Headlines

நீங்கள்…போகலாம்… – அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை 8 முறை எச்சரித்த சீன கடற்படை




தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமானதளம் அமைக்கும் விதத்தில் அந்தத்தீவு உருவாக்கப்பட்டு வருவதாக பல நாடுகள் சீனாவை விமர்சித்து வரும் நிலையில், அந்த தீவுக்கு மேல் பறந்த அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை சீன கடற்படை 8 முறை வெளியேறச் சொன்னதாக சர்வதேச செய்தி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் அதி நவீன கண்காணிப்பு விமானமான P8-A Poseidon அதன் குறைந்த பட்ச உயரமான 4 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் அந்த தீவுப் பகுதியில் பறந்த படி இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த விமானம் சர்வதேச வான்பகுதியில் இருந்த வருவதாக அமெரிக்க பைலட் கூற அவருடன் ரேடியோவில் பேசிய சீன அதிகாரி ஆத்திரத்துடன் ”இது சீன கடற்படை… நீங்கள் போகலாம்” என்று 8 முறை கூறியுள்ளதாக அந்த தொலைக்காட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் இது குறித்த விவரங்கள் எதுவும் தன்னை வந்து சேரவில்லை என்று கூறியுள்ள நிலையில், P8-A Poseidon விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அங்கு கட்டுமானப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இதே பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவ விமானங்கள் பறக்க கூடாது என்று சீனக் கடற்படை எச்சரித்தது நினைவு கூரத்தக்கது.

வியட்னாமிற்குக் கிழக்கே, தென் சீனக் கடலில் அமைந்துள்ள ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்துக்கு, சீனா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணை சொந்தம் கொண்டாடி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *