Headlines

இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவும்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜப்பான் தயார் என, அந்த நாட்டின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் மினோறு கியுச்சி தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று நாட்டுக்கு வந்த இவர், இன்று காலை ஜனாதிபதியை சந்தித்தவேளையே இவ்வாறு கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நீண்டகாலமாக அபிவிருத்தி சார்ந்த உதவிகளை வழங்கி வரும் ஜப்பான், சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது நன்றி…

Read More

மக்களின் வரிப்பணத்தை வீணடித்த அமைச்சர்: கிடைத்தது தேசிய விருது!

கனடாவில் மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் வீணடித்ததற்காக ஒன்றாரியோவின் லண்டன் நகரத்தின் முன்னாள் முதல்வருக்கு தேசிய Teddy Waste விருது வழங்கப்பட்டுள்ளது. வரியிறுப்பாளர்களின் கனேடிய சம்மேளனம் வரிப்பணத்தை வீணடிப்போரை சுட்டிக் காட்டும் வகையில் வருடந்தோறும் இந்த‌ விருதுகளை அறிவிக்கிறது. தற்போது முன்னாள் சமஷ்டி அமைச்சரும், ஒன்றாரியோவின் லண்டன் நகரத்தின் முன்னாள் முதல்வருமான ஜோ ஃபொன்ரானாவுக்கு (Joe Fontana) தேசிய Teddy Waste விருது வழங்கப்பட்டுள்ளது. தமது மகனின் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவில் ஆயிரத்து எழுநூறு டொலரை, தமது…

Read More

மகள் அறியாமல் செய்த தவறை மன்னியுங்கள்: சிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற பெண்ணின் தாயார் …

சிகிரியா குகையிலுள்ள சுவரோவியம் ஒன்றில் கையெழுத்திட்ட குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ‘அறியாமல் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ள எனது மகளை மன்னித்து விடுதலை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்று அந்த யுவதியின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார். சக நண்பர்களுடன் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த 28 வயது யுவதி, மூன்று வாரங்களுக்கு முன்னர் கைதானார். அவரை தம்புள்ளை நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தியதை அடுத்து,…

Read More

முஸ்லீம் காங்கிரசின் கொழும்பு பெண்கள் பிரிவின் சர்வதேச மகளிா் தின நிகழ்வுகள்

அஸ்ரப் ஏ சமத் முஸ்லீம் காங்கிரசின் கொழும்பு பெண்கள் பிரிவின் சர்வதேச  மகளிா் தின நிகழ்வுகள்  நேற்று கொழும்பு முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகத்தில்  தாருஸ்சலாமில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சா் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பிணா்கள் அஸ்லம், முத்தலிப் பாருக், மேல் மாகாணசபை உறுப்பினர் அர்சத் மற்றும் மகளிா் உறுப்பினர்களும் கலந்து கொண்டனா்.

Read More

லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம் – சனல் 4

லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். யாழ் வுட் தடுப்பு முகாம் என்றது எங்கே இது தமிழர்கள் தடுப்பு முகாமா என்று நினைக்கவேண்டாம். ஆனால் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது….

Read More

யாழ் முஸ்லிம்களின் வரலாற்று நுால் வெளியீட்டு விழாவுக்கு றிஷாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி

ஊடகப் பிரிவு அஸ்ஸலாமு அலைக்கும். இன்று இடம் பெறும் இந்த நுால் வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த போதும்,தவிர்க்க முடியாதத காரணம் காரணமாக வருகைத்தர முடியாமையினையிட்டு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். வடமாகாண முஸ்லிம்களின் வரலாறு இந்த நாட்டை பொறுத்தவரையில் பதிவு செய்ய வேண்டிய முக்கியமான விடயமாகும்.பல நுாற்றாண்டு கால வரலாற்றைவுடைய வடமாகாண முஸ்லிம்களின் கடந்த கால அரசியல்,சமூக பொருளாதார வரலாறு என்பது நாட்டின்…

Read More

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா!

முகம்மட் பஹாத் பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூறும் ஹிஜாபின் ஊடாகவும் சாதனைகளை செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார் ஃபாத்திமா! வறுமையான குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே ஆர்வ மிகுதியால் விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம். இவரது அறிவையும்…

Read More