Headlines

உலகின் முதல் `செல்பி’

`செல்பி’ புகைப்படம் 175 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகியுள்ளது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்ளும் ‘செல்பி’ முறை தற்போது பிரபலமாகி விட்டது. தொலைபேசி- கமெரா மூலம் அவரவர் தங்களை பலவித கோணத்தில் புடகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த ‘செல்பி’ புகைப்படம் எடுக்கும் முறை கடந்த 175 ஆண்டுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அமெரிக்காவின் பிலாடெல்பியர் நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839ஆம் ஆண்டில் முதல் ‘செல்பி’ புகைப்படத்தை எடுத்துள்ளார். இவர் தனது தந்தையின் கடையை…

Read More

மங்கள இணைந்தால் அமைச்சரவை மாற்றம்?

சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது. மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம்…

Read More

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)

ஏ.எச்.எம். பூமுதீன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு நேற்று (08/11/2014) விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் இவ் வைத்தியாசலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சிற்றூளியர்களுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்குபற்றினார். அத்துடன் இவர்களின் தேவைகள் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட ரிப்கான் பதியுதீன் அவற்றினை மிக விரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கினார்.

Read More

அ.இ.ம.கா. வின் பிரான்ஸ் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு (படங்கள் இணைப்பு)

ஏ.எச்.எம். பூமுதீன் ஐரோப்பிய நாடான பிரான்ஸில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரான்ஸ் கிளைத்தலைவராக இஸ்ஸத் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அ.இ.ம.கா வின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் முன்னிலையில் இத் தெரிவு இடம்பெற்றது. அதே நேரம் பிரான்ஸ் கிளையின் செயலாளராக ரமழானும் பொருளாளராக ஜவாமித்தும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக லாஹீர், சுயீர் மற்றும் முகம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்ட்டனர்….

Read More

இலங்கை எப்படி ஆளப்படவேண்டும் என்பதை எந்தவொரு கட்சியாலும் நிர்ணயம் செய்ய முடியாது

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்ட இன்றைய ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொண்டுவந்து விடமுடியாது. தேர்தல் என்பது ஒரு நாடகம்.முதலாளித்துவத்தையும் தாராளமயமாக்கலையும் நிராகரித்துவிட்டு எந்தவொரு ஆட்சியாளராலும் இன்று அரசியல் கட்சி நடத்தமுடியாது என்பதை வைத்தே இதனைப் புரிந்துகொண்டு விடமுடியும். எந்தவொரு அடிப்படை மாற்றத்தையும் தேர்தல்கள் மூலம் கொண்டுவந்துவிடமுடியாது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி தொடங்கி சமீபத்தில் அரபுலக நாடுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் வரை அனைத்துமே ஜனநாயகத்தை…

Read More

சம்மாந்துறையில் O/L மாணவர்களுக்கான குழு முறை கணிதப் பாட விசேட பயிற்சிப் பட்டறை

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 05.11.2014  ம் திகதி புதன் கிழமை சம்மாந்துறை IIFAS அமைப்பின் அனுசரனையிலும் 07.11.2014 ம் திகதி வெள்ளிக் கிழமை சம்மாந்துறை செப்கோ அமைப்பின் அனுசரனையிலும் குழு முறைப் பயிற்சிப்  பட்டறை மொறட்டுவை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பு மாணவர்களின் பூரண வழிகாட்டல்களின் கீழ் நடாத்தப் பட்டது. இன் நிகழ்விற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த கணிதத்துறையில் பல்கலைக் கழகங்களுக்கு தேர்வான 2011,2012,2013 ம் ஆண்டு மாணவர்கள் வர…

Read More

பேர்லின் சுவர் இடிக்கப் பட்டு 25 வருட நிறைவு

1945 ஆம் ஆண்டில் 2 ஆம் உலகப் போரில் ஜேர்மனி தோல்வியுற்றதை அடுத்து 4 துண்டுகளானது. இதில் மூன்றை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை கட்டுப் படுத்தியதுடன் இவை அனைத்தும் இணைந்து பின்னர் மேற்கு ஜேர்மனி ஆனது. இந்த நாடுகளுக்கு நட்புடன் திகழாத சோவியத் யூனியன் 4 ஆவது பாகத்தை கட்டுப் படுத்தியதுடன் அப்பாகம் பின்னர் கிழக்கு ஜேர்மனி ஆனது. மேலும் இவை தமக்கிடையே பிரிக்கப் பட்ட பகுதிகளை ஆள்வதற்காக தலைநகர் பேர்லினில் மிகப் பெரிய…

Read More

வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம்

புனித பாப்பரசரர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்த மாத இறுதியில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். பாப்பரசரர் பிரான்ஸிஸ் இலங்கையில் விஜயம் செய்யவுள்ள மருத மடு தேவாலயம் மற்றும் கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கவுள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, பாதுகாப்பு…

Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (08) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. மேலும் வடமேற்கு கடலோரப்பகுதிகள் அதிகளவில் கொந்தளிப்புடன் காணப்படலாம் எனவும் வடக்கு  கடலோரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 10-30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இக்காற்றின் வேகம் சுமார் 50 கிலோ மீற்றர்…

Read More

மீனவர்களிற்கு தூக்கு : திங்கள் மேல் முறையீட்டு மனுதாக்கல்

இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவுள்ளது. இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்களும் போதை பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதாக இருந்தது….

Read More

இலங்கை மீது ஐ.நா. கடும் அதிருப்தி!

இலங்கையில் இடம் பெற்றதாக  கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் நம் பகத்தன்மை மீது இலங்கை அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ய­யிட் அல் ஹுஸைன் நேற்றைய தினம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்துடன், ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வரும் மனித உரிமைக்காப்பாளர்கள் மற்றும் தனிநபர்களை அச்சுறுத்தி அடிபணியவைக்கும் முயற்சிகளையும் அவர் கண்டித்துள்ளார். “”விசாரணைகள்…

Read More

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விளையாட்டு தளபாடங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியில் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள் உட்பட 19 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்பட்ட 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு…

Read More