பெறுமதி வாய்ந்த மனித வளம் முதியோர்களே : ஜனாதிபதி
இனிமையான வயோதிபம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். எந்தவொரு சமூகத்திலும் முதியவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த மனித வளமாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தொன்மைக்காலம் முதலே கீழைத்தேய மக்கள் முதியவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் உயர்ந்த ஸ்தானத்தை வழங்கிவந்துள்ளனர். இலங்கையர்கள் தங்களது விரிந்த குடும்ப முறைமையில் முதியவர்களுக்கு ஒரு விசேட இடத்தை…
