பிரதமர் ஆத்திரம் – பாராளுமன்றத்திலிருந்தும் வெளிநடப்பு!
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு பேரவையினரால் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவை எதிர்த்து ஆளுந் தரப்பினரால் பாராளுமன்றத்தின் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் தமது உரையை நிகழ்த்தப் போவதில்லை என்று தனது எதிர்ப்பை சபையில் வெளியிட்ட பிரத மர் டி.எம். ஜயரத்ன தனது ஆசனத்திலிருந்து வெளியேறிச் சென்றார். விவாதத்தில் தமக்குரிய நேரமானது தலைமை ஆசனத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டு விட்டதாக ஆத்திரமடைந்தே பிரதமர் ஜயரத்ன இவ்வாறு சபையை விட்டு…
