Headlines

உலகநாடுகள் அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும்!- சந்திரிகா

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் பெரும் வன்முறைகளில் ஈடுபடலாம், எதிரணியினரை அச்சுறுத்தலாம். முன்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது, அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பி தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதை மாத்திரமே உலகநாடுகளால் செய்ய முடியும். அரசாங்கத்திற்கு அவர்கள் நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தலாம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பேன்: மைத்திரிபால சிறிசேன

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடக இயக்கத்துக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, ஊடக சுதந்திரம், தடை நீக்கம், மற்றும் சமூக பொறுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய கோவை ஒன்றை சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர, மைத்திரிபால…

Read More

பிரதமர் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்!- எஸ்.பி. நாவின்ன

பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார். வடமத்திய மாகாண ஊடகவியலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். என்னை விடவும் ஆறு அமைச்சர்கள் பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை மூப்பைக் கொண்டுள்ளனர். பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினையில்லை. திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறித்து எவ்வித கவலையும் கிடையாது. நாட்டின் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களை…

Read More

தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை சிலர் திரிவுபடுத்துகின்றனர் – மைத்திரிபால

தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை திரிவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.சம்பிக்க ரணவக்க எழுதிய ”பாழடைந்த பொருளாதாரம்” எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நேற்று பிட்டகோட்டையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறினார். அவர் தெரிவித்ததாவது; நாம் ஆட்சிக்கு வந்ததும், இந்த நாட்டில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற இடமளிப்பதில்லையென நான் கூட்டமொன்றில் கூறியிருந்தேன். எனினும், தற்போது அந்தக்…

Read More

பாகிஸ்தான்: பலி எண்ணிக்கை 141ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், நுழைந்து, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பள்ளிக்கூடத்தில் 500 மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற…

Read More

வாகரையில் வெங்காய அறுவடை

வாழைச்சேனை நிருபர் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்கிழமை (16) காலை அறுவடை செய்யப்பட்டது. பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் காசிப்பிள்ளை சித்திரவேல் வாகரை பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார், பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்து அறுவடையை ஆரம்பித்து வைத்தனர். திணைக்களங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டியை முன்னிட்டு வாகரை பிரதேச சபையின் வளாகத்தினுள் மரக்கறித் தோட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இம்முறை வெங்காயம் அதிகூடிய விளைச்சலைப் பெற்றுக்…

Read More

முதன்முறையாக முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களின் ஊடகம் (படங்கள் இணைப்பு)

அஷ்ரப் ஏ சமத் இன்று கொழும்பு ஹிங்ஸ்பரி ஹோட்டலில் வைத்து செரண்டிப் பத்திரிகை தொலைக்காட்சி, வானொலி ஆகியன முதன்முதலாக சிறுபான்மை இனத்தின் தனித்துவ ஊடகம் ஒன்று உதயமாக்கப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி, ரேடியோவுக்கு  இதுவரை தனியாக அரச தெலைத்தொடர்பு ஆணைக்குழுவின் ஊடாக தனியானதொரு ‘லைசென்ஸ் இங்கு  வழங்கப்பட்வில்லை. கேபில் ரீ.வியாகவே ஏற்கனவே உள்ள ‘டான் ரீ.வியின் ஊடாகவே  பார்க்கமுடியும். பத்திரிகையும்  இதுவரை அச்சு இயந்திரங்கள் பெறப்படவில்லை. திலங்க சுமதிபாலவின் ‘சுமதி பத்திரிகையின் ஆர்ட்வோக்கை கொடுத்து பதித்து எடுக்க வேண்டும்….

Read More

முஸ்லிம்களின் விமோசனம், எனது உயிரிலும் மேலானது – றிஷாத் பதியுதீன்

இலங்கை முஸ்லிம்களின் விமோசனம் எனது உயிரிலும் மேலானது. இந்த சமூகத்தின் நலன்கருதி எந்த பெரிய பதவிகளை தூக்கி வீசவும், சமூகத்துடன் இரண்டர கலந்து போராடங்களை முன்னெடுக்கவும் நான் தயார் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவா அல்லது மைத்திரியா என்று நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதான் உண்மை நிலவரமாகும். இரு பக்கத்திலும் கடும் போக்காளர்கள் உள்ளனர். இதனால் தீர்மானம் மேற்கொள்வது சிரமமானது. எமது இறுதித் தீர்மானத்தில் தாமதம் ஏற்படலாம். இந்த தாமதமானது மக்களின்…

Read More

வன்செயலை தூண்டிய யூதர்கள் கைது

அரபு மக்களுக்கு எதிரான வன்செயல்களை தூண்டிய சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய போலிஸார் யூத தீவிரவாத குழு ஒன்றின் 10 உறுப்பினர்களை கைது செய்திருக்கிறார்கள். யூதர்களும் அரபுக்களும் ஒன்றாக வாழும் கொள்கையை எதிர்க்கின்ற ”லெகவா” என்னும் குழுவைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். ஜெரூசலத்தில் யூத மற்றும் அரபுச் சிறுவர்கள் ஒன்றாகப் படித்த பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இந்தக் குழுவைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்துள்ளது.

Read More