Headlines

எவ்வளவு முயற்சித்தாலும் பேஸ்புக்கில் மார்க் ஸுக்கர்பர்க்கை பிளாக் செய்ய முடியாது, தெரியுமா?

கசப்பான அனுபவத்தால், நீங்கள் மீண்டும் நேரில் சந்திக்க விரும்பாத நபரை தடுக்க வழியே இல்லை என்றாலும், பேஸ்புக்கில் நிச்சயமாக அவரை ‘பிளாக்’(முடக்க) செய்துவிடலாம். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கை என்ன முயற்சித்தாலும் ‘பிளாக்’ செய்ய முடியாது ஏன் தெரியுமா? மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார். தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார். கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத்…

Read More

இந்தியாவின் முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரி நியமனம்!

காவல் துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. காவல்துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நியமன உத்தரவு நிறைவேற்றப்பட்டால், இந்தியாவிலேயே, ஒரு திருநங்கை காவல்துறையின் துணை ஆய்வாளர் என்ற பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். தமிழக காவல்துறையின் துணை ஆய்வாளராக அவரை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

Read More

P.J. க்கு போர்க்கொடி தூக்குவதிலுள்ள பயங்கர ஆபத்துக்கள்..!

-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் போன்றே அவரது சில நிலைப்பாடுகளையும் நான் காண்கின்றேன், அவரது சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்ட திரிபுகளுக்கும் உள்ளாகியுள்ளன. இலங்கையில் உள்ள பிரபலமான இஸ்லாமிய அமைப்பு ஒன்று தமது…

Read More

பீ.ஜே. விவகாரம், ACJU க‌டித‌த்தில் ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டது ஏன்..?

தென்னிந்திய‌ த‌வ்ஹீத் புர‌ட்சியாள‌ர் பீ ஜே இல‌ங்கை வ‌ருவ‌தில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ ஜ‌மிய்ய‌த்துல் உலமாவின் க‌டித‌ த‌லைப்பில் மௌல‌வி அல்லாத‌ ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டு அறிக்கை வெளியிட்டிருப்ப‌து உல‌மாக்க‌ளை அவ‌மான‌ப்ப‌டுத்தும் செய‌ல் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. மேற்ப‌டி அறிக்கையில் ஜ‌மிய்ய‌த்துல் உல‌மாவின் நிர்வாக‌த்தில்  ச‌ம்ப‌ள‌த்துக்கு ப‌ணி புரியும் ஆத‌ம் அலி என்ப‌வ‌ர் கையொப்பமிட்டுள்ளார். மிக‌ முக்கிய‌மான‌ இந்த‌ விட‌ய‌த்தில் உல‌மா ச‌பையின் த‌லைவ‌ரோ, செய‌லாள‌ரோ, ப‌த்வாக்குழுவோ அல்ல‌து ஒரு மௌல‌வியாவ‌து…

Read More

PJ இலங்கை விஜயத்துக்கு எதிராக, தெவட்டகஹா பள்ளியின் முன் ஆர்பாட்டம்

தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு தெவட்டகஹா ஜும்மா பள்ளியின் முன்,  ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்த ஆர்பாட்டத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு  பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் வருகையை எதிர்த்து கோஷங்களையும் எழுப்பியதுடன் பாதகைகளையும் ஏந்தி இருந்தது காணக்கூடியதாக இருந்தது.

Read More

தண்ணீர் விழுங்கிய குழந்தையின் கண்ணீர் கதை!

– எம்.எஸ்.எம்.நூர்தீன் – கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி, பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப் பிரதேசமெங்கும் மிக வேகமாக பரவியது. இந்தச் செய்தி வெளியாகி ஒரு சில மணித்தியாலயங்களில் காணாமல் போன குறித்த சிறுமி மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிய வந்தது. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜன்னத் மாவத்தை அதனோடுள்ள வீதியே பாவா லேன் என அழைக்கப்படுகின்றது. இந்த…

Read More

பொன்சேக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு

பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று…

Read More

அக்கரைப்பற்று, ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் சடலமாக மீட்பு

அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 7 மணியளவில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார். அக்கரைப்பற்று -11 ஆம் பரிவு (முறாவோடை) அல்-பாத்திமியா வித்தியாலய வடக்கு வீதியில் வெட்டப்பட்டிருந்த குழியில் இருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று 14 ,காதிரியா கடற்கரை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

Read More

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் 158 இன் முதலாவது சட்டம் எனவும் இதனை மீறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு முதலாவது தடவை…

Read More

அவன்கார்ட் தொடர்பில் விஷேட அமைச்சரவை கூட்டம்

அவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக  விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவன்-கார்ட் தொடர்பில் தற்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனதிபதி இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவன்-கார்ட் நிறுவனம் தொடர்பில் உரிய விசாரணைகள் நீதியாக நடைபெறாவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

காத்தான்குடி இறைச்சிக்கடை உரிமையாளர்கள் ஹர்த்தால்

– ஜவ்பர்கான் – காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தமது கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தினமென்பதால் பிரதேசத்து முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மாட்டிறைச்சியை உணவாக உண்பது வழமையாகும். இவர்களின் இந்த பகிஸ்கரிப்பினால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொதுச் சந்தை மற்றும் புதிய காத்தான்குடி சந்தை, புதிய காத்தான்குடி சந்தை உட்பட காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள 28 மாட்டு இறைச்சிக்கடைகளும்…

Read More

முஸ்லிம்கள் தம் காணிகளில் உள்ள, பற்றைகளை துப்புரவு செய்வது காடழிப்பு அல்ல – ஜனுபர்

– பாரூக் சிஹான் – முல்லைத்தீவு பகுதியில் காடழிக்கப்படுவது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் கொண்டு வந்த பிரேரணை சக வட மாகாண சபை உறுப்பினர் ஜனுபரின் கூற்றினால் பிற்போடப்பட்டுள்ளது. மாகாணசபையின் 37வது அமர்வு நேற்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ஆரம்பமாகி முழு நேர அமர்வாக மாலை 5 மணிவரையில் நடைபெற்றிருந்தது முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக பெருமளவு காடுகள் கேட்பார் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது…

Read More