Headlines

ஓட்டமாவடியில் ஹஜ் பெருநாள் தொழுகை

இறைவனின் அருளால் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஓட்டமாவடி எம்.கே.ஏ பெற்றோல் நிலையத்திற்கு முன்பாக சகோதரர் நாஜிம் அவர்களின் வளாகத்தில் இடம்பெற்றது. சகோதரர் :ST.Salahudeen அவர்களால் “ஏகத்துவ எழுச்சிக்கான செம்மல் நபி இப்றாஹீம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது இதில் நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு நபி வழியை நிலை நாட்டினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்.

Read More

சாய்ந்தமருது பிரதேசத்தில் பலஇடங்களில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகைகள்

ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கத்தினையும் மௌலவி முபாறக் நிகழ்த்தினர். இதில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதேசமயம் சாய்ந்தமருது கடற்கரை முன்றலில் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் இலங்கை தௌஹீத் ஜமாஅத்…

Read More

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ் பெருநாள் தொழுகை

(அஸ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ்பெருநாள் தொழுகை மருதானை ஆனந்தாக் கல்லூரி அருகில் உள்ள வைட்பார்க் மைதாணத்தில் இன்று(6) காலை 07.00 மணிக்கு நடைபெற்றது. இப் பெருநாள் தொழுகையை டி.எஸ்.ஜ.என்  ரஸ்லான் மௌலவி அவர்களினால் நடாத்தப்பட்டது. மாளிகாவத்தை, மருதானை பிரதேசத்தின் வாழ் முஸ்லீம் ஆண்கள், பெண்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.

Read More

பலஸ்தீனத்தை அங்கீகரித்த சுவீடன்; இஸ்ரேல் – அமெரிக்கா கடும் கண்டனம்

பலஸ்தீன தேசத்திற்கு சுவீடன் அங்கீகாரம் அளித்துள்ளது. ஐரேப்பிய ஒன்றியத்தின் நீண்டகால உறுப்பு நாடொன்று பலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். “இரு நாட்டு தீர்வே இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினைக்கு ஒரே முடிவாகும்” என்று சுவீடன் பிரதமர் ஸ்டபன் லப்வன் குறிப்பிட்டுள்ளார். இது சர்வதேச சட்டத்திற்கமைய தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரித்த 130க்கும் அதிகமான நாடுகளுடன் சுவீடனும் இணைந்து கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் இருந்தே பலஸ்தீனத்தை அங்கீகரித்த ஹங்கேரி, போலாந்து மற்றும் ஸ்லோவாக்கியாவை…

Read More

முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாட வேண்டும் – ஒபாமா

உலகின் பல பகுதிகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது,  உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும், முஸ்லிம் சகோதரர்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் உதவுவதோடு, பசியை போக்கி, ஏழ்மையை அகற்றும் திருநாளாக அமையும் இந்த பண்டிகையை முஸ்லிம் சகோதரர்கள் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாட வேண்டும். அமெரிக்க மக்களின் சார்பில், அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை…

Read More

பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனிடம் பிரார்த்திப்போம்

ஏ .சி.எஹியாகான் இலங்கையிலும் வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் அனைவரும்  நிம்மதியாகவும், பொறுமையுடனும் வாழ இப்புனித நன்நாளில் நாம் அனைவரும் எல்லாம் வல்லஅல்லாஹ்வை பிரார்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மற்றும் கணக்காய்வுக்கான தேசியப் பணிப்பாளர் ஏ.சி.எஹியாகான் விடுத்துள்ள ஹஜ்ஜூப்  பெருநாள் செய்தியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஹஜ்ஜூப்  பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :- சுமார் முப்பது வருடம் தலைவிரித்தாடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் சூழ்நிலை…

Read More

இப்றாஹீம் நபியின் தியாக உணர்வுகள் எமது உள்ளங்களிலும் மிளிரச்செய்வோம் -அமைச்சர் றிஷாத்தின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஊடகப்பிரிவு உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு,  சுயகௌரவம் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்த , எம்மால் முடிந்த சிறு தியாகம் ஒன்றுக்கான ஆளுமையும் மனோ நிலையும் எம்மில் ஏற்பட இத்தியாகத் திருநாளாம் புனித ஹஜ்பெருநாள் தினத்தில் உறுதி  பூண்டு பிரார்த்தனையிலும் ஈடுபடுவோம். அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கபட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு இறைதூதர் இப்றாஹீம் நபி அவர்களினதும் அவர்களது குடும்பத்தினதும் தியாகச்செயற்பாடுகளை நினைவு கூறும் இந்நாளில் எமது…

Read More

ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சிமாற்றம்- முஜிபுர் ரஹ்மான் பரபரப்பு பேட்டி

எந்தத் தேர்தல் வந்தாலும் அதற்கு முகங்கொடுக்க ஐ.தே.க. தயார்படுத்தல்களை கீழ்மட்டத்திலிருந்து செய்துவருவதோடு இதற்கான பல வேலைத்திட்டங்களையும் ஒழுங்கு செய்துவருகின்றது. தற்போது மக்க ளுக்கு அரசின் மீது வெறுப்பும், ஐ.தே.க. மீது நம்பிக்கையும் வந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலு டன் ஆட்சியை ஐ.தே.க. மாற்றியமைக் கும் என்று மேல் மாகாணசபை உறுப்பி னர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இனவாத செயற்பாடுகள் மற்றும் தற் போதைய அரசியல் நிலவரங்கள் தொடர் பாக “சுடர் ஒளி’க்கு அவர் வழங்கிய பேட்டி கீழே…

Read More

பாராளுமன்றத்தில் குண்டர்களாம்; கண்டு பிடித்த பொதுபல சேனா

நாடாளுமன்றத்தில் குண்டர்கள் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமது கொள்கைகள் மிக தெளிவாக உள்ளன. நாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை ஏற்க தயாராக இருந்தால், கட்சி, நிறம், சின்னம் அல்லது இன என்ற வேறுபாடு இல்லாமல் பொதுபல சேனா ஆதரவளிக்கும். பொதுபல சேனாவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கொள்கைகள் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பை அனுப்பி வைக்க உள்ளது. பொதுபல சேனாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும்…

Read More

சட்டவிரோத இஸ்ரேலிடம் 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் பலஸ்தீன்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சிதைந்து போன பாலஸ்தீனத்தின் காசா நகரை புதுப்பிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது ஜூலை 8ல் காசா பகுதியில் பயங்கர தாக்குதலை இஸ்ரேல் துவக்கியது. 50 நாட்கள் நடந்த தாக்குதலில், காசாவின் பெரும்பகுதி சிதைந்தது. பாலஸ்தீன மறுகட்டமைப்புக்காக நன்கொடையாளர்கள் மாநாடு, அக்., 12ல், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடக்க உள்ளது. அதில், பாலஸ்தீனம் ரூ.24 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்க உள்ளது.

Read More

போராளிகளின் பிடியில் லிபியா (வரைபடம் இணைப்பு)

1.சிவப்பில் இருப்பது :  லிபியாவின் உண்மையான புரட்சியாளர்கள் வசமுள்ள பகுதிகள். கடாபிக்கேதிராக போராடி உருவாக்கிய புரட்சியை பாதுகாக்கும் புரட்சிப் படைகள்தான் லிபியாவின் பெரும்பாலான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2.மஞ்சளில் இருப்பது :  இந்தப் புரட்சிப் படைகள் ஏனைய குழுக்களுடன் இணைந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலப்பகுதி. 3.பச்சையில் இருப்பது: புரட்சியைக் தோற்கடிக்க கலீபா ஹப்தர் எனும் முன்னால் இராணுவ ஜெனரலின் படைகள் வசமுள்ள நிலப்பகுதி. இந்த அமெரிக்க ஏஜென்டை வைத்து லிபிய புரட்சியை புதைகுழிக்குள் தள்ள எமிரேட்ஸ், சீசி…

Read More