Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஒஸ்ரியா பயணம்

எ.எச்.எம்.பூமுதீன் கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் இன்று (03/11/2014) அதிகாலை ஒஸ்ரியா பயணமானார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு  செய்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே அமைச்சர் ஒஸ்ரியா பயணமானார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் அழைப்பை ஏற்று சென்றிருக்கும் அமைச்சர், நாளை (04/11/2014) இடம்பெறும் குறித்த மாநாட்டில் இலங்கையின் கைத்தொழில் துறையின் தற்கால செயற்பாடுகள், கைத்தொழில் துறையில் இலங்கை  அடைந்துவரும் முன்னேற்றங்கள்,…

Read More

அடுத்தவருடம் இலவச வாட்ஸ்அப் CALL – இஸ்ரேலின் Viber க்கு பாதிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளதால் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய பிரபலமான வாட்ஸ்அப் 600 மில்லியன்…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையமர்வு காரணமின்றி பகிஷ்கரிக்கப்பட்டது – தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்

எம்.ரீ.எம்.பாரிஸ் சபை உறுப்பினர்களினால் பிராத்திய உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்ப பட்டுள்ள கடிதப்பிரதி இத்துடன் அனுப்பபட்டுள்ளது கடந்த ஓக்டோபர் 30.2014ந் திகதி மு.ப. 10.00 மணியளவில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது பொதுச் சபைக் கூட்டம் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர் அவர்களும்,உறுப்பினர் ஐ.ரீ. அமீஸ்டீன் அவர்களுமே வருகை தந்திருந்தனர் ஏனைய உறுப்பினர்கள் வருகை தராமையால்; பொதுச் சபைக் கூட்டம் அடுத்த…

Read More

சவால்களை முறியடித்து மேலும் வன்னியை அபிவிருத்திக்கு இட்டுச்செல்வேன் – அமைச்சர் ரிசாத்

ஏ.எச்.எம்.பூமுதீன் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நிம்மதியான சந்தோசமான வாழ்வுக்காகவும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதீயுதீன், இச்சவால்களை முறியடித்து முன்னேற அனைவரையும் ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இலவச சாரதி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வில் , பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு…

Read More

அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா – பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்

ஏ.எச்.எம்.பூமுதீன் அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா இன்று 02 புத்தளம் ஹதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன்  பாடசாலை மணவர்ககு பரிசில்களை வழங்குவதையும் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.

Read More

புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா(படங்கள்)

பழுலுல்லாஹ் பர்ஹான் சர்வதேச சிறுலர் தினத்தை முன்னிட்டு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா 31-10-2014 நேற்றுவெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழு ஆகியவற்றின் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்;டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்;புல்லாஹ் கலந்து கொண்டார்….

Read More

பள்ளிவாசல் சுவர் விழுந்து ஒருவர் வபாத், 3 பேர் காயம்

திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாயலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரவித்தனர். இன்று காலை(1) இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாயலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே…

Read More

ஆதரித்து ஏதாவது பிடிங்கிக் கொள்ள மு.கா முயற்சிக்கலாம் அல்லவா?

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 2015 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது.நிபந்தனை அற்ற ஆதரவு என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.கிழக்கு மாகாண சபையில் அரசுடன் மு.கா  செய்து கொண்ட எந்த ஒரு விடயத்தையும் இது வரை காலப் பகுதியில் அரசு  நிறை வேற்றியதாக அறிய முடிய வில்லை. நிலைமை இவ்வாறு இருந்தும் மு.கா இனது போக்கு…

Read More

வரவு-செலவுத் திட்டம் 2015 : 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றபோது. அதற்கு  ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன்படி இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அல்-கிம்மா நிறுவனம் உதவி பதுளையில் மன்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணபணி

எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தையில் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டது. அதன் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்;களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பதுளை மாவட்ட மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும்,அம்மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காவும் அல்-கிம்மா நிறுவனம் நேற்று காலை 6.00மணிக்கு பதுளை நோக்கி பயணித்தது. இனஐக்கியத்தையும்  சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் மேம்படுத்தும் நோக்கில் இம் மனித நேயப்பணிகள்  நிறுவனத்தினால்  முன்னொடுக்கப்பட்டது. நிறுவனத்தின்…

Read More

தர்கா நகர் பதட்ட நிலை.. தற்போதைய நிலைமையின் அப்டேட்.

தர்கா நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றினால் சிறு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. தர்கா நகர் பத்திராஜாகொட பகுதியின் ஊடாக உதைபந்தாட்டம் விளையாடி விட்டு சென்றுகொண்டிருந்த முஸ்லிம் வாலிபர்களுக்கும் சிங்கள வாலிபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பில் முடிந்துள்ளது. அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் வீடு ஒன்றில் இருந்த முஸ்லிம் பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார் அதுதவிர அப்பிரதேச விகாரை மணி தொடர்ச்சியாக அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மின்சாரம் தடைப்படதாகவும் அங்கிருந்து…

Read More

பாலஸ்தீனத்தை தனிநாடாக சுவீடன் அங்கீகரித்தது: இஸ்ரேல் எதிர்ப்பு

பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக சுவீடன் அங்கீகரித்துள்ளது. அதற்கு அண்டை நாடான இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், மேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்கனவே தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளன. பல்கேரியா, சைப்ரஸ், செக்குடியரசு, ஹங்கேரி, மால்டா, போலந்து, ருமேனியா நாடுகளும், ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் அல்லாத ஐஸ்லாந்தும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது சுவீடனும் பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சுவீடன் வெளியுறவுத்துறை…

Read More