Headlines

கட்டாரில் “நல்ல இல்லம்” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 13-11-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது. கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!! ஒவ்வொரு வியாழன்…

Read More

மஹிந்தவிற்கு முடியும் என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது: நாமல் ராஜபக்ச

குருணாகல் வதுராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டு கால போரை நிறைவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். எனினும் உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியும் என தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஓர் கட்டமாக குருணாகல் வந்துராகல பிரதேசத்தில் நேற்று…

Read More

பொது வேட்பாளர் அதிகாரத்தை பாராளுமன்றத்திடம் கையளிப்பவராகவே இருப்பார்: மனோ கணேசன்

எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அங்கு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “உண்மையில் எதிரணி பொது வேட்பாளர், வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும்…

Read More

பொய் சொல்லும் இந்திக்க : கண்டுபிடித்த வணிகசூரிய

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது, மாணவி ஒருவரின் முதுகெழும்பில் முறிவு ஏற்பட்டதாக வெளியான தகவலை இராணுவம் மறுத்துள்ளது. கடந்த 9ம் திகதி தலைமைத்துவ பயிற்சியின் போது ஆறு அடி உயரமான சுவர் ஒன்றில் இருந்து குதித்த போது, கௌசல்யா விஷிதமால் என்ற மாணவிக்கு முதுகெழும்பில் முறிவு ஏற்பட்டதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதற்கு மறுப்புத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ருவண் வணிகசூரிய, மாணவிக்கு முதுகெழும்பில்…

Read More

அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் ஆசிரியர் சாதனை

இம்மாதம் 10, 11ம் திகதிகளில் நுவரெலிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்றாஹிம்   (PT கபூர்) சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 51 தொடக்கம் 55 வயது வரைக்குமான பிரிவுப் போட்டியில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சிகளில் தங்கப்பதக்கத்தினையும், 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்று  கிழக்கு…

Read More

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் – ஜே வி பி எச்சரிக்கை

எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று தொடர்பில் அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாக ஜே வி பி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமது பதவி காலத்தில் நான்கு வருடங்கள் பூர்த்தி செய்த பின்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்லவும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் எந்த தடைகளும் இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் எமது sfm பிரிவு ஜே வி பி யின்…

Read More

ங்கள் செல்பி (selfie) போட்டோ எடுப்பவரா..?

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செல்பி (selfie) படங்களை பதிவேற்றுபவராக  நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்பி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். இந்நிலையில், செல்பி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்பி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர்….

Read More

அத்துரலிய ரத்ன தேரரின் பேஸ்புக் – மின்னஞ்சல் கணக்குகள் முடக்கம்!

ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரரின் பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தினை ஊடுருவல் நிறுவனங்கள் ஏதும் செய்யவில்லை என்றும், தனிப்பட்டவர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதியை முறையை ஒழிக்கும் 19வது அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அத்துரலிய ரத்ன தேரர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். அத்தோடு, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அண்மைய…

Read More

தனது குடும்பத்தை காக்க உழைக்கும் 8 வயது சிறுமி

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி தனது குடும்பத்தை காப்பாற்ற ஐஸ்க்ரீம் விற்று சம்பாதித்து வருகிறார். பாத்திமா எனும் அந்த சிறுமி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் ஐஸ்க்ரீம் விற்று வருகிறார். வறுமை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் உள்ள பாத்திமா தனது தந்தை, தாய், தந்தையின் மற்றொரு மனைவி மற்றும் 5 சகோதரிகளுக்காக கடுமையாக உழைக்கிறார். பாத்திமாவின் தந்தை நான்கு…

Read More

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

டைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெறுகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க கோரியும் இல்லையேல் பொது வேட்பாளரின் மூலம் அரசை கவிழ்ப்போம் என எச்சரித்து அதுரலியே ரத்ன தேரர் தலைமையில் ஒரு கூட்டமும் ஜனாதிபதியை ஆதரித்து விமல்வீரவன்ச தலைமையில் ஒரு கூட்டமும் இடம்பெறுகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கக்கோரி எதிர்க்கட்சியின் பொது எதிரணியினர் இன்று கொழும்பில் கங்காராமை முத்தையா மைதானத்தில் எதிர்ப்பு பேரணிக்கூட்டம் நடத்தவுள்ளனர். அரசாங்க…

Read More

‘இஸ்லாமிய தேசத்தில் தங்கம் , வெள்ளியிலான தனது புதிய நாணயத்தை வெளியிடுகிறது ஐ.எஸ். அரசு

ஐ.எஸ்.’ அமைப்பினர் ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அவற்றை ஒருங்கிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். ‘அங்கு இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள் தங்களுக்கென்று தனியாக செலவாணியை அதாவது ரூபாயை உருவாக்கியுள்ளனர். ஈராக்கின் மொசூல், சிரியாவின் நயன்வே மாகாணத்தின் பள்ளிகளில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தங்களின் ரூபாய்க்கு ‘தினார்’, ‘திர்காம்’ என பெயரிட்டுள்ளனர். ‘தினார்’ நாணயம் சுத்த தங்கத்தினாலும், ‘திர்காம்’ நாணயம் வெள்ளியினாலும் தயாரிக்கப்படுகிறது. தங்க நாணயம் 4.3…

Read More

ரணில் – ஷுறா சபை சந்திப்பு

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கும் தேசிய ஷுறாசபையின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக, தேசிய ஷுறா சபைப் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, செவ்வாயன்று (11.11.2014) மாலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஏதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள், அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாக எதிர்க்;கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள், சகவாழ்வு – மீள்இணக்கம், கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள்,…

Read More