Headlines

ஜேர்மனிலிருந்து தருவிக்கப்பட்ட துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்ட லசந்த, தாஜுடீன்

சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தம் வெளியிடாத துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஸ்பிரிங் ஒன்றினால் வெளியாகும் தோட்டாவை கொண்ட சத்தம் வெளியிடப்படாத துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொலை தொடர்பில் காணப்பட்ட இருவேறு மருத்துவ கருத்து தொடர்பில் உண்மை தகவலை பெற்றுக் கொள்வதற்காக லசந்த விக்ரமதுங்கவின் சடலம் எதிர்வரும்…

Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சமிந்த பெரேரா ஆகிய இருவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீதிக்கப்பட்டுள்ளது. பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடரபுடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவ்விருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,…

Read More

மர்­மங்­கள் வெளிவர கனடாவுக்கு போன, தாஜுத்தீனின் படு­கொலை காட்­சிகளில் ஏமாற்றம்

-விடிவெள்ளி MFM.Fazeer- பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்பில் மர்­மங்­களைத் துலக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­பட்டு கன­டா­வுக்கு மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அனுப்­பப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்­சிகள் ஊடாக தெளி­வான எந்த முடி­வுக்கும் வர­மு­டி­யாது என பிரிடிஷ் கொலம்­பியா ஆய்வு நிறு­வனம் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறி­வித்­துள்­ளது. குறித்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் பயணிக்கும் வாகனங்களின் இலக்கங்களையோ அல்லது அதனுள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அல்லது நபர்கள் யார் என்பதையோ தெளிவாகக் கண்டறிய…

Read More

ஜனாதிபதி செயலகத்திலிருந்து சென்ற அழைப்புகள் குறித்து விசாரணை

றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினம், நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் மற்றும் இன்னும் சில அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் சில வந்துள்ளன என்று நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேற்கண்ட விடயத்தை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.  இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து உள்வந்த தொலைபேசி…

Read More

தாஜூடின் வழக்கு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

றக்பி வீரர் வசீம் தாஜூடின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

தாஜூடின் கொலை வழக்கு : சீ.சி.டி.வி ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்பிப்பு!

பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கிடைக்கப் பெற்ற சீ.சி.டி.வி( CCTV) ஆதாரங்களில் இருந்து 10 டி.வி.டிகள் (DVD) மற்றும் சி.டி(CD) பிரதிகள் கொழும்பு மேலதிக நீதவானிடம் பொலிஸார் நேற்று கையளித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி நாரஹென்பிட்டிய சந்தியில் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து இந்த சீ.சி.டி.வி (CCTV) ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் சீ.சி.டி.வி( CCTV) பிரிவிற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி டி.ஜி.கம்லத்திடம் இதற்கான மூல ஆதாரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்…

Read More

அனுர சேனாநாயக்க பிணைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை வழங்குமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ்  அனுர சேனாநாயக்கவின் பிணை மனுவினை நிராகரித்ததை  தொடர்ந்து அதனை மேன்முறையீடு செய்யுமாறு கோரியே குறித்த மனுவினை உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியொர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை…

Read More

ஹெந்தவிதாரண, ரணவீரவின் நடவடிக்கைகளில் சந்தேகம்

முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் தற்போதைய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ்அ த்தியட்சகருமான டி.ஆர்.எல்.ரணவீர, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே…

Read More

வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த: அனுரவை சந்தித்தார்

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். கொஸ்கம சாலாவ…

Read More

அனுர சேனநாயக்கவிடம் தீவிர விசாரணை

– எம்.எப்.எம்.பஸீர் – பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில்  மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அனுர சேனநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினர் நேற்று (19) இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம்  முதல் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விசாரணை  செய்யும் நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் கீழான சிறப்புக்…

Read More