Headlines

வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய நிகழ்வு ; பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்

நிகவரெட்டி, வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு 2014.05.22ம் திகதி கல்லூரியின் அதிபர் எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது.  இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  

Read More

ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய இணைந்து செயற்பட தயார்- அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்

நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்வதிலுள்ள சாத்தியப் பாடுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக மலையக முஸ்லிம் கவுன்சிலின் (UCMC) அழைப்பில் பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, வெளிமட எப் சி மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், “ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயார்.” என்று தெரிவித்தார்.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை எல் எஸ்…

Read More

வெலிமடையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மக்கள் சந்திப்பு

  ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வெலிமடை எப் சி மண்டபத்தில்  நடைபெற்றது.  இந் நிகழ்வில் வெலிமடை மற்றும் அயல் பிரதேசங்களின் முக்கிய தலைவர்கள், பிரதேச வாசிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        

Read More

அமைச்சர் ரிசாத் காடளிப்பதாக கூறப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

-கே.சி.எம்.அஸ்ஹர்- அமைச்சர் றிசாத் பதியுதீன் ,வடமாகாணத்தில் இருந்து 1990ல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அம்மக்களின் மக்கள் பிரதிநிதி இம்மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர் இவரே,வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் 23 வருடங்களாகப் படுகின்ற அகதிவாழ்வையும் ,அவல வாழ்வையும் இவரைவிட அதிகம் அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. இவரின் ஒரே சிந்தனை தனது அரசியல் காலப்பகுதிக்குள் எப்படியாவது வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களைக் கௌரவமாக மீளக்குடியேற்றி விடவேண்டும் என்பதே ஆகும். பொதுசன முன்னணி அரசின் வெற்றிக்கும்,ஜனபதிபதியின் வெற்றிக்கும் இவரும்,இம்மக்களும் செய்தவை…

Read More

இலங்கையை சில நாடுகளுடன் மோதவிட சதி!

இலங்­கைக்கு ஆத­ரவு வழங்கும் பாகிஸ்தான், இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­களை எமது அர­சாங்­கத்­துடன் மோத­விடும் சதித்­திட்­டமே போதை வஸ்தை முதன்­மை­ப­டுத்தி எதிர்க்­கட்சி கொண்டு வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யாகும். எனவே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிக்கும் என கைத்­தொழில் மற்றும் வணி­கத்­துறை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (21-05) இடம்பெற்ற ஐ.தே.கட்சி அர­சுக்­கெ­தி­ராக முன்­வைத்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்…

Read More

முஸ்லிம் சமுகத்தின் மீது காடைத்தனத்தை கட்டவிழ்த்து முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்-றிப்கான் பதியுதீன் எச்சரிக்கை

முஸ்லீம் சமுகத்தினை தொடர்ந்து காடைத்தனத்தை கட்டவிழ்த்து அந்தச் சமுகத்தின் பொறுமையைச் சோதிக்க, இனவாத கும்பல்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். அளுத்கமையில் முஸ்லீம் வர்த்தகருக்குச் சொந்தமான நிலையமொன்று எரிப்பு முடிந்து சூடு தனிவதற்கு முன்னரே மாவனல்லையில் மற்றுமொரு முஸ்லீம் வர்த்தகரின் ஹாட்வெயார் கடை ஒன்றை எரித்துள்ளனர். ஏனைய இனங்களுடன் சகோதரத்துவமாக வாழநினைக்கும் முஸ்லீம் சமுகத்தின் மீது பொதுபலசேனா இயக்கம் ஏன் இவ்வாறான காழ்ப்புணர்வுடன் செயல்படுகின்றது. இந்த இயக்கம் கடந்த 3 வருடகாலமாக…

Read More

முஸ்லிம் அமைச்­சர்­க­ளுடன் ஜனா­தி­பதி மஹிந்த சந்­திப்பு

அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்­சர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இவ்­வாரம் நடை­பெ­று­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். இன்று (19) திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின்போது இச் சந்­திப்­புக்­கான திகதி தீர்­மா­னிக்­கப்­ப­டு­மென்றும் அவர் தெரி­வித்தார். இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பொது­பல சேனாவின் போக்கு உட்­பட முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து இச்­சந்­திப்பின் போது பேசப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எஸ்.கே)

Read More

பிரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களை மு.கா ஒன்றிணைக்க வேண்டும்

பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கௌரவிப்பு வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அமீர் அலி பிரிந்து போயிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஓரணியில் சேர்க்க வேண்டிய பொறுப்பு…

Read More

மாவனல்லையில் முஸ்லீம் கடைகளின் தீவைப்பு – விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி ரிசாத் வேண்டுகோள்!

மாவனல்லை சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தினை நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஸ்தல விசாரணைகளினை மேற்கொண்டு வரும் பொலிஸாரிமே இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மாவனல்ல குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் சூத்திரதாரிகளினை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது…

Read More

மாவனல்லையில் முஸ்லிம் வியாபாரியின் வர்த்தக நிலையம் தீக்கிரையானது தொடர்பில் முறையான விசாரனை வேண்டும்

அளுத்கம வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மாவனல்லையில் முஸ்லிம் வர்தகரொருவருக்கு சொந்தமான மற்றுமொரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது .பல சேனாக்களின் வருகைக்கு பின்னர்தான் இந்த சம்பவங்கள் இடம்பெறுகிறது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று 18 அதிகாலை மாவனலை நகரில் தீக்கிரையாகியுள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தொடர்பில் வினவியபோதே மேற்படி தெரிவித்தார் .  மேலும் அவர் தெரிவித்த தகவலில் , மதவாதிகளின்…

Read More

ஊவா மாகாண சபை தேர்தல்! பதுளையில் அமைச்சர் ரிஷாத்

ஊவா மாகாண சபை தேர்தல் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பதுளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.  இதன்போது, பசறை, பண்டாரவளை மற்றும் பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Read More

பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்-ஹுனைஸ் பாரூக்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலிப்பிரதேச சபைத் தலைவர் எஹியான் மற்றும் பிரதேச சபை ஆளும், எதிர் கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் சந்தித்து முசலிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.  இதன் போது எழுத்து மூல மகஜர் ஒன்றும் மாவட்ட…

Read More