Headlines

முசலி ;பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

மன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெளி பாடசாலையின் அதிபர் ஹபீப் முஹ்பு உவைஸ் தலைமையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட் நேற்றுமாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார். பாடசாலை அதிபர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் அமைச்சர் எங்கள் பாடசாலைக்கு அதிகமான உதவிகளை செய்து உள்ளார் என்றும் இன்னும் எங்கள் பாடசாலை பல தேவைகளை உடைய பாடசாலையாக இருக்கின்றது…

Read More

ஆனந்தக் குமாரசுவாமி மாவத்தை வீதி திறப்பு

அஸ்ரப். ஏ. சமட் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மேயா் முசம்மில் அமைச்சா் கருஜயசுரிய  சுவாமிநாதன் ஆகியோா்  மீண்டும் நெலும் பொக்குனு மாவத்தையை  ஆனந்தக் குமாரசுவாமி மாவத்தை  என மீள  வீதியின் பெயா்பலகையை நேற்று  திறந்து வைத்தனா். -தாமரைத் தடாகம் அமைக்கப்பட்டதன் பின்னர் அதனுடன் இனனைந்த ஆனந்த குமார சுவாமி மாவத்தை வீதியானது மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக மாவத்தை என 2011 டிசெம்பர் 15 பெயர்மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இவ் வீதி மீண்டும்…

Read More

ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு: மைத்திரிபால சிறிசேன

நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவென விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை இவ்வாரத்திற்குள் அமைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு ஏற்ப தாம் இந்நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் போது பட்டம், பதவிகள், தராதரங்கள், அரசியல் கட்சி பேதங்கள் எதுவும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி…

Read More

கடன் மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது: ரவி கருணாநாயக்க

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட அதிகளவான கடன்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனாலும், இவற்றினால் நாட்டு மக்களுக்கு பொருளாதார சுமை அதிகரித்துவிடாதவாறு பார்த்துக் கொள்வது தொடர்பில் புதிய தேசிய அரசாங்கம் அக்கறை செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் க்ரீட் லோச்சன் நேற்று திங்கட்கிழமை நிதியமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

Read More

துமிந்தவிடம் சீ.ஐ.டி 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். சட்டத்தரணிகள் இருவருடன் சென்ற அவரிடம் சுமார் ஆறு மணித்தியாலயங்கள் விசாரணைகள் இடம்பெற்றன.  பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள்  பலவற்றிலிருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவினால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

Read More

இலங்கையர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தின் அதிர்ச்சி விபரம் வெளியானது

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரால், 10.7 மில்லியன் டொலர் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, உலகின் மிகப்பெரிய வங்கிகளில்…

Read More

கிழக்கு மாகாண சபையில் சற்றுமுன் பெரும் அமலிதுமளி

பைஷல் இஸ்மாயில் கிழக்கு மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி பலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்து முடிந்ததும் அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் குழுத் தலைவர் தன்டாயுதபானி உரை நிகழ்த்துகையில், உறுப்பினர்களுக்காக வழங்கப்படும்…

Read More

கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம்

கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரவு-செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு வருடங்கள் வெளிநாடுகளில் தொழில்புரிந்துவிட்டு நாடு திரும்பியதன் பின்னர் ஓய்வூதியத்தை  பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.வித்தானகே கூறியுள்ளார். உத்தேச திட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More

சவூதியில் மூன்று இலங்கையருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையர்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யெமனியர் ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது உடமைகளை கொள்ளையடித்தமை தொடர்பில் இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தண்டனையை குறைப்பது அல்லது நீக்குவது குறித்து தொடர்ந்தும் சவூதி அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார். சவூதி நீதிமன்றில் குறித்த மூவர் மீதான கொலை, கொள்ளைக் குற்றச் சாட்டுக்கள் ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு…

Read More

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகார குறைப்பே தற்போதைய நோக்கம் – ரில்வின் சில்வா

மக்கள் கருத்து கணிப்பின்றி திருத்தத்திற்குள் உட்படுத்த கூடிய, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகார குறைப்பே தற்போதைய நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அதிகார மாற்றமும் மக்கள் சவாலும் என்ற தொனிப்பொருளின் கீழ் கண்டியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் இதன் போது ரில்வின் சில்வா கருத்து தெரிவித்தார். -News 1st-

Read More

முஹம்மது நபி(ஸல்)யை அவமதிப்பதா ? லண்டனில் இஸ்லாமியர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் !

இஸ்லாமிய இறைதூதரான முஹம்மது நபியை அவமதித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட ’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தியுள்ளனர். சார்லி ஹெப்டோவின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் மதநம்பிக்கையை புண்படுத்தியுள்ளது என கூறிய Muslim Action Forum (MAF) சார்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து லண்டனில் உள்ள Downing Street பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அந்த பத்திரிக்கையை கண்டிக்கும் விதத்தில் ‘சார்லி ஹெப்டோ…

Read More