பாராளுமன்றம் கலைக்கப்பட்டது BREAKING NEWS
பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நோர்த்தாம்டன் சயர் மாகாணத்தில் உள்ள கிங்ஸ்தோர்பி பகுதியை சேர்ந்தவர் அலிஸ்டெயர் லீத். இவர் ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் தனது கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளை பதிவு செய்திருந்தார். விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அதை அவர் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவரது 5 வயது மகன் அலெக்சாண்டர் தனது தந்தையின் கம்ப்யூட்டரில் ‘கேம்’ விளையாடிக்கொண்டிருந்தான். அந்த விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. அதற்கு அவனிடம் பணம் இல்லை. உடனே தனது…
ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் படுத்து தாலாட்டு கேட்கும் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு இரகசியமான முறையில் சந்தித்துவிட்டு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு கூடியிருந்த சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் நேற்று இரவு, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் பிரசன்ன…
ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார மற்றும் நலனிருப்பு தொடர்பில் இளைஞர்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் காரணமாக அமைகின்றன. அத்துடன், அதிக வயதுடைய பெண்கள்,…
இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று மதிய போஷன விருந்தளிக்கிறார். அப்துல் கலாம், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அழைப்பையேற்று மூன்றுநாள் விஜயமாக நேற்றிரவு இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார். சம்பிக்க ரணவக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்புறழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம்களின் மத்தியிலேயே அதிகரித்த சதவீதத்தில் காணப்படுகிறன. இதன் பின்னணி என்ன? இதை சமூக அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினரை இலக்கு வைத்து ஊக்கப் படுத்தப்படும் நடவடிக்கையென பொதுவாக கூறுவிட்டு இருக்க முடியாது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஹசன் புஹாரி என்ற அன்பர் ஒரு சிறிய சம்பவத்தை எமக்கு அனுப்பியுள்ளார். குறைந்தபட்சம் பெற்றோராவது தமது பிள்ளைகளில் கவனம் செலுத்த இந்த சம்பவங்கள் பகிரப்பட வேண்டுமென…
இந்து மற்றும் பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முஹம்மது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான , சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர் . பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் , வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும், தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற…
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய, கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாக அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது கடமையிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
கடந்த புதன் அன்று இஸ்லாமும் ஐரோப்பாவும் என்ற தலைப்பில் புரோக்ஸலில் ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் ஐரோப்பாவின் பல முக்கிய அரசியல்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பாவிலுள்ள பல இஸ்லாமிய அமைப்புகளின், தலைவர்கள் மற்றும் இமாம்கள் உட்பட பெரும் திராளானவர்கள் கலந்து கொண்டனர். அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஐரோப்பிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோர்கிரீனி அவர்களின் பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது. அவர் தமது உரையில் “தற்போதைய சூழலில் ஐரோப்பாவின் மிக…
ஊழல் இல்லாத முதல் மாநிலமாக டெல்லியை மாற்ற அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசொரியா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆம் ஆத்மி டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு முறையும், டெல்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறிதியை அளித்தே தேர்தலில் வெற்றிப் பெற்றது. அதன் படி சில அரசு அதிகாரிகளின் பதவிகூட ஊழல் குற்றச்சாட்டால் பறிபோனது. ஊழல் குறித்த புகார் தெரிவிக்க தனி தொலைப்பேசிப் புகார் எண்கள் மக்களுக்கு பயன்பாட்டில் உள்ளது….