Headlines

மஹிந்தவை வாழ்த்துவதா? மோடிக்கு கருணாநிதி கண்டனம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளமைக்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கண்டம் வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ எப்படிப்பட்ட இனப் படுகொலைக் குற்றவாளி என்பதை ஐ.நா. சபை வரை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது. அவரே திரும்பப் பதவிக்கு வர வேண்டுமென்பது, அரசு அலுவலகங்களில் குற்றவாளியின் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவும், அவர் புரிந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஆதரிப்பது போலவே இந்தியப் பிரதமர் நரேந்திர…

Read More

க.பொ. த. சாதரண தர பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை

க.பொ.த. சாதரண தரப் பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களுக்கு நாளை மறுதினம் நள்ளிரவுடன் தடை விதிக்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் ஜயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி க.பொ.த. சாதரண தரப் பரிட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பா.உ பதவியினை எடுப்பதா? வேண்டாமா ? அமைச்சர் றிஷாத் பதியுதீன்

பாரிஸ் பா.உ.அஸ்வர் பதவி விலகியமையினை தொடர்ந்து ஊடகங்கள் அப்பதவிக்கு அமீர் அலி பா.உ நியமிக்கப்படலாம் என்ற செய்திகளை பரவலாக வெளியிட்டன. இருப்பினும், அ.இ.ம.கா. வின் தவிசாளர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி உறுதியாக “கல்குடா மக்களின் முடிவே எனது முடிவாகும்” – என்று கூறிவிட்டார். இதற்கு மத்தியில் நேற்று 30.11.2014ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சருமான றிஸாத் கல்குடாவுக்கு வருகை தந்தார். நேற்று மாலை மீராவோடையில் அமைத்துள்ள அமீர்…

Read More

மைத்திரியை பலப்படுத்துங்கள்; விரிவுரையாளர்கள் சங்கம் கோரிக்கை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழக தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் பிஷாந்த குணவர்தன, சமய தலங்கள் மற்றும் தொல்பொருள் அரும்பொருட்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம்சுமத்தினார். சமய…

Read More

பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை இன்று கைச்சாத்து

பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது. அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் இன்றைய தினம் இதில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி, உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன. இந்த…

Read More