Headlines

புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் : ஜனாதிபதி

எதிர்காலத்தில்இடம்பெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள்நேயக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றிபெறச் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நேற்று பிற்பகல் திறந்துவைத்த போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு…

Read More

சு.கட்சிற்கு இன்றுடன் 65 வருடங்கள் பூர்த்தி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(02) 65 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவினால், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, புதிய அரசியல் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. உலகில் முதல் பெண் பிரதமரும், உலகில் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இக்கட்சியிலிருந்து உருவாகினர். இன்றைய நிறைவு தினத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீ ல.சு.கட்சியினால் நாளை(04) குருணாகலையில் பெரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

Read More