Headlines

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சில சிவில் அமைப்புக்களுக்கு பெறுமதிமிக்க பொருட்களை கையக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 108,000 யூரோ பெறுமதியான மடிக்கணிணிகள் மற்றும் தொலைபேசிகள் உட்பட பல அலுவலக உபகரணங்கள்…

Read More

மத்தல விமான நிலையத்தில் குழப்பம் : 7 பேருக்கு நோட்டீஸ்

மத்தல விமான நிலையத்தில் குழுவாக இணைந்து குழப்பங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஏழு பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதியன்று திஸ்ஸமாஹாரம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நேற்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு பேரில் லுகம்வேர பிரதேச சபையின் முன்னாள் தலைவர், மத்தல விமான நிலையத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் உள்ளடங்குவர். இதேவேளை, விமான நிலையத்தின் சேவையாளர்கள் நால்வரும்பிரதேசவாசிகள் இருவரும் திஸ்ஸமராம நீதிமன்றத்தினால் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

சந்திரிக்கா – சுஷ்மா சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இந்திய புதுடெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச இந்து- பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சந்திரிக்கா அங்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று ஆரம்பமாகிய இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெற்று நாளை நிறைவடையவுள்ளது. இதேவேளை சந்திரிக்கா நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இலங்கை வருகை

–எம்.ஐ.அப்துல் நஸார்– ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று  (03) இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை புதிய அரசாங்கத்தின் கீழும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்கத்தின் உயர்…

Read More

மாயா­துன்ன வெற்றிடத்துக்கு பிமல் நியமனம்

இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் இரு தினங்கள் மாத்திரமே எம்.பி.யாக­வி­ருந்த ஜே.வி.பி.யின் தேசியப் பட்­டியல் எம்.பி.யான சரத் மாயா­துன்ன நேற்று கன்னி உரை­யொன்றை நிகழ்த்தி விட்டு எம்.பி பத­வியை இரா­ஜி­னாமா செய்துகொண்டதையடுத்து அவருடைய இடத்துக்கு பிமல் ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கம்பஹாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிமல் ரட்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக  ஜேவிபி நியமித்துள்ளது. நாட்டில் இடம்­பெறும் ஊழல்­க­ளுக்கு எதி­ராக போராடும் கட்சி யாக ஜே.வி.பி. உள்­ளது. அக்­கட்­சி­யினர் இம்­முறை தேர்­தலின் போது கூட நாட்டில் ஊழலை ஒழிக்க மக்­களின்…

Read More

திருமணங்களின் எண்ணிக்கை குறைவு

இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டு காலத்தில் நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 710 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2013 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து…

Read More

புதிய அமைச்சர்கள் / அவர்களுக்கு கிடைத்துள்ள அமைச்சுக்கள் விபரம் இதோ…!

அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் 03.காமினி ஜயவிக்ரம பெரேரா – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் 04.நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சர் 05.எஸ்.பி.திஸாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் 06.டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் 07.லக்ஷமன்…

Read More

முந்தைய அரசாங்கம் அட்டுழியங்களை ரசித்துக் கொண்டிருந்தது – றிஷாத்

-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அகில இலஙகை மக்கள் காங்கிரஸ் கட்சியினதும், இலங்கை முஸ்லிம்களினதும் பாராட்டை தெரிவிப்பதாக கட்சியின் தேசிய தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமன றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இந்த உயர் சபைக்குப் பிரதிச் சபாநாயகராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்காக உங்களுக்கு எனது கட்சி சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  அதேபோல் பிரதிக் குழுக்களின் தலைவராக எங்களுடைய…

Read More

தொழுகைக்கு முதலிடம்…! அமைச்சரவை பதிவிப்பிரமான நிகழ்வுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் ”எப்சன்ட்”

புதிய அமைச்சரை நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு இன்று அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்க இருந்த றிஷாத்  பதியுதீன், ரவுப் ஹக்கீம் ,கபீர் ஹசீம் ,ஹலீம் ஆகியோர் வருகை தரவில்லை . சுப நேரம் குறிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு ஜும்மா தொழுகைக்கு முதலிடம் வழங்கி கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களுக்கு 2 வருடங்களில் சுத்தமான குடிநீர் : ஜனாதிபதி

எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம் கொடுத்துவரும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கான நாளொன்றுக்கு 24,000 லீட்டர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பில் விரிவான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகக்…

Read More

சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் – சம்பந்தன்

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். எதிர்க் கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் குறித்த உங்களது…

Read More