Headlines

இலங்கையில் கூலி வேலை செய்யும் இந்தியர்கள்




சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்துள்ள இந்தியா்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விவசாய கூலி வேலைகளில் ஈடுபடுவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் மூன்று மாத சுற்றுலா வீசாவில் இலங்கை வரும் இந்தியர்கள், துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறியே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கூலி வேலையிலும் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அண்மித்த பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து கூலிகளாக வேலை செய்து வருவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

புலனாய்வுப் பொலிசாரின் உதவியுடன் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *