Headlines

ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில் தவறான உரை: அதிபர் உடல்நிலை பற்றி எதிர்க்கட்சிகள் சந்தேகம்

நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரில் துவக்க உரை நிகழ்த்திய  ஜிம்பாவே நாட்டு அதிபர் ராபர் முகாபே, ஒரு மாதத்திற்கு முன்பு படித்த உரையை மீண்டும் படித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. அதிபர் ராபர் முகாபே தான் வாசிக்க வேண்டிய உரைக்குப் பதிலாக வேறு தவறான பழைய உரையை படிக்க ஆரம்பித்ததும், தொலைக்காட்சியின் நேரடி ஒலிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவர் வாசித்த உரையானது கடந்த மாதம் ஆற்றிய உரையாகும்.  அதிபரின் செயலகத்தில் நடந்த குழப்பத்தின் காரணமாகவே தவறு…

Read More

பின்லேடன் தம்பி கட்டுமான நிறுவனத்துக்கு தடை – சவூதி அரேபிய மன்னர் உத்தரவு

சவூதி அரேபியாவின் புனித மக்காவில் கடந்த 12-ந்தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. அதில், கட்டிடம் இடிந்து அங்கு மழைக்கு ஒதுங்கிய யாத்திரீகர்கள் உள்பட 107 பேர் பலியானார்கள். 400 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தோருக்கு  சவூதி  அரேபிய மன்னர் சல்மான் நஷ்டஈடு அறிவித்து உள்ளார். மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெறும் விரிவாக்க கட்டுமான பணியில் `தி  சவூதி  பின்லாடின் குரூப்’ ஈடுபட்டுள்ளது. இது அல்கொய்தா தலைவர்…

Read More

ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கான, பழைய மாணவர் சங்கத்தின் தேவை…!

– முஸ்தபா முர்ஸிதீன், ஶ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம்- ஒரு பாடசாலைக்கு, அதன் வெற்றிக்கு பழைய மாணவர் சங்கம் என்பது இன்றியமையாத ஒன்று. இன்று இலங்கையிலும் சரி உலகிலும் சரி மேலோங்கி நிற்கின்ற பாடசாலைகளின் பல்வேறு தேவைகள்; பௌதீக, மனித வளம் சார்ந்தவை, அப்பாடசாலைகளின் பழைய மாணவர்களினாலே பூர்த்தி செய்யப்படுகின்றன. இது இவ்வாறிருக்க எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திலே பெயர் பதித்து நிற்கின்ற மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)க்கு ஒரு பலம் வாய்ந்த பழைய மாணவர் சங்கம் இல்லை…

Read More

ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து பதற்றமில்லை : ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை பதற்றமடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அவர், ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்தில் அதிர்வுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டு மற்றம்…

Read More

5வயது சிறுமி படுகொலை: விசாரணை சி.ஐ.டியிடம்

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட 5 வயதான  சிறுமியின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார். கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை…

Read More

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொர்பில் 24 மணிநேரமும் முறையிடலாம்

சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், 1929 மற்றும் 1938 போன்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக முறையிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த சேவையானது காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாத்திரமே செயற்பட்டதாகவும் தற்போது…

Read More

பரிந்துரைகள் பாரதூரமானதாக அமையாது பிரதி வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையின் விசா­ரணை அறிக்­கையில் பார­தூ­ர­மான விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டாலும் பரிந்துரைகள் பார­தூ­ர­மாக அமை­யாது. பார­தூ­ர­மான அத்­து­மீறல் விசா­ரணைகள் வலி­யு­றுத்­தப்­படமாட்­டாது என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது என பிர­திவெளி­வி­வகார அ­மைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார். இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக சந்­தே­கங்­களை தீர்க்க அர­சாங்கம் செயற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்­கை­ மீ­தான விசா­ரணை அறிக்கை பார­தூ­ர­மான வகையில் அமையும் என…

Read More

இலங்கை குறித்த அறிக்கை பயங்கரமானதாகவே அமையும் – உதய கம்­மன்­பில

இலங்­கையின் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை வெளி­யிடும் விசா­ரணை அறிக்கை இலங்கை இரா­ணு­வத்தை பழி­தீர்க்கும் வகையில் அமையும். அதேபோல் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என நம்­பு­வ­தாக தூய்மையான ஹெல உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார். அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தை சர்­வ­தேச அரங்கில் தீர்க்க முயற்­சிப்­பது ஏன்? தமிழர் பிரச்­சி­னைக்கு புதிய அர­சியல் அமைப்பு எதற்­காக? இப்­போ­தி­ருக்கும் அர­சியல் அமைப்பின் மூலம் தீர்க்க முடி­யாத தமிழ் மக்­களின் பிரச்­சினை என்ன? எனவும் அவர் கேள்வி…

Read More

இலங்கை குறித்த விசாரணை அறிக்கை இன்று ஜெனிவாவில் வெளியீடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது. இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஐகிகிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார். இந்த விசாரணை அறிக்கை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் படி ஐந்து நாள்…

Read More

கெஹெலிய ரம்புக்வெல ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல  வாக்கு மூலம் வழங்குவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகம் ஒன்றில் கட்டணம் செலுத்தாது விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

சங்கக்கார இல்லாதது நட்டமாகும் – நரேந்திர மோடி கவலை

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலேயே மனிதர்கள்- மனிதர்களுக்கு இடையில் உறவை தக்கவைத்து கொள்வதற்காக முயற்சிப்பதாக தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, கிரிக்கெட் மைதானத்தில் இல்லாமையானது எங்கள் எல்லோருக்கும் நட்டமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஹைய்தராபாத்தில் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘சில காலத்துக்கு…

Read More

மரண தண்டனையை அமுல்படுத்த, ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க

மரண தண்டனை மீளவும் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்த பிரேரணை ஒன்று எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். பிரேரணையாக அல்லது ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணையாக முன்வைப்பதா என்பது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தி அவர்களின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More