Headlines

பிரணாப் முகர்ஜி பங்கேற்ற விழாவில் பாலஸ்தீன மாணவர்கள் போராட்டம்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு நாள் பயணமாக பாலஸ்தீன நாட்டுக்கு சென்றார். அங்கு அபுதிஸ் நகரில் அமைந்துள்ள அல் குத்ஸ் பல்கலைக்கழகத்தில், அந்த நாட்டின் பிரதமர் ரமி ஹமதல்லா தலைமையில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் அவர் ‘அமைதி வீரர்‘ என்று கவுரவிக்கப்பட்டார். இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில், அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதுதான்…

Read More

பிரியா விடைகொடுக்கும் பயணத்தின்போது!

– அபூ உமர் அன்வாறி, BA மதனி – கால மாற்றங்கள் ஒரு முஸ்லிமின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவர் குளிருக்கும், வெப்பத்துக்கும் தகுதியான ஆடைகள், உணவுகளை தெரிவு செய்வது போல், தனது வாழ்வின் முடிவுக்கான ஆயத்தங்களை எப்போதும் சரிவர செய்து கொள்ள வேண்டும். மரணத்துக்கான காரணிகள் வேறுபடலாம், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது அல்லாஹவின் நியதி. ஆகவே இவ்வாறு செய்யும் போது, அவன் வெற்றியடைகின்றான். காலத்தின் மாற்றத்தை அவன் முன்…

Read More

மறந்து போனது முன்னைய பகை!

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தங்கள் முன்னைய பகையை மறந்து கூடிக்குலாவியுள்ளனர். கடந்த ஆண்டின் ஜுலை மாதம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் விவாதம் சூடுபிடித்த நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான தனிப்பட்ட…

Read More

ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின், மாநாட்டில் றிஸ்வி முப்தி (படங்கள்)

ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ள றிஸ்வி முப்தி வெளிநாட்டு பிரமுகர்களுடன் கலந்துரையாடுவதை படங்களில் காண்கிறீர்கள்.

Read More

பாரிய மோசடி : மஹிந்தவிடம் நாளை விசாரணை

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை காலை 09.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.vk

Read More

கொண்டயாவின் அண்ணனே குற்றவாளி?

கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன் ஒத்திசைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதிமன்றில் இன்று பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சேயா சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுவுடன் இந்த கொண்டயாவின் சகோதரரது மரபணு ஒத்திசைவதாகக் குறிப்பிட்டுள்ளனர். சேயாவின் தந்தையின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் 22 மீனவர்கள் கைது (படங்கள்)

– எம்.ஏ. தாஜகான் – பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி கரைவலையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டின் பேரில் 22 மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கரையோர மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்றொழில் தினைக்களத்தின் அதிகாரிகள் இன்று(14)சுற்றிவளைப்பை மேற்கொண்டபொழுதே ஒரு தொகுதி மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.  சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டில்…

Read More

ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு

– இக்பால் அலி – துருக்கி நாட்டு பிரதமர் அலுவலகத்தின் கலாசார விவகார தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு 13 ஆம் திகதி முதல் 16 வரை துருக்கி இஸ்தாம்பூல் நகரில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து விஜயம் செய்து முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் மற்றும் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹீம் ஆகியோர்கள் கலந்து…

Read More

24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர்  தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கைதுசெய்தனர். தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் கைப்பற்றிய பொலிஸார்,  அவர்களை நேற்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சேயாவின் தந்தை, கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி அறிக்கை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையின் இரத்தமாதிரி அறிக்கையும் கைது செய்யப்பட்டுள்ள கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி  அறிக்கையும் இன்று மினுவன்கொடை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அஷ்ரப் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து, கவனம் செலுத்துமாறு கோரிக்கை

ஒலுவில் அஷ்ரப் நகரிலிருந்து 2011ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஐ தே கட்சி தலைமையிலான இந்த ஆட்சியிலும் மீண்டும் அதே நகரில் மீள் குடியேற்றப்படாமல் தட்டழிந்து திரிவது கவலை தருவதாகும் என உலமா கட்சி தெரிவித்தள்ளது. இது பற்றி அக்கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி  தெரிவித்துள்ளதாவது, பல வருடங்களாக ஒலுவில் அஷ்ரப் நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் இராணுவ முகாம் அமைக்கப்போவதாக கூறி 2011ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை அப்போதே பகிரங்கமாக…

Read More

நாங்கள் குற்றவாளிகள் அல்ல, பிணையில் செல்ல அனுமதியுங்கள் : சந்தேக நபர்கள் கோரிக்கை

நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்….

Read More