Headlines

பருத்தித்துறையில் 1000 கிலோ ஆனைத்திருக்கையை பிடித்த நீர்கொழும்பு மீனவர்கள்

முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வலை வீசிய போது, மிகவும் அரிதான வகையிலான ஆனைத்திருக்கை அகப்பட்டுள்ளது. மீனவர்கள் தமது படகை பருத்தித்துறை இறங்குதுறையில் நிறுத்தி ஆனைத்திருக்கையை துண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அரிதான வகை திருக்கை மீனான ஆனைத்…

Read More

கல்முனை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் தாகமொன்று தணிகிறது…!

(டாக்டர் என். ஆரிப்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு கரையோரப் பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டதுமாகும். நீண்ட காலக்குறைபாடு இத்தகைய பிரதேசத்தில் இதுவரை ஜனாஸாக்களை அரச, தனியார் வைத்தியசாலைகளில் இருந்து எடுத்து வருவதற்கான பிரத்தியேகமான வாகனங்கள் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்து வந்தது. முன்னேற்றம் கண்ட இந்தப் பிரதேசத்தில் வாகனங்கள் மலிந்தே காணப்பட்டாலும், ஜனாஸாக்களை தமது வாகனங்களில்…

Read More

சிங்கப்பூரில் தங்கம் வழங்கும் ATM

ஏ.டி.எம். என்றாலே நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தேவைக்கேற்ப எடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரம் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் சிங்கப்பூரில் தற்போது புதிதாக இரண்டு ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பணத்திற்குப் பதிலாக ஜொலிக்கும் தங்கம் வெளிவருகிறது. சிங்கப்பூரில் உள்ள வேர்ல்டு சென்டோசா அண்டு மரியான பே சாண்ட் ரிசார்ட்டில் இரண்டு ஏ.டி.ஏம். மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த சுவிஸ் நகை சுத்திகரிப்பாளர்களால் சுத்தம் செய்யப்பட்ட தங்கத்தை இந்த இரண்டு ஏ.டி.எம். மையங்களும்…

Read More

மியன்மார் விராத்து இலங்கை வருகிறார்..!

28 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் பொதுகூட்டத்தில் தேசிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக பொதுபல சேனா வட்டாரங்கள் தகவல் வெளிட்டுள்ளன. அதேநேரம் மியன்மாரின் சர்ச்சைக்குரியபௌத்த மத அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராத்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Read More

பின்லேடன் மருமகனுக்கு ஆயுள் தண்டனை

உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தாகள் 11-9-2001 அன்று அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் 100 மாடிகள் கொண்டநியூயார்க்கின் இரட்டை கோபுர கட்டிடத்தை மோதி தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்து நொறுங்கியது. 4 விமானங்களில் இருந்த அனைவரும் பலியானார்கள். இந்த தாக்குதலில் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுர கட்டிடங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்தது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது….

Read More

சவுதி அரேபியாவில் வாசிங் மெசினில் சிக்கிய 3 வயது குழந்தை

பெற்றோர்கள் வீட்டில் விளையாடும் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் கொள்வது அவசியம் என்பதை எத்தனையோ விபரீத சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நகரில்  3 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வாசிங் மெசின் மேல் ஏறி நின்று போது தவறி உள்ளே விழுந்து வெளியே வர முடியாதபடி சிக்கி கொண்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களால் மிகுந்த கவனமாக…

Read More

Breaking News மாவனல்லையில் கடைகள் தீப்பிடித்து எரிகின்றன.

மாவனல்லையில் பஸ் ஸ்டான்ட் தரிப்பிட கட்டிடத் தொகுதியில் (பிரதேச சபை கடைத்தொகுதி) சுமார் நான்கு முதல் ஏழுகடைகள் தீப்பிடித்து எரிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.இன்று காலை 11 மணியளவில் இக்கடைகளுக்கு தீப்பிடித்ததாகவும், தற்போது போலீசார், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருவதாகவும் மேலும் தெரிய வருகிறது.தீ விபத்துக்ககான காரணம் இதுவரை தெரியவரவில்லை. தீப்பிடித்த குறிப்பிட்ட கடைதொகுதியில் முஸ்லிம்கள் மற்றும் பெரும்பான்மை சகோதரர்களின் கடைகள் காணப்படுகின்றன.

Read More

இஸ்ரேலின் பிரபல மொசாட் உளவாளி மரணம்

இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் பிரபலமான உளவாளி மைக் ஹராரி தனது 87ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் வெளிநாடுகளில் இருக்கும் பலஸ்தீன போராளிகளை படுகொலை செய்வதில் முன் னணியில் நின்று செயற்பட்டவராவார். ஹராரி, டெல் அவிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்ததாக இஸ்ரேல் குறிப் பிட்டுள்ளது. இவர் 1970களில் மொசாட்டின் முக்கிய உளவு செயற்பாடுகளில் பங்கேற்ற வராவார். 1972 மியுனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேல் வீரர்களை படுகொலை செய்த ஆயுததாரிகளை இலக்குவைத்து கொலைசெய்த மொசாட் உளவு நடவடிக்கையை முன்னெடுத்ததில்…

Read More

முசலி நவீன நகர திட்டமிடல் அமைச்சர் ரிஷாத் கொழும்பில் முக்கிய பேச்சு

மன்னார் – முசலி பிரதேசத்தை நவீன நகராக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க  நகர அபிவிருத்தி அதிகார சபை இன்று விஷேட குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும்  – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்குமிடையில் இன்று கொழும்பில் இடம் பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தே குறித்த குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தம் காரணமாக மிக மோசமாக  அழிந்து போயிருந்த முசலி…

Read More

இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிப்பது யார் என்பதில் ISIS க்கும், ஈரானுக்கும் போட்டி – இஸ்ரேல்

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான போரில் ஈரானின் உதவியைப் பெறுவதற்காக, அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்துவது ஆபத்தானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெருசலேமில் திங்கள்கிழமை கூறுகையில், “”தங்கள் சுய நலனுக்காகத்தான் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்பதில் ஐ.எஸ். அமைப்புக்கும், ஈரானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது” என்றார்.

Read More

முஸ்லிம் இளைஞனின் நேர்மை…!

இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் லத்தீப் என்னும் மாணவன் ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் வசிக்கிறார். 21 09 2014 அன்று காலை அப்துல் லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் அரசு வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவர் எடுக்க நினைத்த பணம் ரூ. 200 தான். இதற்காக தனது ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்திய பின்னர், தனது ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தினார். அப்போது திடீரென அந்த ஏடிஎம் இயந்திர…

Read More

விமான சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மரண தண்டனை

தாய்லாந்து நாட்டின் தற்காலிக பிரதமராக இருந்த யிங்லக் ஷினவாத்ராவின் குடும்ப அரசியலை எதிர்த்து, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2008ல் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தால், அந்நாட்டின் இரு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. கடந்த 2011ல் நடந்த தேர்தலில், யிங்லிக் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, எதிர்க்கட்சியினர் வழக்கு  தொடர்ந்தனர். இறுதியில், கடந்த மே மாதம், யிங்லக், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும்…

Read More