Headlines

தீவிரவாத இயக்கமாக சிவசேனாவை அறிவிக்க வேண்டும்: முஷாரப் 

சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ‘சேனல்-92’ என்ற தனியார் தொலைகாட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த முஷாரப் கூறியதாவது: நான் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுகளுடன் பழகியுள்ளேன். என்னைப்பொருத்தவரை தற்போதைய கேள்வி கட்சிகளைப் பற்றியது அல்ல. ஆனால், தனிநபர் தொடர்பானது. இந்தியாவின் தற்போதைய புதிய பிரதமர் தொடர்பானது. வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர். அவர் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். சோனியா காந்தியும் அப்படிதான். அதனால்தான், இந்தியா-பாகிஸ்தான்…

Read More

மாலைத்தீவில் அவசரநிலை பிரகடனம்

மாலைத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை அதிபர் அஹமத் அடிப் கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டது, அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய சம்பவங்களால் அங்கு கடந்த சில நாட்களாக பதட்டமான சூழல் நிலவி வந்தது. சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலைத்தீவு அதிபர் அப்துல்லா…

Read More

தாய்லாந்து இளவரசியை சந்தித்த மைத்திரி

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (04) முற்பகல் அந்நாட்டின் இளவரசி (Maha Chakri Sirindhorn) அவர்களை (Sra Pathum) மாளிகையில் சந்தித்தார்.

Read More

மத்திய மாகாண சபையில் அமளி

மத்திய மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினருக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு எப்படி வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய ஏனைய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய மாகாண சபையின் அமர்வுகள் நேற்று பேரவை தலைவர் எல்.டி. நிமலசிறி தலைமையில் பல்லேகலவில் உள்ள மாகாண சபை அவையில் நடைபெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலிக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்…

Read More

தென்னாபிரிக்க நாட்டவர் கைது

தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. காலாவதியான கடவு சீட்டுடன் தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

ரஷ்யாவின் மற்றுமொரு விமானம் விழுந்து பலர் பலி

சென்றவாரம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்தை தொடர்ந்து சற்றுமுன்னர் ரஷ்யாவுக்கு விமானம் ஒன்று தென் சூடானில் விழுந்ததால் அதில் பயணம் செய்த சுமார் 40 பேர் உயிரிந்துள்ளனர் என தெரிவிக்கபடுகிறது. பொருட்களை ஏற்றிச் செல்லும் குறிபிட்ட விமானத்தில் பணியாளர்களுடன் 20 பேர் இருந்ததாக சூடான் ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்து இருந்தாலும் நாற்பது பேரின் உடல்களை அங்கிருந்து அகற்றியதாக ராய்ட்டர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இருவர் காயங்களுடன் உயிர்தப்பி உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கடுகிறது.

Read More

லங்கா சதொசவில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை

ராஜபக்ச ஆட்சியின் போது லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்றாகக் கூறப்படும் 5000 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் சதொச நிறுவனத்தின் பிரதான பதில் பொது முகாமையாளர் கே.ஆரியவன்சவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று கே.ஆரியவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனம் கணனிமயப்படுத்தப்பட்டமை, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய சுற்றுலா விடுதி, எரிபொருள் நிரப்பு நிலைய நிர்மாணம், தலைமைச் செயலகம் நவீனமயப்படுத்தப்பட்டமை, வர்த்தக கட்டிடம் நவீனமயப்படுத்தப்பட்டமை, இறக்குமதி…

Read More

பொங்கியெழுந்த தென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் (படங்கள்)

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா விசாரணைப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனமும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று(04) பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாக முன்றலில் இடம்பெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது வட புல முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் ஒட்டு மொத்த சுயநிர்ணய உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்திய வாசகங்கள் பொதிந்த பதாதைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓலுவில் வளாகத்திலிருந்து அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து கவனயீர்ப்பு…

Read More

பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்த தாய் கைது

கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் தனது பிள்ளையை ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது பிள்ளையை பராமரிக்க முடியாமையினாலேயே இவ்வாறு ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயச்சித்தாக கைது செய்யப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 36 வயதுடைய தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

குமார் குணரத்தனம் கைது

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கேகாலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.

Read More

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்புச் சபையின் மற்றுமொரு கூட்டம் சபாநாயகரின் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் இதுவரை உறுப்பினர்கள் நியமிக்கப்படாத சுதந்திர ஆணையங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெண்: மட்டக்களப்பில் சம்பவம்

பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் குறித்த சிசுவின் தாய், அதனை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஒருவருமே எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதன் நிமித்தம் சிசுவின் தாய்க்கு 20,000 ரூபாய் பணம் தரகர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More