Headlines

முஸ்லிம்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர் – ஹசன் அலி

முஸ்லீம்களின் தனி மாவட்டக் கோரிக்கை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்தது. அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்கைதாகவும் பள்ளிவாசல்களை…

Read More

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் மந்திரியின் கால்

வாகா எல்லைப் பகுதிக்கு இன்று வந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கவனக்குறைவாக இந்திய பகுதிக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவருமான ஷா மஹ்மூத் குரேஷி சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டு, அங்குள்ள பாகிஸ்தான் ரேஞ்சர் படையினரிடம் விசாரித்து அனுதாபம் தெரிவித்தார். பின்னர்,…

Read More

ஐக்கிய முஸ்லிம் கட்சியில் இணையும் சட்டத்தரணி ஏ.எம் முஜீப்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கிழக்கு மாகாணத்தை மையப் படுத்தி பொறியியலாளரும், பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் தலைமையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய முஸ்லிம் கட்சியானது எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எழப் போகும் சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுக்கும் நோக்குடன் பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள், புத்தி ஜீவிகளை தங்களோடு இணைக்கும் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.அந்த வகையில் பிரபல சட்டத்தரணியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும்இமுன்னாள்…

Read More

சர்வதேச ரீதியாக அங்கிகாரம் பெறும் அ.இ.ம.கா வும் அதன் தலைமையும்

ஏ.எச்.எம். பூமுதீன் இலங்கையில் தேசிய அளவில் அகல கால்பதித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிநாமமாக சர்வதேச ரீதியில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கட்சி கால்பதித்துள்ளது. இலங்கையில் – பொதுவாக தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் கட்சியும் கடசியின் தேசியத் தலைமையான அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பெற்று வரும் நல்ல அபிப்ராயத்தை அடுத்தே சர்வதேச ரீதியாக வாழும் இலங்கையர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து கொள்வதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்துள்ளது….

Read More

எயிட்ஸ் – மாணவர்களே அவதானம்!

எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போதே, இந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளிலும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார். இதன்படி உயர் கல்வி…

Read More

இலங்கையின் ஐ.நா. மீதான தாக்குதலுக்கு ட்விட்டர் மூலம் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு ஒத்துழைப்ப வழங்கும் தரப்பினரை மௌனப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்  பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினரை அடக்கி ஒடுக்குவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதான தாக்குதலுக்கு நிகரானது. இதனை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள்; ரணில் குற்றச்சாட்டு

18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு சிறப்பு தேர்ச்சி அவசியம்.இந்த தேர்ச்சி இல்லாத பட்சத்தில் அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. தற்போது அதுதான் நடந்திருக்கிறது. 18ம் திருத்தச்சட்டம் தயாரிக்கப்படும் போது பல்வேறு எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. எனினும் அவற்றில் குழப்ப நிலை உருவாகி இருக்கிறது. இந்த குழப்ப நிலைகள்; விரைவில் வெளியில் வரும் என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

அச்சம் காரணமாக நீதிமன்றத்தை நாடிய மகிந்த; சரத் என் சில்வா

3வது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரியுள்ளார் என பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்க முடியுமா மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்விகளையே அவர் தற்போது எழுப்பியுள்ளதாகவும். சட்ட விளக்கம் கோரப்பட்ட இரண்டு கேள்விகளும் தனிப்பட்ட ரீதியானதே தவிர, நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் கேட்கப்படவில்லை அத்துடன் சட்ட…

Read More

தலாய் லாமாவுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை – சீன அதிகாரிகள்!

சீனாவில் இருந்து நாடு கடத்தப் பட்ட திபேத் புத்த மத ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா மீது ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப் படும் என சீன அரச அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக பீஜிங் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக தலாய் லாமாவுக்கு விசுவாசமாக உள்ள சீன கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர்கள் தண்டிக்க படுவர் என புதன்கிழமை மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சிகளின் உட்துறை கண்காணிப்பகத்தின் தலைவர் யே டொங்சொங் ஆங்கில மொழியிலான கம்யூனிசக்…

Read More

நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியவர்கள் ஏமாற்றடைந்துள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற முன்னமே அதன் பிரதிபலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று புதன்கிழமை பொது அரச உத்தியோகர்களுக்கு மோட்டார் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி…

Read More

நீர்கொழும்பில் பதற்றம்!

நீர்கொழும்பில் இரு மீனவக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மீனவர்கள் இருவர் காயமடைந்தமையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக…

Read More