Headlines

சிங்கள ராவய அமைப்பின் செயலாளருக்கும் விளக்கமறியல்

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்த தினத்தில் (26), அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்திய சந்தேக நபர்களான பிக்குகள் இருவர் நேற்று (01) ஹோமாகம பொலிஸில் சரணடைந்தனர்.   குறித்த இருவரில், சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரரும் ஒருவராவார்.குறித்த இருவரையும் வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

ஆபாச தளங்களுக்கு தடை விதிக்கக் கோரி கையெழுத்து வேட்டை

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்கு தடை விதித்து, அந்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் மார்க்கங்களை தடை செய்யுமாறு கோரி கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது. கையெழுத்து வேட்டை இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. ஆலோசனை மற்றும் நல்லிணக்க சபை ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கையொப்பம் திரட்டும் நடவடிக்கை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகங்களில் அதிகரிப்பு மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு, பாலியல் உணர்வுகளை தூண்டும்…

Read More