Headlines

என்னை சேர் என கூப்பிட வேண்டாம் – ஜனாதிபதி மைத்திரி

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர். மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும். 100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல….

Read More

கோத்தா வளர்த்த யானைக்குட்டிகள் பின்னவல சரணாலயத்திடம் ஒப்படைப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் வளர்த்து வந்த யானைக்குட்டிகள் இரண்டையும் மீள ஒப்படைத்து விட்டதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ச சட்ட ரீதியாகவே வளர்த்து வந்துள்ளார். எனினும் இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்….

Read More

எனக்கென்று விமானம் வாங்கும் பணத்தை மக்களுக்கு பயன்படுத்துங்கள்; மைத்திரி

ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோகபூர்வமாக விமானம் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டு அந்தப் பணத்தை மக்களின் நலன்புரிக்காக செலவு செய்யுங்கள் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோக பூர்வ விமானம் அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருக்கின்றது.இந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 16மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208கோடி ரூபாவாகும். இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில்…

Read More

ரஷ்ய அதிபர் புதின் மகளின் ரகசியத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட எதிர்கட்சி தலைவர்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினின் மகள் குறித்த ரகசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகள்கள் எகடெரினா(28) மற்றும் மரியா(29) ஆகியோர் பொதுமக்கள் பார்வையில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன படித்துள்ளார்கள், தற்போது எங்கே, என்ன செய்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் அலெக்சீ நவல்னி வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எகடெரினா பற்றிய ரகசியத்தை…

Read More

நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன்: சஜித் பிரேமதாச

செவ்சிறிபாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனது எந்த ஒரு ஒப்பந்தமும் ஒளிவு மறைவுமின்றி விளம்பரப்படுத்தப்படும். எனது அமைச்சின் கீழ் உள்ள அதிகார சபைகள், நிறுவனங்களில் ஒருபோதும் எனது கட்சிக்காரர், சொந்தக்காரர் மற்றும் தோ்தலில் உதவி செய்தவர்களை பணிப்பாளர் சபையில் நியமிக்கப் போவதில்லை. ஒவ்வொரு துறையிலும் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்களையே தேடுகின்றேன். எனது அமைச்சினை நடைபெற்றுள்ள லஞ்சம், நிதி மோசடிகளை சர்வதேச கணக்காய்வாளர் கம்பனி ஆய்வு செய்து வருகின்றது. அதன் பின்…

Read More

ஒபாமாவின் மனைவி ஏன் முக்காடு போடல? வெள்ளை மாளிகை விளக்கம்

சவுதி பயணத்தின் போது ஒபாமாவின் மனைவி மிஷேல் முக்காடு போடாததற்கு வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.சமீபத்தில் சவுதிக்கு ஒபாமாவுடன் பயணம் மேற்கொண்ட அவரது மனைவி மிஷேலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் முக்காடு அணியாததால் சவுதியில் சில அதிகாரிகள் அவருடன் கைகுலுக்க மறுத்து, ஒபாமாவை மட்டும் கைக்குலுக்கி சென்றனர்.இச்செயல் மிஷேலை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மேலும் மிஷேலின் உருவத்தை சவுதி தொலைக்காட்சியில் மங்கலாக்கி ஒளிப்பரப்பட்டது. ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என அந்நாட்டு தொலைக்காட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளது….

Read More

ஜெனீவாவில் புதிய பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பிக்கும்

ஜெனீவாவில் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மற்றொரு பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது தொடர்பாகவும் ஆராய்வார் எனவும் தெரியவந்திருக்கின்றது. 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் அடுத்த கட்டமாகவே இந்தப் பிரேரணை அமைந்திருக்கும் எனவும்,…

Read More

இரட்டை கோபுர தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்ப்பில்லை: இஸ்றவேலர்களின் குருநாதர் ஸ்டீபன் அதிரடி!

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்குதலாகும். இந்த தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் பழி முஸ்லிம்கள் மீது சுமாத்தப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு போரையே அமெரிக்க நடத்தி முடித்திருக்கிறது. ஆனால், இந்த தாக்குதல் யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற உண்மையை ஒரு யூதகுருவே சில தினங்களுக்கு முன் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். பிரிட்டனை சார்ந்த ஸ்டீபன் ஸீஸர் என்ற அந்த யூத குரு செப்டம்பர் 11 தாக்குதல் முழுக்க முழுக்க…

Read More

அமைச்சரவை எண்ணிக்கை குறைக்க தீர்மானம்

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை தடுக்க 30ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்தியமைக்கும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இம் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் கீழ்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட…

Read More

பஸ் கட்டணங்கள் குறைப்பு

அனைத்து பேருந்து கட்டணங்களும் இன்று முதல் 8 தொடக்கம் 10 சதவீதம் அளவில் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, மிகக்குறைந்த பேருந்து கட்டணமான 9 ரூபா என்ற தொகை 8 வாக குறைக்கப்படவுள்ளது. 13 ரூபாவான கட்டணம் 12 ரூபாவாகவும், 18 ரூபா முதல் 34 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவாலும், 37 ரூபா முதல் 41 ரூபா வரையான கட்டணங்கள் 3 ரூபாவாலும் புதிய திருத்தத்தின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன.அதேவேளை, 44 ரூபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள்…

Read More

ரஷ்ய நூலகத்தில் பெரும் தீ விபத்து: ஒரு மில்லியன் அரிய ஆவணங்கள் சேதம்

ரஷ்யாவின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் சமூக விஞ்ஞானங்களுக்கான அறிவியல் தகவல் நிறுவனத்திற்கு (ஐஎன்ஐஓஎன்) சொந்தமான இந்நூலகம் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 21500 சதுர அடி அளவிற்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த நூலகத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆவணங்கள் உட்பட 10 மில்லியன் ஆவணங்கள் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த…

Read More

மொரகஹந்த நீர் விநியோக திட்டத்தில் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம்

மொரகஹகந்த நீர் விநியோகத்திட்டத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக விஷேட  விசாரணைக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் அவர்! மொரகஹ வேலைத் திட்டத்தில் கடந்த அரசு காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளது மட்டுமின்றி இதனால் பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.  எனவே,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்தாலோசித்து அவரின் ஆலோசனைக்கமைய பூரண விசாரணைகளை…

Read More