Headlines

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை – ரோசி சேனாநாயக்க

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும்  வகையில் சட்டங்களை  கடுமையாக்கவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுவருவதாக  அமைச்சர் தெரிவித்தார். சிறுவர்களை முறையாக பராமரித்து அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக இன்று நாட்டில் காணப்படும் நிலைமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க…

Read More

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏற்படும் விபத்துகளை ஆராய விசேட குழு

லக்ஷ்மி பரசுராமன் விளையாட்டில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் விபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் வாரம் நியமிக்கப்படவுள்ள இந்த குழுவில் விளையாட்டுப் பணிப்பாளர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளடங்குவரெனவும் அவர் கூறினார். அம்பலந்தோட்டை போலான மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் கடந்த 06ம் திகதி இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஈடுபட்டிருந்த வேளை, திடீரென மயங்கி மரணமுற்ற சம்பவம் தொடர்பில்…

Read More

டெங்கினால் காத்தான்குடியில் இருவர் பலி

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு காய்ச்சலினால் கடந்த இரண்டு தினங்களில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7 வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே காய்ச்சலினால் திடீரென உயிரிழந்துள்ளார். சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுமி சனிக்கிழமை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் குறித்த சிறுமி அங்கு…

Read More

முடி­வு­க­ளுக்கு கட்­டுப்­ப­டா­விடின் தலைமை பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டி வரும்

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்­றது. புதிய அர­சாங்­கத்தின் இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்­தினை ஆத­ரிப்­பது தொடர்பில் இந்தக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போது கருத்து தெரி­வித்த பல உறுப்­பி­னர்கள்…

Read More

மஹிந்தவின் ஆட்சியில் உரிய அந்தஸ்து தரப்படவில்லை ; எதிர்க்கட்சி தலைவர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும், நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெப்ரவரி 14 ஆம் திகதியன்று கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக நீடிக்கும் நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து புதிய…

Read More

ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ரணில்

சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், இல்லாமல் போகும் நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். வத்தளை பிரதேச சபை தலைவர் உட்பட பொ.ஐ.ம.கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தியதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read More

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்! பிரதம நீதியரசரிடம் கோரிக்கை

சுவிஸிலிருந்து இளைஞரொருவரே, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் விடுத்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாகவே நாமல் ராஜபக்ச, சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 2010ம் ஆண்டு துஸார, இறுதி சட்டப் பரீட்சையை எழுதிய வேளையில் நாமல் ராஜபக்சவுக்கு தனியான குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து பரீட்சை நடத்தப்பட்டது. இது முழுமையாக சட்டமீறல் சம்பவமாகும். இந்தநிலையில் சட்டப்பரீட்சையின் வினாத்தாள்கள், நாமல் ராஜபக்சவுக்கு முன்கூட்டியே கிடைக்கப் பெற்றதாகவும் துஸார குற்றம் சுமத்தியுள்ளார்….

Read More

பிரிட்டனுக்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்

பிரிட்டனின் உயர் அதிகாரிகள் பலருடன் அமைச்சர் சமரவீர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதேவேளை, பிரிட்டன் விஜயத்தின் பின்னர் அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை இலங்கைக்கு அழைக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது

Read More

மாற்றத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு அமெரிக்கா உதவும்: சூசான் ரைஸ்

இலங்கையில் வெளிப்படைத் தன்மையுள்ள ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கை தொடர்பிலான உரை குறித்த தனது உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை சந்தித்திருக்கும் இலங்கை, மியன்மார், துனீசியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என்றுள்ளார். இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிப்பேச்சாளர் மேரி ஹர்வ், நல்லிணக்கம் மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக…

Read More

விபத்தில் சிக்க முன் டிரான்ஸ் ஏசியா விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது உறுதி!

டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த GE235 என்ற விமானம் 58 பேருடன் புதன்கிழமை தாய்வான் தலைநகர் தாய்பேயில் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களுக்குள் கட்டங்களை உரசியவாறு பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை 40 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்தில் சிக்க முன் அதன் இரு எஞ்சின்களுமே அவற்றிட்கான எரிபொருள் துண்டிக்கப் பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

Read More

மொங்கோலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட மம்மி துறவி இன்னமும் தியான நிலையில்?

கடந்த வாரம் கண்டுபிடிக்கப் பட்ட மொங்கோலியாவில் கோயில் ஒன்றில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருந்த துறவி போன்ற வடிவத்திலுள்ள மம்மி இறக்கவில்லை எனவும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான வருடங்களாக இன்னமும் தியான உணர்விலேயே இருப்பதாகவும் மூத்த பௌத்தத் துறவிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மம்மி துறவி சடலமானது கால்நடைகளின் தோலினால் போர்க்கப் பட்டும் பத்மாசனத்தில் உட்காந்திருப்பது போன்ற நிலையிலும் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. ஏற்கனவே இத்துறவி மம்மி ஒரு மர்ம நபரால் கருப்புச் சந்தையில் விற்கப்படுவதற்காகத்…

Read More

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம்!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம் என்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தனி நபர் ஒருவரின் ஊதியத்தை அறியும் உரிமை யாருக்கும் இல்லை என்று சட்டத்தில் இருக்கும் பட்சத்தில், கணவனின் ஊதியம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்மணி தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தகவல் அறியும் உரிமை ஆணையம், இனி கணவனின் ஊதியத்தை அறிந்துக்கொள்ளும் உரிமை…

Read More