துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு
ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதன்காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறுகிறது. ரஷியா, விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று துருக்கியின் கூற்றை மறுத்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானி முராக்தின் பேசுகையில், துருக்கி வான் எல்லையை விமானம்…
