Headlines

அத்துரலிய ரத்ன தேரருக்கு சரத் பொன்சேகா அழைப்பு




அரசாங்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருடன் இணைந்து பயணிப்பதற்கு என்னுடைய கட்சி தயாராக இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு நான் நாட்டிலிருந்து வெளியேற போவதாக சிலர் கூறுகின்றனர். நான், நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன். என்றோ ஒருநாள் நான் மரணித்தால் இந்த நாட்டிலேயே மரணிப்பேன். நான் இன்னும் 10 வருடங்களுக்கு அரசியல் செய்வேன். ஆகையால் நான், நாட்டைவிட்டுவெளியேறமாட்டேன்.

நாட்டு மக்களின் நலனுக்காக எனது கடைசி வியர்வைதுளி, இரத்த துளி இருக்கும் வரை அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

அத்துரலிய ரத்ன தேரரினால் 19ஆவது அரசியல்திருத்த நகல் வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் எங்களுடைய பிரதிநிதியொருவரும் பங்கேற்றார். எங்களுடைய கொள்கைக்கும் ரத்ன தேரரின் யோசனைகளுக்கும் இடையில் நிறையவே ஒற்றுமை இருக்கின்றன.

ரத்ன தேரர், அரசாங்கத்திலிருந்து வெளியேறி, அரசாங்கத்தை விமர்சித்தால் அவருடைய பயணத்தில் இணைந்துகொண்டு எம்மால் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *