Headlines

அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி!– மைத்திரிபால

அலரி மாளிகையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வரும் அதிகாரிகள் ஒவ்வொருவராக விலகிச் செல்கின்றனர். அரசாங்கத்திலிருந்து நான் விலகியதனைத் தொடர்ந்து பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சி என்னுடைய இழப்பினை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த காலங்களைப் போன்று வலுவான ஓர் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமயை காண முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

சர்வதிகாரத்திற்கான பாதை மூடப்படுகின்ற, நேரம்வந்துவிட்டது – ரணில் விக்ரமசிங்க

மக்களுக்கு பெற்று கொள்ள முடியாது போன சகல வெற்றிகளையும், கிடைக்க பெற செய்வதே தமது நோக்கம் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரஜைகள் சக்தி அமைப்பு ஒழுங்கு செய்த ஒன்றிணைந்த மக்கள் சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் தினங்களில் தமது கொள்கை பிரகடனத்தை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read More

தேசிய சங்க சபை முன்வைத்த 15 கோரிக்கைகளை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்

இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தல் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் அந்த சங்கம் நேற்று மைத்திரிபாலவுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்போது சங்க சபையின் பொதுசெயலாளர் வண. பஹியங்கல ஆனந்தசாகர தேரர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கையை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்.. இதனையடுத்து கருத்துரைத்த தேரர், தாம் மைத்திரிபாலவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

நான் வெற்றிபெற்றால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லமாட்டேன் – மைத்திரி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று 2/12/2014 கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தான் பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறித்து குறிப்பிட்ட அவர், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால்…

Read More

கொழும்பில் ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தின விழா நிகழ்வுகள்

ஏ.எஸ்.எம்.ஜாவித் ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐக்கிய இராட்சிய தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய தின நிகழ்வினை கொழும்பு கில்ட்டன் ஹோட்டலில் தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா தலைமையில் இன்று (02) மாலை இடம் பெற்றது. இதன்போது தேசிய தினத்தை கொண்டாடு முகமாக தூதுவர் மற்றும் பிரதம அதிதியின் உரைகளைத் தொடர்ந்து பிரதம அதிதி அமைச்சர் டிலான் பெரேரா, தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா மற்றும் முன்னாள்…

Read More

முசலிப் பிரதேசத்து மக்கள் ஹூனைஸ் எம்.பி க்கு விரைவில் பாடம் புகட்டுவர்! முசலி அ.இ.ம.கா உறுப்பினர்கள் கூட்டறிக்கை

ஏ.எச்.எம்.பூமுதீன் எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ள முசலி பிரதேச சபை தலைவர்  எஹ்யா , பிரதித் தலைவர் பைறுஸ் மற்றும் உறுப்பினர்களான அப்துல் ரஹ்மான் ,சுபியான் ,காமில் ,சுல்பிகார் போன்ற  சபையின் 06 அ.இ.ம.கா உறுப்பினர்களும் ஹூனைஸ் எம்பி , முசலி மக்களுக்கும் வன்னி முஸ்லிம்களுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் செய்த துரோகத்தனத்திற்கு முசலி மக்கள் விரைவில் சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது தொடர்பில் முசலி பிரதேச…

Read More

மஹிந்த அரசிலிருந்து மேலும் 50 வீதமானோர் வெளியேறுவர்

எதிர்வரும் சில தினங்களில் அரசிலி ருந்த மேலும் 50 வீதமானோர் வெளி யேறவுள்ளதாக நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறி ஐக்கியத் தேசியக் கட்சிக்குள் இணைந்து கொண்ட அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் அமைச்ச ரான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, “”அரசிடம் என் சம்பந்தப் பட்ட “பைல்கள்’ (ஆவணங்கள்) இருக் குமானால் 24 மணித்தியாலங்களி லேயே அதனை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசிலிருந்து வெளியேறிய நுவ ரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான…

Read More

கொடூரமான ஆட்சிக்கு முடிவுகட்டுமாறு நாட்டு மக்களுக்கு சந்திரிகா அழைப்பு

மனிதர்களைக் கொலை செய்யும் கொடூரமான அரசின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள் ளோம். எமது இந்தப் போராட் டத்துக்கு அனைவரும் ஆதர வளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்க நேற்று அழைப்பு விடுத்தார். அத்துடன், பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறி சேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நான் உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்தார். கொழும்பு – 07 விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று…

Read More

மைத்திரிக்கு ஆதரவு வழங்கும் ஜாதிக ஹெல உறுமய

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பங்காளியாக இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை ஜாதிக ஹெல…

Read More

மஹிந்தவின் கடையி மூடிவிடுவோம்; அனுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்தவின் கடையில் காலாவதியான பொருள்களே விற்பனையாகின்றன. அவற்றின் விலைகளும் அதிகமானது. அதை விட அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விஷமுண்டு. அதனால் ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர், மைத்திரிபால வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்தும் போராடுவோம். மஹிந்தவின் கடையை மூடுவது சுலபமானதல்ல. சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும்….

Read More

எனது அரசில் குறைகள் உண்டு; மஹிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். (o) நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன். இந்த அரசு குறைபாடுகள் இல்லாமல் இல்லை. போதைப் பொருள் காணப்படுகின்றது அவற்றை நாம் பிடிக்கின்றோம். இவற்றை பத்திரிகைகளில் பிரசூரித்து…

Read More

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடி அம்பலப்படுத்தப்படும் -நவீன்

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசு சீனாவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் ஜனாதிபதியையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (O)

Read More