அழைப்பினை நிராகரிக்காது, ஆழமாக கவனத்தில் எடுப்போம்
தேசிய பிரச்சினைக்கான தீர்வைக்காண்பதற்கு நாம் பல தடவைகள் வௌிப்படுத்திய கண்ணியமான நல்லெண்ணத்தை அரசாங்கம் முறையாக பயன்படுத்த தவறிவிட்டது எனத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தேர்தலுக்கான அறிவிப்பொன்று இன்னமும் வௌியிடப்படாத நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கருத்தை நிராகரிக்காது ஆழமான கவனத்தில் எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிப்பதன் மூலம் அக்கட்சி அனைவரும் ஏறறுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.அந்த…
