Headlines

உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று

உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது.  இதற்காக யாழிலும் விசேட நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் கைதடி விழிப்புலன் இழந்தோர் சங்கத்தில்  இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். 1969 ஆம் ஆண்டில் உலக வெள்ளை பிரம்பு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 45 ஆவது முறையாக இந்த வெள்ளைப் பிரம்பு தினம் இன்று…

Read More

இலங்கையில் கூலி வேலை செய்யும் இந்தியர்கள்

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்துள்ள இந்தியா்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விவசாய கூலி வேலைகளில் ஈடுபடுவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் மூன்று மாத சுற்றுலா வீசாவில் இலங்கை வரும் இந்தியர்கள், துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறியே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கூலி வேலையிலும் ஈடுபட தொடங்கிவிட்டனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அண்மித்த பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து கூலிகளாக வேலை செய்து வருவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது….

Read More

இலங்கை ஹஜ் யாத்திரிகர் மரணம்

ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காக மக்கா சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தை சுட்டிக்காட்டி, அராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவரது மரணம் இயற்கையானது எனவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட இலங்கையர்கள் சிலருடன் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானமொன்று, கடந்த வெள்ளிக்கிழமை றியாத்திலுள்ள கிங் காலிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை ஹஜ் யாத்திரிகர் ஒருவர் திடீர்…

Read More

அமைச்சர் றிஷாதின் அயராத முயற்சியின் மற்றுமோர் பெறுபேறாக…… 24கோடி ரூபா செலவில் மன்னார் கச்சேரிக்கு நான்கு மாடிக் கட்டிடத் தொகுதி (படங்கள் இணைப்பு)

ஊடகபிரிவு அமைச்சர்   றிஷாதின்   அயராத முயற்சியின் மற்றுமோர் பெறுபேறாக  வெற்றிடமாக இருந்த மன்னார் கச்சேரி  கட்டிடத் தொகுதி  24 கோடி ரூபா செலவில்  கட்டப் படுகின்றது. இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 2014.10.14 நடைபெற்றது… ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒதுக்கப்பட்ட   24 கோடி ரூபா   நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.செனவிரத்தின, அரச நிர்வாக…

Read More

கோட்டாவால் வெளிச்சவீடு திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு )

இராணுவ ஊடகப்பிரிவு காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்தார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் அழைப்பை ஏற்று இருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச வரலாற்று முக்கியம் வாய்ந்த காங்கேசன்துறை வெளிச்ச வீட்டினை நேற்று திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டதுடன்…

Read More

எபோலாவைக் கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவுநர் உதவி

கொடிய உயிர்க்கொல்லி நோயான எபோலாவை கட்டுபடுத்த போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவுநர் மார்க் ஷுக்கர் பெர்க் ரூ.150 கோடி நிதி உதிவி அளிக்க போவதாக அறிவித்துள்ளார். எபோலா நோய் தாக்கி மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்ழள்ளனர். 9,000 பேர் அந் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் எபோலா நோய் தாக்கி மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான கினியா, லைபீரியா,…

Read More

24 வருடங்களின் பின் யாழ். வந்த தபால் ரயில்

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான தபால் புகையிரத சேவை  24 வருடங்களின் பின்னர் இன்று காலை 7.25 மணியளவில் யாழ். பிரதான புகையித நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த சேவையினை கொண்டாடும் முகமாக தற்பொழுது யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகள் யாழ். பிரதான தபாலகத்திற்கு வீதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.

Read More

மூன்று மாதங்களுக்குப் பின் அளுத்கமை (சிறப்புக் கட்டுரை)

டிரன் குமார பங்ககம ஆரச்சி நாம் புதிய நிலைமையை அறிந்து கொள்வதற்கு அளுத்கமைக்கு சென்றோம். அளுத்கமை – பேருவளை தீ எரிந்து, அணைந்து மூன்று மாதங்கள் கழிவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் நடுப்பகுதியில் எரிந்த இனவாத தீயின் இருண்ட நினைவு முழுமையாகவே அணைந்துள்ளதா? அதனை எதிர்கொண்ட மனிதர்கள் முன்னரைப்போன்று பழக்கப்பட்ட நிலையில் காலம் கழிக்கின்றனரா? அனைத்து நிலைவரங்களும் அளுத்கமைக்குள் பிரவேசித்து பார்க்க வேண்டியவைகளாகும். அளுத்கமை இன்னமும் இருண்டு காணப்படுகிறது. மூதேசிகளான, பயங்கரமான கடந்தகால பேய்கள் எல்லா இடங்களிலும்….

Read More

சோபித தேரர் – முஸ்லிம் காங்கிரஸ்; பேசத்தயார்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிறைவேற்று முறைமையினை எதிர்க்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் கோட்டை நாக  விகாரையின் நகராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் களமிறங்கியுள்ளார். சோபித தேரர் அழைப்பு விடுத்தால் பேசத்தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு…

Read More

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலையேற்படும் – முன்னாள் பிரதமரின் மகன்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகளினால் வெற்றியீட்ட முடியும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. ஆளும் கட்சியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாடுகள் உறுதியாவதனை மாற்றியமைத்தே அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல வேண்டும். எம்மில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….

Read More

புத்தளம் சாஹிரா கல்லூரியின் “பசுமைப்புரட்சி”

HITYP புத்தளம் சாஹிரா கல்லூரியின் 2006 O / L  மற்றும் 2009 A / L மூலம் கல்வி கற்று வெளியேறிய  மாணவர்கள் மூலம் உறவக்கப்பட்ட HITYP  அமைப்பினால் எதிர் வரும் 17/10/2014 ஆம் திகதி “பசுமைப்புரட்சி ” என்ற தொனியில் சாஹிரா கல்லூரியின் 70 வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக HITYP  அமைபினரால் கல்லூரியின் மைதான வளாகத்தில் மரம் நாடும் நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது . ” மர நடுகையில் ஆரம்பித்து ,…

Read More

ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடிந்தளவு பாடுபடுவேன் – ரதன தேரர் எச்சரிக்கை

இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார். இதனை எனது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் ஆதரித்து வாக்களித்து வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அதுவரை செயல்பாட்டில் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான 17 வது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டன. நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள்…

Read More