Headlines

அமைச்சர் றிஷாத் ஒஸ்ரியாவிலிருந்து பிரான்ஸ் பயணம்

ஊடகப்   பிரிவு ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஒஸ்ரியாவில் இடம்பெற்ற விஷேட மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன், நாளை 6 ஆம் திகதி ஒஸ்ரியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்கின்றார். இலங்கை – பிரான்ஸ் கூட்டு வர்த்தக சம்மேளனம் மற்றும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றும் பொறுட்டே அமைச்சர் றிஷாத் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்கின்றார். குறித்த கலந்துரையாடலின்போது இலங்கை தற்போது அடைந்துவரும் வர்த்தக…

Read More

இலங்கை வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் வேற்றுக்கிரகத்துக்குரியது என உறுதி?

அண்மையில் பொலன்னறுவை வான்பரப்பில் பறந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் வேற்றுக்கிரக பொருட்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. வான் பரப்பு பூராகவும் வெள்ளை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த இந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் அதன் பின் ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஓரிரு இடங்களில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இங்கிலாந்து கார்டிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரா விக்கிரமரசிங்க இது தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தார்.

Read More

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 8 பேர் காயம்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே நேற்று மாலை இந்த மோதல் சம்பவம் பதிவாகியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மோதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சட்டவிரோத ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாம் தயாரில்லை – அனுரகுமார திசாநாயக

தேர்தலை தடுக்க நாம் முயற்சிக்கின்றோமே தவிர அரசாங்கத்தை கவிழ்க்க தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாரில்லை. அரசியல் அமைப்பினையும், சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். அரசியல் யாப்புடன் விளையாட எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார். சந்தர்ப்பம் பார்த்திருக்காது நாட்டில் சட்டத்தினை நிலைநாட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு சகல விதத்திலும் அரசாங்கம் தயார் என தெரிவித்துள்ள நிலையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய…

Read More

வரலாற்று வீரா்களின் வரிசையில், மஹிந்த ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் – ஒமல்பே தேரர்

வரலாற்று வீரா்களின் வரிசையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர்  ஒமல்பே  தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். 30 ஆண்டு காலமாக நீடித்து வந்த போரை ஜனாதிபதி நிறைவுக்குக் கொண்டு வந்தார். கடந்த காலங்களில் ஆட்சி வகித்த ஜனாதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரபாகரனை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்து தேசத்தின் எதிர்காலத்தை…

Read More

பாராளுமன்றில் தடால் – புடால்?

அனுர குமார திசாநாயக்க; இப்படியான ஒரு பதவி தேவையா?? ஒரு தனிப்பட்ட மனிதர் ஒரு மாபெரும் பணத்தொகையை வீணடிக்கும், ஒரு மாபெரும் தொகையை செலவழிக்கும் ஒரு ஆட்சியாளர் நமக்கு தேவையா? இந்த நடப்பாண்டின் கணக்குப்படி ஒரு நாளுக்கான செலவு இருநூற்று அறுபத்து இரண்டு இலட்சங்கள். இதை எப்படி செலவழிப்பார்கள் என்பதை நினைத்து பாருங்கள். ஐயாயிரம் ரூபாய் தாள்களாக மாற்றி சாப்பிடுகின்றார்களோ தெரியாது!!! காலையில் ஐயாயிரம் ரூபாத்தாள் சம்பல், இரவுக்கு சொதி என்று சாப்பிடுவார்களோ தெரியாது!! யோசித்துப்பாருங்கள் இந்தளவுக்கான…

Read More

சகோதரியின் 2 கால்களையும் வெட்டி, ஒரு காலை எடுத்துச்சென்ற சகோதரன்

தனது சகோதரியின் இரு கால்களையும் வாளால் வெட்டி  ஒரு காலை எடுத்துச் சென்ற  கோர சம்பவமொன்று பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான பெண் பல்வேறு வெட்டுக்காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நீண்ட கால குடும்பத்தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. காலை வெட்டிய  சகோதரனும்  அவரது மகனும் தலைமறைவாகியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கலக்கமா மயக்கமா ? தெளிவு பெறுங்கள் என்று….

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் உங்களை விளிக்கிறார் . உங்களைப் பார்த்து கூறிகிறேன் : STAND UP AND BE COUNTED சில நாட்களாக கிழக்கில் முஸ்லிம்கள் யாருக்கு ? என்ற சொல்லை வைத்துக் கொண்டு கையில் பொல்லு ஓன்று மட்டும் இல்லாத குறையாக அறிவியல் ஜானத்தில் பூச்சியம் என்று மக்களால் முத்திரை குத்தப் பட்ட சில அரசியல் வாதிகளின் அம்புலி மாமா கதை…

Read More

மரண தண்டனை கைதிகளை பார்வையிட்ட இந்திய தூதுவர்

இந்திய மீனவர்கள்  ஐவருக்கு  அண்மையில் இலங்கை நீதிமன்றினால் மரணதண்டனை வழங்கி தீர்பளிக்கப் பட்டிருந்தது. குறித்த  மீனவர்களைப் பார்வையிட இன்று வெலிக்கடை  சிறைக்கு   சென்ற  இலங்கைக்கான  இந்திய தூதுவர் Y.K.சிங்ஹா மரண தண்டனை கைதிகளை பார்வையிட்டு அவர்களுடன் உரையாடியபின்  சிறைச்சாலையில் இருந்து வெளியேறியபோது…… பட  உதவி – இந்திய தூதரகம்

Read More

கொஸ்லாந்தை வீதியில் பாரிய வெடிப்பு (Breaking News)

கொஸ்லாந்தை, பூனாகலையூடாக பண்டாரவளைக்கு செல்லும் வீதியில், 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீதியும் கீழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணிகள் 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் நடந்து சென்று பஸ்களில் மாறி தங்களுடைய பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சீனாவின் கேளிக்கை பூங்காவில் 8 வயது சிறுமியை புலி கடித்து கொன்றது

சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு என்ற இடத்தில் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள். பல இடங்களுக்கு சென்ற அவர்கள் அங்கு நடந்த சர்க்கசை பார்க்க சென்றனர். அவர்களுடன் சிறுமியும் சென்று இருந்தாள். அப்போது அங்கு புலிக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி புலி நடமாடிய பகுதிக்குள் தவறி விழுந்தாள். உடனே அவளை அந்த புலி பாய்ந்து கடித்து…

Read More

உயிர்களை பறிகொடுத்த மலையக மக்கள் விடுக்கும் அவசர கோரிக்கை

பதுளை-மீறியபெத்தை இடம்பெற்ற மண்சரிவினைத் தொடர்ந்து தமக்கு பாதுகாப்பான சொந்த வீடு, சொந்த காணி வேண்டும் என்ற குரல் மலையகத்திலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. அண்மையில் கொஸ்லாந்தை மீறியபெத்தை தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்து மலையகத்தின் பல்வேறு தோட்டப்பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், அஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறான அனர்த்தங்களுக்கு இனிமேல் இடமளிக்காமல் மலையக மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையக மக்களும் கோரிக்கை…

Read More