளது. எனவே எதிர்க்­கட்சித் தலை­வரை சபா­நா­ய­கரே தெரிவு செய்வார். அவரின் முடிவே இறுதி…

Read More

தாஜுதீன் சம்பவத்துடன் தொடர்­பு­டைய இரு சந்­தேக நபர்கள் இத்­தா­லியில்?

றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் கொலை என சந்­தே­கிக்­கப்­படும் மர­ணத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் இருவர் இத்­தா­லியில் உள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. குறித்த இரு சந்­தேக நபர்­களும் கடந்த அரசின் மிக முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்கு மிக நெருக்­க­மா­ன­வர்கள் என குறிப்­பிடும் அந்த தக­வல்கள் கடந்த அர­சாங்கம் அதி­கா­ரத்தை இழந்­ததும் அவர்கள் நாட்டை விட்டு இத்­தா­லிக்கு சென்­றுள்­ள­தாக தெரிவித்துள்ளனர். இந் நிலையில் குறித்த இரு­வ­ரையும் நாட்­டுக்கு அழைத்­து­வ­ரு­வது தொடர்­பி­லான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக…

Read More

ரணில் முன்மொழிய, நிமல் சிறிபால சில்வா வழிமொழிய சபாநாயகராக கரு ஜெயசூரிய பதவியேற்பு!

இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று (o1) தமது முதல் அமர்வுக்காக கூடியுள்ளது. இதன்போது கரு ஜெயசூரியவை சபாநாயகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார். இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்தார். இந்தநிலையில் ஏனைய யோசனைகள் அற்ற நிலையில் கரு ஜெயசூரிய சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்

Read More