Headlines

வெலிகம ஆற்றில் மூழ்கிய மாணவன் முஹம்மத் ரிமாஸ் ஜனாஸாவாக மீட்பு.

-Faseeh Weligama- நேற்று வெலிகம பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது மூழ்கிய மாணவன்  முகம்மத் ரிமாஸ் நேற்று இரவு ஜனாஸாவாக மீட்கபப்ட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நேற்று பகல் வேளை (11) எதிர்பாராதவிதமாக இவர் ஆற்றில் மூழ்கியதை தொடர்ந்து இவரின் நண்பர்கள் மற்றவர்களின் உதவியுடன் இவரை தேட முயற்சித்து முடியாமல் போய்  ஊரின் அனைத்து தரப்பினரும் இணைந்து தேடி நேற்று இரவு வேளையில் ஜனாஸாவை மீட்டுள்ளனர். இன்று காலை…

Read More

எபோலா நோய்க்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த டாக்டர் குணமடைந்தார். அமெரிக்க மருத்துவமனை சாதனை

எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த டாக்டர், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இதையடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோய், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நோயால் இதுவரை 5,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 13,000க்கும் மேற்பட்டோர் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எபோலா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நோயை தடுக்க…

Read More

100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில்

100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பதிவுகள் இல்லாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 தொடக்கம் 2012ம் ஆண்டு காலப்பகுதி வரை, பல்வேறு கட்டங்களாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக, அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. அவர்களில் 1995ம் ஆண்டு வரை 99,469 பேர் திருப்பியனுப்பப்பட்ட போது, சில அகதிகள் வேறு நாடுகளுக்கு தாங்களாகவே சென்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது….

Read More

இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் சென்றவர்களின் கவனத்திற்கு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்     முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதில் பதிவுசெய்யப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களினூடாக இவ்வருடம் (2014ஆம் ஆண்டு) ஹஜ் கடமைகளை மேற்கொண்டவர்கள் தாங்கள் பயணித்த முகவர்கள் தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவை தொடர்பான விபரங்களை பதிவுத் தபால் மூலம் ‘பணிப்பாளர்’ முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலக்கம் 180, டீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரிக்கு 2014.11.30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் கேட்டுக்கொள்கின்றார்.

Read More

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2013 வருடாந்த பரிசளிப்பு விழா 11-11-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் கலந்து கொண்டார். இதன் போது மேற்படி பாடசாலையில் கல்வி கற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ,கல்விப் பொதுத் தராதர…

Read More

பிரதமர் ஆத்திரம் – பாராளுமன்றத்திலிருந்தும் வெளிநடப்பு!

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு பேர­வை­யி­னரால் இலங்­கைக்கு எதி­ராக விசா­ர­ணை­களை மேற் கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட சர்­வ­தேச விசா­ரணைக் குழுவை எதிர்த்து ஆளுந் தரப்­பி­னரால் பாரா­ளு­மன்­றத்தின் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை மீதான விவா­தத்தில் தமது உரையை நிகழ்த்தப் போவ­தில்லை என்று தனது எதிர்ப்பை சபையில் வெளி­யிட்ட பிர­த மர் டி.எம். ஜய­ரத்ன தனது ஆச­னத்­தி­லி­ருந்து வெளி­யேறிச் சென்றார். விவா­தத்தில் தமக்­கு­ரிய நேர­மா­னது தலைமை ஆச­னத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவுக்கு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக ஆத்­தி­ர­ம­டைந்தே பிர­தமர் ஜய­ரத்ன இவ்வாறு சபையை விட்டு…

Read More

பல்டி அடித்தால் 50 மில்லியன் – முழு குடும்பத்திற்கும் ஐரோப்பாவில் பிரஜாவுரிமை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் 11-11-2014 நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இதன்முதல் கட்டமாக தம்மை 50 மில்லியன் ரூபாய்களுக்கு விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்தாக மேல் மாகாண சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் நடிகருமான நளின் பிரதீப் உடவல குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் தமது முழுக்குடும்பத்துக்கும் கனேடிய, அவுஸ்திரேலிய அல்லது நெதர்லாந்து பிரஜாவுரிமையை பெற்றுக்…

Read More

மஹிந்த மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியும்

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவது உறுதியாகியுள்ளது. தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்களுக்கும் தேர்தல் திணைக்களத்தினால் நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அனேகமாக ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்பாக தேர்தல் இடம்பெறலாம் என…

Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.

Read More

தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது – அமைச்சர் றிஷாத்

முகம்மட் ரிபாக் தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது. மாறாக அரசின்,  கொள்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான ரிசாத் பதியுதீன், கடந்த ஐந்து வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டம் பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு மானிய விலையில் மோட்டர் சைக்கில் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்;கிழமை இடம்பெற்ற போது…

Read More

வாகன விபத்தில் 50 பேர் பலி

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில்  50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைர்பூர் நகருக்கு அருகில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று  எதிரே வந்த டிரக் வண்டியொன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மாலகவிற்கு இன்றும் பிணை மறுப்பு

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம் சஹாப்தீன், அதுதொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்தார். அண்மையில் கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் ஸ்கொட்லாந்து பிரஜைகளை மாலக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More