Headlines

நைஜீரிய தேர்தலில் முன்னாள் போராளி குழுத்தலைவர் வெற்றி

நைஜீரியாவில் நேற்று (31) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்தடவையாக எதிர்கட்சித் தலைவர் முகம்மட் புஹாரி சரித்திர புகழ் பெற்ற வெற்றியை ஈட்டியுள்ளார். 72 வயதான முகம்மட் புஹாரி முன்னாள் போராளிக்குழு தலைவர் ஆவார் அவர் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என்று அங்கிருந்து வரும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு மோசடிகள் இடம்பெற்றபோதிலும் இவ்வெற்றி பாராட்டத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளனர் கண்காணிப்பாளர்கள். இவ்வெற்றியை பொதுமக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என பிபிஸி…

Read More

டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படை ஒத்துழைப்பு

 நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேல்மாகாண பாதுகாப்புத் தலைமையவினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு- மாத்தறை- இரத்தினபுரி- கேகாலை- குருணாகலை- மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படையினர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யு.ஏ.பீ மெதவலவின் கண்காணிப்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கிழக்கு கடலோரங்களில் சிறிதளவில் மழை பெய்யலாம்!

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (01) மாலை அல்லது இரவு வேளையில் இடி , மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருகோணமலை பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடலோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம். கிழக்கு  கரையோரமாக மணிக்கு 20 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும்  வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.

Read More

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்குமா?: ஆதாரம் இல்லை என தகவல்

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் மீன்எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பால் அவை மேற்கண்ட நோய்களில் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மீன் எண்ணெயால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருந்தும் மீன்எண்ணெய்…

Read More

இஸ்லாத்தில் இணைந்த கால் பந்தாட்ட வீரர் ! திருகுர்ஆன் முழுவதையும் மனனம் செய்ய போவதாக அறிவித்தார்!

காதிசிய கால் பந்தாட்ட அணிக்காக விளையாடுவதர்கு ஒப்பந்தம் செய்ய பட்டவர் தான் ஆப்ரிக்காவை சார்ந்த கங்கோலி இவர் கிருத்துவ மதத்தை சார்ந்தவர் அவர் ஆடும் காதிசிய அணியில் இருக்கும் முஸ்லிம் கால்பந்தாட்ட வீரர்களையும் அவர்களின் இனிய நடை முறைகளையும் நேரம் தவறாமல் அவர்கள் தொழுகைக்கு முக்கியத்துவம் தருவதையும் பார்த்த கங்கோலிக்கு இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு ஏர்படுகிறது இஸ்லாத்தை ஏர்க்க விரும்பிய அவர் முதலில் இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்கிறார் ஆய்வின் முடிவில் இஸ்லாம் மட்டுமே உண்மை மார்க்கம்…

Read More

உயிருக்கு போராடும் மகன்!போருக்கு புறப்படும் சவுதி அரேபியாவை சார்ந்த இராணுவ வீரர் தந்தை! ! நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு!

நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு ,இறைவனின் பாது காப்பில் விட்டு செல்கிறேன் இறைவன் நாடினால் திரும்பி வருகிறேன் இல்லையேல் சுவனத்தில் சந்திப்போம் என்ற உறுதி மொழியோடு அவசர சிகிட்சை பிரிவில் சிகிட்சை பெற்றுவரும் தனது மகளை முத்தமிட்டு விடை கொடுத்து விட்டு போருக்கு புறப்படும் சவுதி அரேபியாவை சார்ந்த இராணுவ வீரர் ஒருவரை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

Read More

காணாமல்போன படையினரை மீட்டுக்கொடுங்கள்: சிங்கள உறவுகள்

காணாமற்போயுள்ளதாகக் கூறப்படுகின்ற நான்கு கடற்படை சிப்பாய்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவு மற்றும் சுண்டிங்குளம் ஆகிய கடற்படை முகாம்களில் கடமையாற்றிய நிலையில், இந்த கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயிருந்தனர். இதேவேளை, அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் S.W.M.சேனாரத்ன முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் இதன் போது…

Read More

பூனைக்கு பால் கொடுக்கும் நாய்

-க.கிஷாந்தன்- அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆகுரோவா தோட்டத்திலுள்ள நாயொன்று பூனை குட்டிக்கு பால் கொடுப்பதாக இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த பிரதேச மக்கள் மத்தியில் பாரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் பூனையொன்றையும், நாயொன்றை வளர்த்து வருகின்றார். வெவ்வேறு இனத்தினை சேர்ந்த ஜந்தறிவுள்ள மிருகங்களாக இவை இருந்தபோதும் பசியில் தவிக்கும் பூனை குட்டிக்கு பாசத்துடன் பாலுட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்றிரவு 7.40 மணி முதல் ஆரம்பம். 25 வருடங்களின் பின் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 25 வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த இலங்கைக்கு விஜயத்தின் போது தலைமன்னார் வரையான ரயில் பாதையை திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. “போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் நாட்டைப் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலர் கடனாளியாக்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலரைப் பாக்கியாக கடந்த அரசு…

Read More

50 கோடி நஷ்டம்.. பவித்ரா வன்னியாராச்சியிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

-எம்.ஐ.அப்துல் நஸார்- சுற்றறிக்கை ஒன்றின் மூலம் 2014 ஆம் ஆண்டு மின்சார சபையின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் வேதன அதிகரிப்பை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு  மாதமொன்றிற்கு 50 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக பொலீஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரிடமும் வாக்குமூலங்களைப் பெற வேண்டுமென இலஞ்ச விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகேக்கு அறிவித்துள்ளது. இவ்விடயம் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ்…

Read More

துமிந்த சில்வாவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கபட்ட பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். அத்தனை பேரும் கடும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் துமிந்த சில்வாவின்…

Read More