Headlines

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் பூர்த்தி




பதவிக் காலம் பூர்த்தியான உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளது.

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் இன்றுடன் பூர்த்தியாகும் நிலையில், அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.

மாநகரசபைகள் ஆணையாளர்களினாலும், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் செயலாளர்களினாலும் நிர்வாகம் செய்யப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் அதிகாரிகளினால் நிறுவனங்கள் நிர்வாகம் செய்யப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்ளை நிர்வாகம் செய்த மேயர்கள், நகர பிதாக்கள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்றைய தினம் அவர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *