Headlines

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, கியூபா, வெனிசூலா நாடுகள் களத்தில் குதிப்பு

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை விசாரணைகள் மூலமாக இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் இந்த விசாரணைக்கு ஐ.நா மனித…

Read More

முஸ்லிம்களை என் சொந்த சகோதரர் போல நடத்துவேன் – நியூயோர்கில் மஹிந்த ராஜபக்ஸ

முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஐயாட் அமீன் மதானியை இன்று 25-09-2014  சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடைநடுவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளராக மதானி நியமிக்கப்பட்டமையின் ஊடாக, இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிரான…

Read More

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

அரபு நாடுகள் அனைத்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதம் இல்லாத மண்டலம் உருவாக்கப்படவேண்டும் என்று உலக நாடுகள் முயற்சித்துவருகின்றன. இஸ்ரேலில் செயல்பட்டுவரும் யூத அரசு பெருமளவில் அணு சக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கருதப்படும்போது இந்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்த அந்த நாடு மறுத்துவருகின்றது.  சென்ற ஆண்டு நடைபெற்ற ஐ.நா அணுசக்தி வருடாந்திர மாநாட்டில் இஸ்ரேலின் அணு ஆயுதக் குவிப்பு பற்றிய ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியில்…

Read More

தெஹிவளை மிருககாட்சிசாலை + பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலவசமாக போகலாம்..!

ஒக்டோபர் 01ம் திகதி வரும் உலக சிறுவர் தினம், முதியோர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை விலங்குகள் சரணாலயம் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் என்பவற்றில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 12 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கும் அதிகமான முதியவர்களுக்காக இந்த விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மேற்கூறிய வயதுடையோர் தெஹிவளை விலங்குகள் சரணாலயம் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலவசமாக உள்நுழைய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட ஹமாஸ் வீரர்கள் புகழின் உச்சத்தில்..!

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காசா பகுதியின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஏராளமான உயிர்ப்பலியுடன் 50 நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் அந்தப்பகுதியையே மிகவும் சீரழித்துள்ளது. இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட ஹமாஸ் வீரர்கள் தற்போது புகழின் உச்சத்தில் இருக்க, அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாசின் அரசியல் செல்வாக்கோ மிகவும் சரிந்துள்ளது. அமெரிக்காவை மத்தியஸ்தராகக் கொண்டு இஸ்ரேலுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு புதிய பாலஸ்தீன அரசை…

Read More

ISIS விவகாரத்தில் வெற்றியை விட, அமைதியை தான் அமெரிக்கா விரும்புகிறது – ஒபாமா

ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.வாதிகளின் கொடூர செயல் கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கூட்டத்தினை துவக்கி வைத்து அதிபர் ஒபாமா பேசினார். அவர் பேசியதாவது, ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.,மற்றும் அல்குவைதா போன்ற வாதிகளின் கொடூர செயல் மனதிற்கு கவலையளிக்கிறது. புற்றுநோய் போன்றது பயங்கரவாத செயல்களும், பயங்கரவாத அமைப்புகளும் தான் . இவை உலகத்திற்கு பேரழிவை தரக்கூடியது. இவர்களால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களை ஒழித்துக்கட்ட சர்வதேச நாடுகளின்…

Read More

இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு

ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதியா மண்டபத்தில் நடைபெறும் பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், சரீஆ கவுன்சில், மேமன் ஹனபி பள்ளி வாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் தக்கியா, ஸாவியாக்களின் நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபை – முஸ்லிம்களின் ஒத்துழைப்பு கோரும் சம்பந்தன்

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

Read More

பௌத்த அரசை நிர்மாணிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது – பொதுபல சேனா

பௌத்த அரசை அமைப்பதற்காக நேரம் நெருங்கியுள்ளது. பௌத்த கொள்கைக்கமைய இலங்கையில் சிங்கள பௌத்த மக்களின் ஒத்துழைப்பில் அரசாங்கம் பௌத்த அரசொன்றை அமைக்காவிடின் அப்பொறுப்பை பொதுபலசேனா நிறைவேற்றுமென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். கிருலப்பனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பொதுபலசேனா அமைப்பின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பொது மாநாடொன்று நடைபெறவுள்ளது….

Read More

பருத்தித்துறையில் 1000 கிலோ ஆனைத்திருக்கையை பிடித்த நீர்கொழும்பு மீனவர்கள்

முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வலை வீசிய போது, மிகவும் அரிதான வகையிலான ஆனைத்திருக்கை அகப்பட்டுள்ளது. மீனவர்கள் தமது படகை பருத்தித்துறை இறங்குதுறையில் நிறுத்தி ஆனைத்திருக்கையை துண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அரிதான வகை திருக்கை மீனான ஆனைத்…

Read More

கல்முனை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் தாகமொன்று தணிகிறது…!

(டாக்டர் என். ஆரிப்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு கரையோரப் பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டதுமாகும். நீண்ட காலக்குறைபாடு இத்தகைய பிரதேசத்தில் இதுவரை ஜனாஸாக்களை அரச, தனியார் வைத்தியசாலைகளில் இருந்து எடுத்து வருவதற்கான பிரத்தியேகமான வாகனங்கள் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்து வந்தது. முன்னேற்றம் கண்ட இந்தப் பிரதேசத்தில் வாகனங்கள் மலிந்தே காணப்பட்டாலும், ஜனாஸாக்களை தமது வாகனங்களில்…

Read More

சிங்கப்பூரில் தங்கம் வழங்கும் ATM

ஏ.டி.எம். என்றாலே நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தேவைக்கேற்ப எடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரம் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் சிங்கப்பூரில் தற்போது புதிதாக இரண்டு ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பணத்திற்குப் பதிலாக ஜொலிக்கும் தங்கம் வெளிவருகிறது. சிங்கப்பூரில் உள்ள வேர்ல்டு சென்டோசா அண்டு மரியான பே சாண்ட் ரிசார்ட்டில் இரண்டு ஏ.டி.ஏம். மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த சுவிஸ் நகை சுத்திகரிப்பாளர்களால் சுத்தம் செய்யப்பட்ட தங்கத்தை இந்த இரண்டு ஏ.டி.எம். மையங்களும்…

Read More