Headlines

நிதி மோசடியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் – என்.கே இளங்ககோன்

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்தார். கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மாஅதிபர் கூறினார். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் என்.கே இளங்ககோன் கூறினார்.

Read More

நைஜீரிய மாணவிகள் 200 பேரை கடத்தியதன் ஒரு வருட நினைவு தினம் இன்று

நைஜீரியாவில் ஆயுதமேந்தி போராடிவரும் பொக்கோஹராம் வாதிகளினால் 200 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டதன் ஒருவருட நினைவு நிகழ்வு இன்று (14)  பிரிட்டன்- அமெரிக்கா உட்பட உலகின் பல  நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. நைஜீரிய தலைநகர்  அபுஜாவில் நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் கடத்தப்பட்ட சிறுமிகளை நினைவுகூறும் வகையில் 210 சிறுமிகள் கலந்துகொண்டனர்.கடந்த வருடம் தொடக்கம் இதுவரை சுமார் சுமார் பெண்களும் சிறுமிகள் பொக்கோஹராம் அமைப்பினால் கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.இவர்கள் சமைப்பதற்காகவும் பாலியல் அடிமைகளாகவும் போராளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த…

Read More

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 600 வாகனச் சாரதிகள் கைது

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 605 வாகனச் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவருட கொண்டாட்டங்களின் போது எது வித அசம்பாவிதங்களும் ஏற்படாமலிருக்கும் படி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 291 மோட்டார் வாகனச் சாரதிகளும், 240 ஓட்டோ வாகன சாரதிகளும், 24 கார் சாரதிகளும்,  20 லொறி சாரதிகளும்,08 வான் சாரதிகளும் உள்ளடங்குகின்றனர். அவற்றுள் 04 தனியார்…

Read More

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர தேவையான உதவிகளை வழங்குவேன் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் வவுனியா மாவட்ட இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் கவனத்தை செலுத்துவதாகவும் கூறினார். வவுனியா இரம்பைக்குளம் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்ற புதுவருடன விளையாட்டுப் போட்டிகளின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். திரிபேர்ட்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த…

Read More

நேர்மைக்கு கிடைத்த வெற்றி!(குட்டிக்கதை)

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை…

Read More

உங்க வீட்டுல A/C இருக்கா… உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்!

உங்க வீட்டுல A/C இருக்கா… உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்! நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக… இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல், குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி, ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல்…

Read More

வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத நண்பர்களின் கனிவான கவனத்திற்கு..!

வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத நண்பர்களின் கனிவான கவனத்திற்கு..! மேலும் பன்றி இறைச்சி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத மற்ற மதத்தவருக்காக அந்த இறைச்சி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு (சவுதியை தவிர்த்து)அங்காடிகளில் முஸ்லிமல்லாதவர்களுக்காக என்று அறிவிப்பு செய்து விற்பனை செய்யப் படுகிறது. பிழைப்புக்காக இந்த நாடுகளுக்கு வந்திருப்பவர்களாக இருப்பினும் அவர்களது மத மற்றும் தனி சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்காமல் உரிமை வழங்கியிருப்பதன் மூலம் இந்த நாட்டு அரசுகளின் சகிப்புத் தன்மையை…

Read More

குடிப்பழக்கத்தால் உருவாகும் நோயில் இலங்கைக்கு உலக தரவரிசையில் முதலிடம் …????

உலகில் கல்லீரல் பாதிப்படையும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரோசிஸ் என அழைக்கப்படும் கல்லீரல் பாதிப்படையும் நோய் குடிப்பழக்கத்து அடிமையானவர்களை அதிகம் ஆட்கொள்ளும் ஒரு நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஒரு லசத்துக்கு முப்பத்து மூன்று பேருக்கு இந்த நோய் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை இந்த நோயையும் குடிப்பழக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த…

Read More

பாகிஸ்தான் படை யெமனில் தரை இரங்குமா??

பொத்துவில் நிருபர் இர்ஸாத் ஜமால்தீன் சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டுப்படை யெமன் நாட்டின் பெரும் நிலப்பரப்பினை ஆக்ரமிப்புச் செய்து, அங்கு கிழர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹெளதிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது. சவுதி அரசாங்கமானதுதமது கூட்டுப்படையில் இணைந்து கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு  அழைப்பு விடுத்த போதும், பாகிஸ்தான் தரப்பிடமிருந்துஇது வரை சாதகமான எதுவிதமான சமிஞ்சைகளும்காட்டப்படவில்லை. இவ் விடயம் தொடர்பான கருத்துப் பரிமாற்றம் பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,  அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போது, தமது படையினரை அனுப்புவதை தவிர்த்து…

Read More

இலங்கை சமூகபணிக்கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் ….

இலங்கை சமூகபணிக்கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் நுழைவுக்கான தகைமைகள் 01. இளமானிப் பட்டக் கற்கைக்காக முதலாவது வருடத்திற்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாடு பின்வரும் தகைமையின் அடிப்படையில் இடம்பெறும். a. பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்சத் தகைமையைப் பூர்த்தி செய்திருத்தல். b. ஆங்கில மொழியில் செயற்படுவதற்கான நல்ல திறமை. 02. நிறுவனத்தின் சமூகப் பணி டிப்ளோமா​வை கற்றுப் பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் பின்வரும் அடிப்ப​டைகளின் கீழ் தெரிவுசெய்யப்படுவர். a. சமூகப் பணி டிப்ளோமாவில் திறமைச் சித்தி b. ஆங்கில மொழியில் செயற்படுவதற்கான…

Read More

உலகையே வியப்பில் ஆழ்த்திய, புருனேய் நாட்டு மன்னருடைய, மகனின் தங்கத் திருமணம்

புருனேய் (Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான புருனேய் நாட்டு மன்னர், தனது 6 வது மகனான அப்துல் மாலிக் (Abdul Malik-31) என்பவருக்கு திருமணம் நிச்சயத்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று புருனேய் தலைநகரில் உள்ள Istana Nural Iman அரண்மனையில்,உலகமே வியக்கும் வகையில் ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்துள்ளது. தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேஷ நாற்காலிகளை நோக்கி மணமக்கள்…

Read More

5 வேளை தொழுபவர்களுக்கே, இனி திருமண உதவித்தொகை – சவுதி அதிரடி

செல்வ வளமை மிக்க சவுதி அரேபியாவில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் பெண்களுக்கு சீதனத்தொகை (மஹர்) மற்றும் தங்க நகைகளை அளிக்க வேண்டும். இதற்கு வழியில்லாமல் சற்று கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களின் திருமண செலவுக்கு தேவையான தொகையை சவுதி அரசின் சமூக நலத்துறை அமைச்சகம் அளித்து வருகின்றது. இந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சமூக மேம்பாட்டு துறைக்கு சவுதியில் உள்ள 21 தொண்டு நிறுவனங்கள் இதற்கான பரிந்துரைகளை அனுப்பி வைக்கின்றன. மணமகனின் குடும்பச் சூழல், குணநலன், நன்னடத்தை…

Read More