Headlines

இலங்கையின் நடவடிக்கையால் ஐ.நா கவலை

புகழிடக் கோரிக்கையாளர்களை இலங்கை திருப்பியனுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.இலங்கையில் அரசியல் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவதாக, புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஐநா ஆணையாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அவ் அறிக்கையில் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 62 பாகிஸ்தானியர்கள் மற்றும் மூன்று ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இவர்களில் சுமார் 40 பேரை திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவம்…

Read More

சிதைக்கப்பட்ட செந்தாமரை சீமா..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் என்ற கிராமத்தில் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பாத்திமா சீமா சோதரியின் நினைவாக எழுதப்பட்ட கவிதை. சிதைக்கப்பட்ட செந்தாமரை சீமா..!   ஆத்தோரம் மடுத்தோண்டி அதில் ஐரி மீன்களை ஓடவிட்டு பிடித்து விளையாடிய பிஞ்சு மகள் சீமா..! துள்ளி விளையாடும் உன்னை கயவன் கிள்ளி எறிந்த செய்தி காது வழியாகச் சென்று கண்கள் வழியாக வெளியே வந்தது. உன் பால் வடியும் முகம் கண்டுமா இந்தப் பாதகன் தேசமாக்கினாhன் உன்னை…..

Read More

தமிழகத்தில் இரு மாணவிகள் மீது அமில வீச்சு

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தில் உள்ள சின்ன பூலாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த மீனா, அங்காள ஈஸ்வரி ஆகிய மாணவிகள் இரண்டு பேரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் படித்துவந்தனர். நேற்று அவர்கள் கல்லூரியிலிருந்து வேறு சில மாணவிகளுடன் சேர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இந்த இரண்டு மாணவிகள் மீதும் அமிலத்தை…

Read More

திலகரட்ன டில்ஷானுக்கு பதிலாக, அவரது தம்பி களம் இறங்குகிறார்..!

T 20 யில்  டில்ஷானுக்கு பதிலாக அவரது தம்பி சம்பத் களமிறங்குகிறார். இந்தியாவில்  நடைபெறவுள்ள செம்பியன் லீக் T20 போட்டிகளின் தகுதிகான் போட்டி  நாளை ஆரம்பமாகவுள்ளது. இதில் திலகரட்ன டில்ஷானுக்கு பதிலாக அவரது தம்பியான திலகரட்ன சம்பத்தை களமிறக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஆளுநர் சந்திரசிறி ஒருதொகுதி நூல்கள் அன்பளிப்பு

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.  யாழ் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இந்நூல்களை ஒஸ்மானியாக் கல்லூரி நிர்வாகத்திடம் 12-09-2014 வெள்ளிக்கிழமை கையளித்தார்.

Read More

டேவிட் கேமரூன் – பராக் ஒபாமாவின் ரத்தம் சிந்தப்படும்; ISIS

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும்   ‘இஸ்லாமிக் ஸ்டேட், ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த இயக்கத்தில் சேருவதற்கென்றே பல வெளிநாட்டினர் ’உம்ரா’ செய்வதாக விசா…

Read More

ஐ.நா. புதிய ஆணையரைச் சந்திக்க ஜோர்தான் தூதரை நாடுகிறது அரசு

ஐ.நா. மனித உரிமைகள் பேர வையின் புதிய ஆணையாளரான ஜோர்தானின் செய்யத் அல் ஹுஸைனை சந்தித்துப் பேச்சு நடத்து வதற்கு இலங்கைக்கான ஜோர்தான் நாட்டுத் தூதுவரின் உதவியை கொழும்பு நாடியுள்ளது என அறியமுடிகின்றது. இதற்காகத் தூதனுப்பும் பணியில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை அரச தலைமை களமிறக்கி பேச்சுக்கான நடவடிக்கைகளை திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றது என்றும் தெரியவருகின்றது. மேற்படி முஸ்லிம் அமைச்சருக்கும், ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரான அஸன் மெஹ்மூட் மொஹமட் அல் ஜவாமிக்கும் இடையில் உள்ள நட்புறவை அடிப்படையாகக்…

Read More

யாழில் கடந்த வாரம் 240 பேர் பொலிஸாரால் கைது

 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 240 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்  முற்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Read More

மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்களின் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும். மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்யிடுவது குறித்து உச்ச நீதமன்றில் சட்ட விளக்கம் அளிக்கும் போது, மக்களின் கருத்து கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே தமது நிலைப்பாடு,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

Read More

இலங்கை தொடர்பில் பான் கீ மூன் கவலை

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பிலேயே இந்த கூட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் அதற்கு இலங்கை இன்னும் உரிய பதிலை அளிக்கவில்லை என்று பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் இன்றைய நிகழ்வின்போது குறிப்பிட்டார். ஐக்கிய…

Read More

ஐ.நா படையில் இலங்கை படையினர் இணைப்பு இன்னர் சிட்டிபிரஸ் கவலை

இலங்கைப் படையினரை ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ளமைதொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம்  தொடர்பில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறன. எனினும், ஐ.நாவின் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் இணைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அவசர ஹெலிக்கொப்டர் சேவையை நடத்தும் முக்கிய பொறுப்பும் படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி…

Read More

பிரதம செயலாளர் யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை

வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.என்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தினால்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதம செயலாளர்ஆளுநரை பின்பற்றுபவரா அல்லது முதலமைச்சரை பின்பற்றுபவரா? என்று ஆளுநரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பிரதம செயலாளர் யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.அவருக்கு மாகாணத்துக்குரிய நிதிப் பொறுப்பே வழங்கப்பட்டுள்ளது.நிதியமைச்சின் செயலாளரின் அதிகாரமே பிரதம செயலாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.எனவே அவர் யாருக்கும் கட்டுப்பட்டு…

Read More