Headlines

சிறுவர் ,முதியோர், மாற்றுத்திறனாலிகள் தின விழா (படங்கள் இணைப்பு )

ஜஹான்ஸர்  சிறுவர் ,முதியோர், மாற்றுத்திறனாலிகள் தின விழா இன்று 2014.10.09 செட்டிக்குளம், பிரதேச செயலகத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் வெகு விமர்சையாக நடை பெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்  

Read More

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய போகும் மஹிந்த ராஜபக்ச – கயந்த கருணாதிலக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் எனத் தெரிந்து கொண்டே சிலர் பொய்யாக பிரச்சாரம் செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் ஜனாதிபதி வெற்றியீட்டுவார் என அரசாங்கத்தினால் ஒரம் கட்டப்பட்டுள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் கூறுவது மனச்சாட்சிக்கு இணக்கமாகவல்ல. ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய சாத்தியமில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். சிரேஸ்ட…

Read More

கற்பழிக்க முயன்றவனை கத்தியால் குத்திய பெண்ணுக்கு தலை துண்டிப்பு

ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார்.

Read More

ஐக்கிய தேசிய கட்சிக்கு சரத் பொன்சேக்காவின் ஆதரவு..??

நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, நேர்மையான பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பதா என்பனவே இந்த மூன்று விடயங்கள் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ராஜகிரிய மெட்டி அம்பலம பகுதியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்…

Read More

இலங்கை விமானத்திற்கு நடுவானில் இயந்திரக் கோளாறு…!

இலங்கையின் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து கொழும்பு புறப்பட்ட விமானமே இவ்வாறு நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் ஓர் என்ஜின் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எயார்பஸ் ஏ320 ரக விமானமே இவ்வாறு இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. இந்த விமானத்தில் 142 பேர் பயணித்துள்ளனர். விமானம் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே இயந்திர கோளாறை கண்டு கொண்ட விமான ஓட்டி மீளவும் விமானத்தை…

Read More

ஆங்கில தினப் போட்டியில், தேசிய மட்டதிற்கு பாத்திமா ஷிம்றா தெரிவு

சுலைமான் றாபி அண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டியில் (English Day) நிந்தவூர் மினா பாடசாலையில் தரம் 08இல் கல்வி பயிலும் மாணவி செல்வி எம்.ஜே. பாத்திமா ஷிம்றா கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் பங்கு பற்றி 02ம் இடத்தினைபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். மேலும் ஆங்கில தினப்போட்டியில் இம்மாணவி கோட்டம், வலையம் மற்றும் மாவட்ட மட்டங்களில் முதல் இடத்தினைப்பெற்று மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்காக…

Read More

தமிழர்கள், பொதுபல சேனாவுடன் கொள்ளும் உறவு ஒரு எச்சரிக்கையாகும்…!

த. மனோகரன் நாட்டு மக்களிடையே சமத்துவம், இணக்கப்பாடு, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, மதிப்பளிப்பு போன்றவை இருந்தால் மட்டுமே நாடு வளம் பெறும். முன்னேற்றமடையும். இதைவிடுத்து இனப்பகை, எதிர்ப்புணர்வு, புறக்கணிப்பு, அடக்குமுறை  போன்றவை மேலோங்கி செயற்பட்டால் நாடு அல்லல்படும். அவலப்படும். இதற்கு நமது நாடும் சான்றாகவுள்ளது. எனவே,  இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முடிவுகட்ட நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் முன்வர வேண்டும். நாட்டின் இன்றைய தேவையும் அதுவாகவேயுள்ளது. இதற்குத் தடையாக இருப்பவர்கள்,  ஊறு செய்பவர்கள், அதிகார நோக்கம் ö0காண்டவர்கள்…

Read More

2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 24 இல்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும்  24ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி  முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர்…

Read More

தனியார் பாடசாலை மாணவர்கள் அரச பாடசாலைகளில் உயர்தரம் கற்கலாம்

தனியார் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பொதுதராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்களை அரசாங்க பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு அனுமதிப்பது குறித்த சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குறித்த பிரச்சினை இந்த வாரத்தில் கடும் வாக்குவாதங்களுக்கு உட்படும் பிரச்சினையாக இருக்கும் என்று கல்வி அமைச்சின் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த சுற்று நிருபத்தை உடனடியாக அனுப்புமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கட்டளையிட்டுள்ளார். எனினும் கடந்த…

Read More

மோடியை சந்திக்கப் போகும் பொதுபல சேனா

13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாக அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு…

Read More

நான் எதிர்பார்த்தது போலவே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது: சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவி்ல்லை. இது நான் எதிர்பார்த்தது தான். காலையில் எனது ரிவிட்டர் வலைத்தளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யாதது…

Read More

ராஜபக்ஷ படையணியைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

ஊடகபிரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான படையணியைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள்  அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்னாண்டோவிடம் ஜனாதிபதி…

Read More