Headlines

15 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த 6 இளைஞர்கள் கைது – களுத்துறையில் சம்பவம்

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தொடங்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியநபர்கள் அதனை ஒளிப்பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர்.   மாணவி தனது காதலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை காட்டி மாணவியை அச்சுறுத்தியுள்ள இளைஞர்கள் சிலர், அவரை தமது நண்பர்களுடன் இணைந்து விடுதி ஒன்றுக்கு அழைத்துச்…

Read More

சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அனுசரணையில் 150 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

எ.எச்.எம்.பூமுதீன் சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அனுசரணையில் எஸ்.எம்.எம் ஹூஸைன் நம்பிக்கை நிதியம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கவுள்ளது. கா.பொ.த சாதரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வறிய மாணவர்களுக்கு இப்புலமைப் பரீசில் வழங்கப்படவுள்ளது. இம்முறை 150 மாணவர்கள் இப்புலமைப் பரீசிலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாசார நிலைய மர்லின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான…

Read More

வடபகுதி செல்லும் வெளிநாட்டவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

BBC Tamil தேசிய பாதுகாப்புக்கு சிலரால் குந்தகம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கையின் வடபகுதிக்குச் செல்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்று வர வேண்டும் என்ற புதிய விதிமுறை, வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அங்குள்ள படையதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வந்து, வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டவர்கள் பலர், முன் அனுமதி இல்லாத காரணத்தினால் கடந்த சில தினங்களாக ஓமந்தை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, அவர்கள்…

Read More

அத்துரலிய ரத்ன தேரருக்கு சரத் பொன்சேகா அழைப்பு

அரசாங்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருடன் இணைந்து பயணிப்பதற்கு என்னுடைய கட்சி தயாராக இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு நான் நாட்டிலிருந்து வெளியேற போவதாக சிலர் கூறுகின்றனர். நான், நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன். என்றோ ஒருநாள் நான் மரணித்தால் இந்த நாட்டிலேயே மரணிப்பேன். நான் இன்னும் 10 வருடங்களுக்கு அரசியல் செய்வேன். ஆகையால் நான், நாட்டைவிட்டுவெளியேறமாட்டேன். நாட்டு மக்களின் நலனுக்காக எனது கடைசி…

Read More

உலக உணவு தினம் இன்று

உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி  “குடும்ப விவசாயம் : உலகுக்கு உணவளிப்போம், பூமியை காப்போம்’ என்பது இந்த ஆண்டின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா சபை. உலகில்…

Read More

ஊவா மாகாண அமைச்சர்கள் இன்று பதவியேற்பு (அமைச்சர்கள் – அமைச்சுக்கள் விபரங்கள் இணைப்பு )

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள் – அமைச்சுக்கள் விபரம் வருமாறு – சசீந்ர ராஜபக்ஷ – நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி, காணி, கலாசார, சமூகநல, கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கட்டுமாண அமைச்சர். செந்தில்…

Read More

நாடு கடத்தப்பட்டவர்கள் புலானாய்வு துறையினரிடம் ஒப்படைப்பு

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரிவித்து மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டவர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை கைது செய்த கட்டுநாயக்க பொலிசார் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான சேகர் குசைன் வழங்கிய தகவலுக்கு அமைய, மொஹமட் குசையின், மொஹமட் சுலைமான்…

Read More

மட்டக்களப்பை தத்தெடுக்கப்போகும் கனடா நாட்டு அரசியல்வாதி பகிரங்க அறிவிப்பு

கனடாவின் தெற்கு ஒன்றாரியோ மாநில மிச்சிச்சுகா (Mississauga) மாநகர சபை மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மாநகர மேயர் பதவிக்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் போனி ச்ரோம்பிக் (Bonni Crombie) இத்தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பை தான் தத்தெடுக்கப்போவதாக வாக்குறுதியளித்துள்ளார். மிச்சிச்சுகா நகரில் இலங்கைத் தமிழர்கள் பலர் செறிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரங்களின் போதே மட்டக்களப்பைத் தத்தெடுப்பது என்ற வாக்குறுதி அவரால் வழங்கப்பட்டது….

Read More

மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்க G – 20

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கும் பொருட்டு G-20 (Group 20) எனும் புதிய அணியொன்றை உருவாக்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் தலைமைத்துவச் சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். கரு ஜெயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, தலதா அதுகோரள, ஜோசப் மைக்கல் பெரேரா, பாலித ரங்க பண்டார, ஜோன் அமரதுங்க…

Read More

தர்பியா நிகழ்ச்சிக்கான அழைப்பிதல்

அஸ்ஹர் ஸீலானி அஸ்ஸலாமு அலைகும் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (17.10.2014) நடபெறும் தர்பியா நிகழ்ச்சிக்கான அழைப்பிதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் தொடர்பில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். அன்புடன் அஸ்ஹர் ஸீலானி

Read More

25 வருடங்களுக்குப் பின் வழங்கப்பட்ட பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம்

அஷ்ரப் ஏ சமத் கொழும்பு புதுக்கடையில் உள்ள அப்துல் ஹமீட் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் உள்ள பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம் 25 வருடங்களுக்குப்பின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்  நேற்று பள்ளிவாசல் தலைவரிடம் கையளிக்கப்பட்டது. பள்ளிவாசல் தலைவர் முஹமட் ஜவாஹிரீடம் அமைச்சர் விமல் வீரவன்சவினால் உறுதிப்பத்திரம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, கெழும்பு மாநகர சபை உறுப்பிணர் முஹம்மட் முசம்மில் ஆகியோறும் கலந்த கொண்டனர். நேற்று இவ் வீடமைப்புத்திட்டம் 32 வருடங்களின் பின் 13.5…

Read More