Headlines

மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அமீன் – அமைச்சர் றிஷாத் நியமனம் வழங்கி வைப்பு (படங்கள் இணைப்பு)

எ.எச்.எம்.பூமுதீன் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின்( தேசிய உப்புக் கூட்டுத்தாபனம்) புதிய தலைவராக எம்.எம்.அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் இந் நியமனம் இன்று 30ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது. அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் அமீன் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவரும் ஒருவராகும். அவருக்கு இன்று கிடைத்துள்ள இந்தப் பதவியை சிறந்த முறையில் பயன்படுத்த…

Read More

இலங்கைக்கு ஐ.நா கடும் கண்டனம்

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சாட்சியம் அளித்த நபர்களை கைது செய்தமை தொடர்பில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நியமித்த விசாரணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்கும் நபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் இலங்கை அரசிடம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது என அறியமுடிகின்றது. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியம் வழங்கிய நபர் ஒருவர்…

Read More

மண்சரிவால் 10 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட 10 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 03) வரை மூடப்படும். தற்போது இடம்பெற்றுள்ள மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காகவே பாடசாலைகள் மூடப்படுமென பண்டாரவளை வலய கல்வி பணிப்பாளர் அரியதாஸ ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவினால் வழங்கப்பட்ட பணிப்புரையின் கீழ் ப+ நாகல பாடசாலைகள், மீறியாபெரா வித்தியாலயம், ஆனோல்ட் வித்தியாலயம், நகேடிய வித்தியாலயம், சிறி…

Read More

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவி

கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தகவல் அறிந்துள்ளதோடு உதவி அறிவிப்பையும் விடுத்துள்ளார். இந்தநிலையில் இன்று பெரும்பாலும் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.

Read More

அனர்த்தத்தை பார்வையிட விரைந்தார் மகிந்த (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊவா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீறியபெந்த தோட்டத்தை பார்வையிடவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் கொஸ்லாந்தை பகுதியைச் சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

மஹிந்த பொன்சேகாவுக்கு அநியாயம் செய்துள்ளார்; கரு ஜயசூரிய

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பொன்சேகாவுக்கு அநியாயம் செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ராஜபக்ஷவின் அரசாங்கம் பொன்சேகாவுக்கு ஏராளம் அநியாயங்களைச் செய்துள்ளது. அவரது குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டே நாளில் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும். அவரது குடியுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் திருப்பியளிக்கப்படும். நாட்டிற்கு பெரும் ஆபத்தாக இருந்த பயங்கரவாதத்தை முறியடித்தவர் சரத் பொன்சேகா. அவருக்கு அதற்கான…

Read More

இலங்கை தொடர்பில் மற்றொரு ஐ.நா அறிக்கை இன்று

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களின் அமுலாக்கம் குறித்து ஆராய்வதற்கான கூட்டத்தொடரின்போது, சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் இலங்கை தொடர்பான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன். இலங்கை தொடர்பில் கடந்த 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகளின் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றே இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தொடரும் மீட்புப்பணி ; எஞ்சியோரின் நிலை?

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவில் சுமார் 190 பேர் இன்னும் சிக்கி  காணாமல் போயுள்ளனர் என்று புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை சுமார் 300 பேர் வரை காணாமல் போயுள்ளனர். மீரியபெத்தையில் பகுதிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விஜயம் மேற்கொண்டுள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 05 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அபாய நிலைமை காணப்படுவதாக நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார். குறித்த மாவட்டங்களில் நேற்று மாலை விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று மாலை வரை அமுலில் இருக்குமெனவும், அதனை நீடிப்பது அல்லது நீக்குவது தொடர்பில் மாலை தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர்…

Read More

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு கடும்போக்கு சிங்கள அமைப்புகள் ஆதரவு

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை கொழும்பு, பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுபல சேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய, ராவணா பலய, பிக்சு பெரமுண , தர்ம விஜய பதனம, ஹெல ராவய உள்ளிட்ட சுமார் 53 அமைப்புகள் கலந்து கொண்டிருந்தன. சிங்களவர்களின் எதிர்காலம் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் மட்டுமே பாதுகாக்கப்படும். சிங்கள பௌத்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஒரே தேசியத் தலைவர் அவர்தான். மேலும்…

Read More

மறைந்து போன மலையக மக்கள்!

கலாபம் தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில்  தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்களும்,  மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள். இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே…

Read More

மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும்: மேர்வின் சில்வா

வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அனைத்து மக்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டே வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பாரியளவில் நலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மலர்களை நோகடிக்காது தேன் எடுப்பதனைப் போன்று மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும். நாட்டின் சகல பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்படும் தொகையை விடவும் அதிகளவு…

Read More