Headlines

சிக்கிய ஆயுதங்கள் யாருடையது?

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக்களஞ்சியத்தை பொலிஸார் திறந்துள்ளனர். அங்கு மறைத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாநாட்டு மண்டப வளாகத்தில் ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான 23 கொள்கலன்கள் காணப்படுகின்றது. இதில் அதி நவீன ஆயுதங்கள் காணப்படுகிறது. எனவே இந்த ஆயுதங்கள் எதற்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…

Read More

இராணுவ சூழ்ச்சி குறித்த அறிக்கை விரைவில்?

தேர்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சூழ்ச்சி குறித்த விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற இணக்கம் இன்று கூடிய தேசிய நிறைவேற்று சபையில் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியுற்றால் அதிகாரத்தை வழங்காதிருக்க சூழ்ச்சி செய்தமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இரகசிய பொலிஸார் விசாரணை செய்து உரியவர்களிடம் வாக்குமூலம் பெற்று ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால இராஜினாமா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான மைத்ரிபால சிறிசேன, தற்போது நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

2 வாரங்களுக்குள் தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில்

அஸ்ரப் ஏ சமத் ஊடக அமைச்சின் செயலாளர் கருனாதிலக்க பரணவிதாரண – இந்த நாட்டில் வாழும் ஒரு சாதாரண பிரஜை ஒர் அரச நிறுவனத்திற்குச் சென்றோ அல்லது அரசாங்கத்தின் செயற்பாட்டை அறிந்து கொள்ளக் கூடிய வகையில் அடுத்த 2 வாரங்களுக்குள் தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அனுமதி பெறப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என ஊடக அமைச்சின் புதிய செயலாளர் கருணாதிலக்க பரணவிதாரண தெரிவித்தார். மேற்கண்டவாறு கொழும்பு உதைபந்தாட்டச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நல்லாட்சியும்…

Read More

கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவின் ஆலோசகர்!

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசகராகவும் ஜாதிக்க சயித்திய அமைப்பின் முக்கியஸ்தருமான டொக்டர் வசந்த பண்டாரவை நேற்று பொலிசார் கைது செய்தனர். கடந்த மாதம் தேர்தல் காலத்தில் ஜ.தே.கட்சி தலைமைக் காரியாலயத்தில் முன் ஆர்பாட்டத்திற்காக ஆதரவாளர்களைக் கொண்டு வந்து காரியாலயத்தின் சொத்துக்களை சேதம் விளைவித்தார். ரணில் மற்றும் மைத்திரி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இரகசிய ஒப்பந்தம்; செய்துள்ளனர் என்ற போர்வையில் ஆர்பாட்டம் மொன்றை சிறிக்கொத்த முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜ.தே.கட்சியின் முறைப்பாட்டுக்கு அமைவாகவே…

Read More

இன உறவை சீர்குலைக்க சிலர் முயற்சி -முல்லைத்தீவு மாவட்ட நகர பிரதேச உறுப்பினர்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த பல வருடங்களுக்கு அப்பால் எமது நாட்டில் எற்பட்டுள்ள இன உறவை சீர் குலைக்கும் வகையில் ஒரு சிலர் செயற்படுவதாகவும் இவர்கள் தொடர்பில் எமது தமிழ் பேசும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மன்னார்.வவுனியா.முல்லைத்தீவு மாவட்ட நகர பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ்.செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்.எம்.ஹஸன்.மன்னார் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஞானராஜ் சோசை.எம்.சஹாப்தீன்.முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர்.எஸ்.எம்.பைரூஸ்.உறுப்பினர்களான மௌலவி…

Read More

சதொசவில் மதுபானங்கள் விற்பனை செய்யத் தடை

நாட்டில் உள்ள அனைத்து சதொச நிலையங்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருட்கள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

Read More

ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியா செல்லும் ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கி வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு செயற்பட்டால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருகிறார். இதையடுத்து பாகிஸ்தான் ஆதரவோடு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு, காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டு, இங்கு பயங்கரமானத் தாக்குதல் நிகழ்த்தவும் திட்டமிட்டு…

Read More

இன்று பாராளுமன்றம் கூடுகிறது; ரணில் விசேட உரை!

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின் பாராளுமன்றம் முதன் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்போது, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், பாராளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை ரணில் விக்ரமசிங்க இன்று உறுதிப்படுத்துவார். சபை முதல்வராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்றுப் பதவியேற்றுக் கொண்டதுடன், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக கயந்த…

Read More

இரு மாகாண ஆளுநர்கள் ராஜினாமா

வட மத்திய மாகாண ,தென் மாகாண ஆளுநர்கள் இன்று ராஜினாமா செய்துள்ளார்கள். தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே ஆகியோரே இன்று இராஜினாமா செய்துள்ளனர்.  இவ்விருவரும் தங்களுடைய இராஜினாமா கடிதங்களை தொலைநகல் மூலமாக  ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Read More

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் துரிதமடையும்: மோடி

இலங்கையின் அமைதி, நல்லிணக்க நடவடிக்கைகளை, அந்நாட்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு துரிதப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.  அப்போது, உலகம் முழுவதும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா மற்றும் அந்நாட்டு பிரதமர் விக்கிரமசிங்கேவுக்கு அவர் பாராட்டுகளை…

Read More

2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி

பொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில் சார்ஜ் ஏற்ற முடியும். 2 நிமிடத்தில் முழுவதும் சார்ஜ் ஆகும் இந்த பேட்டரி மூலம், 5 மணி…

Read More