Headlines

அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா

அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டம் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன. எனவே புதிய விதிகளின்படி தஞ்சம் கோரும் அகதிகள் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். அத்துடன் இவர்கள் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று பப்புவாநியூகினி, நவ்றூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான…

Read More

பாதுகாப்பு குறித்து ஆராய வந்தது வத்திக்கான் குழு

மடு தேவாலயத்திற்கு வருகை தரும் பாப்பரசர் முதலாம் பிரான்சினுடைய பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக வத்திக்கான் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று மடுவிற்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் ஆராய்ந்தனர். ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கை வரவிருக்கும் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் 14ஆம் திகதி மடுவுக்கு வருகைதரவுள்ளார். வருகை தருவதுடன் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளதுடன் மடு மாதா திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசீர்வாதமும் வழங்கவுள்ளார். இதற்கான பாதுகாப்பு தொடர்பாக…

Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் களம் சூடு பிடிக்கிறது; எதிரணி 140 கூட்டங்களை நடத்துகிறது!

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து எதிரணியின் பிரச்சாரக்குழு 140 பிரதான கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அத்தோடு, கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும்…

Read More

மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

டிசம்பர் 8ஆம் திகதியன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இவ்வாறான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தேர்தல் ஆணையாருக்கு அதிகாரம் உள்ளது. எனினும் தற்போதே ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். சுவரொட்டிகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபைக்கும் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு உள்ளுர் நிர்வாகங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படடுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு மாநகர எல்லைக்குள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் மற்றும்…

Read More

ராஜித சேனாரட்னவின் வீட்டில் கொள்ளை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்டிமுல்லவில் அமைந்துள்ள வீட்டில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாவிற்கு அதிகமான பொருட்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. சில கோவைகள், ஐ-பாட், மடிக்கணனி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அநேகமான நேரங்களில் இந்த வீட்டில் எவரும் இருப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

மாத்தறையில் நடைபெற்ற கூட்டதில் எதிரணி பிரமுகர்கள் ஆற்றிய உரைகள்..!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்றையில் நேற்று பொதுக்கூட்டம் இடம்பெற்றது. பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பலவும் இதன் போது கூடியிருந்தன. இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன வருவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே. நாங்கம் மிகவும் சவாலான தேர்தலுக்கு முகங்கொடுத்தாலும் வெற்றி நிச்சயமே என அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…

Read More

பலம் வாய்ந்த வி4 நாடான ஸ்லோவாக்கிய இலங்கையின் வர்த்தகத்தினை முன்னெடுத்துச்செல்ல பல வழிகளில் ஆலோசனை!

பலம் வாய்ந்த வி4 நாடான ஸ்லோவாக்கிய இலங்கையின் வர்த்தகத்தினை முன்னெடுத்துச்செல்ல பல வழிகளில் ஆலோசனை வழங்குகிறது! • இலங்கையில் கோதுமை உற்பத்தியினை தொடங்க ஸ்லோவாக்கிய ஆதரவு • இரு நாடுகளுக்கும் இடையே ஒட்டுமொத்த வர்த்தகம் 29 சத வீத அதிகரிப்பு • இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மறு ஆய்வு • ஸ்லோவாக்கிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கை அடுத்த விஜயம் • தெற்காசியாவில் வணிக மற்றும் முதலீடுகளில் இலங்கைக்கென ஒரு அடித்தளமொன்றினை…

Read More

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத் தளை ஆகிய பகுதிகளுக்கே, தேசிய கட் டட ஆய்வு நிலையத்தால் இந்த எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் குறிப்பிட்டுள்ளது.

Read More

இஸ்ரேல் தனது அணுவாயுதங்களைத் துறக்க வேண்டும் – ஐ.நா பொதுச் சபை

இஸ்ரேல் தனது அணுவாயுதங்களைத் துறக்க வேண்டும் எனவும் சர்வதேச சமூகம் அதன் அணுசக்தி ஆலைகளை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் ஐ.நா பொதுச் சபையான UNGA செவ்வாய்க் கிழமை வலியுறுத்தியுள்ளது. அரபு நாடுகளின் மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் ஐ.நா பொதுச் சபையில் நேற்று இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் 161 இற்கு 5 என்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் மத்தியகிழக்கில் சமாதான நோக்கத்துக்கான அணுசக்திப் பயன்பாடு என்ற உடன்படிக்கைக்குக் கட்டுப் படாத ஒரேயொரு நாடாக இஸ்ரேல்…

Read More

துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு!

ஆளும் கட்சியின் அமைச்சுப் பதவிகளை துறந்து எதிர்க்கட்சியுடன் அண்மையில் துமிந்த திஸாநாயக்க இணைந்து கொண்டிருந்தார். துமிந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 20 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர்கள், திடீரென தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துமிந்த திஸாநாயக்கவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read More

மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்

மாநகர முதல்வர் ஏ.ஜே.எம் முஸம்மிலுக்கு இந்தக்கடிதம் நேற்று அனுப்பபட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற தயங்கினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த கோரிக்கை சட்டக்கடிதத்தில், கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்சவின் 1800 சட்டவிரோத சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமையானது 2006 ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிரான செயல் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Read More

சுகாதார வாரமும் இரத்ததான முகாமும் 2014

“இரத்தம் வழங்கி உயிரைப் பாதுகாத்தல்” (Give Blood Save Life) என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோஷமாக மட்டுமன்றி, அதனை ஒட்டியதாக இரத்ததானம் எனும் உயிர்காக்கும் செயற்றிட்டம் உலகெங்கும் அரசாங்கங்களாலும் நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றது. ஜூன் 14ஆம் திகதி சர்வதேச இரத்தான தினம் பிரகடனப்படுத்தப்பட்டு இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல், விபத்துக்கள், குருதி தொடர்பான நோய்கள் முதலானவை இரத்த தானத்தை அதிகம் வேண்டி நிற்கும் சந்தர்ப்பங்களாகும். இச்சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கானோரை சாவின்…

Read More