நீதி மன்றம் அதிரடி; ஞானசாரவை கைது செய்ய உத்தரவு!
திமன்றுக்கு சமூகமளிக்காமை அடுத்து கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்துள்ள கொழும்பு பிரதான நீதவான், அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். (TM)
திமன்றுக்கு சமூகமளிக்காமை அடுத்து கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்துள்ள கொழும்பு பிரதான நீதவான், அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். (TM)
ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். குறித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். நிர்வாகத் தேவையின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கருதி அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தனி பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் டேவிட் கெமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 650 இடங்களைக்கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்றத் தேர்தல் நேற்று (07) நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 245 இடங்களும், மிலிபாண்ட் தலைமையில் போட்டியிட்ட தொழிலாளர் கட்சிக்கு 212 இடங்களும், நிகோலா…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 1222 திட்டங்களுக்காக 7451 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாசீர் நசீர் அகமட் தலைமையில் நேற்று (07) வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் 4 மணிவரை நடைபெற்றது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு…
நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், பிக்குகள் உள்ளிட்ட 27 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று (08) சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அனைவரையும் தலா ஒரு லட்சம் ரூபா தனிநபர் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு…
மியன்மார் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியன்மார் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, இந்த இலங்கையர்களுக்கு எதிராக அந்த நாட்டின் குற்றவிசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மீள பெறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் பிரகாரம் அடுத்த சில தினங்களுக்குள் விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கையின் பேரிலேயே, இந்த மீனவர்களை விடுதலை…
மன்னார் வில்பத்து வனப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் மேற்கொள்ளும் பரப்புரைகள் உண்மை இல்லை என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது: 1990ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமது சொந்த நிலங்களுக்குச் சென்று மீள்குடியேறும் நோக்கில் காடுகளை அழித்து வீடு வாசல் வயல் நிலங்களை துப்பரவு செய்து மீள்குடியேறி வருகின்றார்கள்….
– ரிமாஸ் – வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07) இரவு கடைக்குள் சென்ற நபர் யுவதியை வெட்டிக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை – ஹுனுபிட்டி பராக்கிரம மாவத்தையில் வசிக்கும் 19 வயது முஸ்லிம் யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை புரிந்த இளைஞன் கத்தியால் கழுத்தை வெட்டிக் கொண்டு…
இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக “ஜவ்” என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள். பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி…
துபாய் பன்னாட்டு விமான நிலையம் இந்த ஆண்டின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த விமான நிலையம் துபாய் பன்னாட்டு விமான நிலையம், மத்திய கிழக்கு நாடுகளில் மிகச் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே துபாய் பல்வேறு வகைகளில் முன்னணியில் உள்ளது.Êசமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கூட, மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள விமான நிலைய சேவைகளை மதிப்பிட்டு துபாய் விமான…
மஹிந்தவை பணயம் வைத்து மீண்டும் அரசியலில் குதிக்க ஒருசிலர் முயற்சிக்கின்ற னர். ஆனால் மக்கள் ஒருபோதும் மஹிந்த கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள். மஹிந்தவின் பிரதமர் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மஹிந்தவுக்கு குரல்கொடுக்கும் கூட்டணியே மஹிந்தவை வீழ்த்தியது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை…
ஐதராபாத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஒருவர் தான் வேலைப்பார்த்த நிறுவனம் சம்பள பணத்தை கொடுக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணச்சிக்கலில் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார். ஐதராபத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காதீர் (வயது 30) என்பவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலைப்பார்த்து வருகிறார். அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644). ஆனால் கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் வாங்கினார். அதன்பின் அந்த நிறுவனம்…